உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் - த்ரிஷா, எம்ஜிஆர் - ஜெயலலிதா : ஒப்பிட்டு பேசி சர்ச்சையை கிளப்பிய சுசித்ரா

விஜய் - த்ரிஷா, எம்ஜிஆர் - ஜெயலலிதா : ஒப்பிட்டு பேசி சர்ச்சையை கிளப்பிய சுசித்ரா

சென்னை : நடிகர் விஜய் உடன் த்ரிஷா வெளியிட்ட போட்டோவை வைத்து பாடகி சுசித்ரா பேசிய வீடியோ சர்ச்சையாகி உள்ளது.நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலிலும் பயணிக்க தொடங்கி உள்ளார். சமீபத்தில் அவருடைய பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பல சினிமா பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். ஆனால், நடிகை த்ரிஷா வாழ்த்து தெரிவித்து பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.ஒரு லிப்ட்டில் விஜய், த்ரிஷா இருவரும் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து த்ரிஷா வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்த புகைப்படத்தை பலரும் 'டீகோட்' செய்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்தனர். அதில் உண்மை எது, பொய் எது என்பது விஜய், த்ரிஷா இருவருக்கும் மட்டுமே தெரியும்.இந்நிலையில் பின்னணிப் பாடகியான சுசித்ரா சமீபத்தில் பகிர்ந்த ஒரு வீடியோவில் த்ரிஷாவைத் திட்டியும், விஜய்க்கு ஆலோசனை சொல்லியும் உள்ளார். மேலும் எம்ஜிஆர் - ஜெயலலிதாவையும் ஒப்பிட்டு பேசி சர்ச்சையை கிளப்பி உள்ளார். அவர் பேசியிருப்பதாவது...“விஜய் அவருடைய குடும்பத்துடன் மீண்டும் ஒன்று சேர வேண்டும். ஒரு சின்ன சண்டைல பிரிஞ்சி போன குடும்பத்தை விஜய் இன்னும் சேர்த்து வைக்காததாலதான் இந்த மாதிரி ஒட்டுண்ணிலாம்(த்ரிஷா) உள்ள நுழையுதுங்க.லிப்ட்ல கமுக்குமா எடுத்த போட்டோல இருந்தே த்ரிஷா அவரை எவ்வளவு சொந்தம் கொண்டாடறாங்கன்னு தெரியுது. பல பேர் எம்ஜிஆர், ஜெயலலிதான்னு பேச ஆரம்பிச்சிட்டாங்க. அப்பவே, என்ன சொன்னோம், ஜெயலலிதா வந்து எம்ஜிஆருக்கு ஒரு ஒட்டுண்ணி தான். எம்ஜிஆர் கிட்ட இருந்து எல்லா அரசியலையும் கத்துக்கிட்டு அப்புறம் எம்ஜிஆரையே ஒதுக்கிட்டாங்க. இந்த ஒரு வருத்தம் கருணாநிதி தாத்தா கிட்ட கூட இருந்துச்சி. ஜெயலலிதா அவருடைய நண்பரை இப்படி பண்ணிட்டாங்கன்னு அவரு அப்செட் ஆனாரு.

ஈ அடிச்சான் காப்பி மாதிரி

எம்ஜிஆர் மரணத்துக்கு அப்புறம் ஜெயலலிதா நல்லா அரசியல் பண்ணாங்க. ஆனால் எதுவும் பெருசா பண்ணல, பல விஷயங்கள் ஆரம்பிச்சி நின்னு போச்சு. நல்ல பேர் வாங்கறதுக்கு நிறைய பண்ணிட்டிருந்தாங்க. அந்த ஒரு அரசியல் கிராப்பை இப்படி ஈ அடிச்சான் காப்பி மாதிரி பாலோ பண்ணக் கூடாது. இதெல்லாம் ஜெயிக்கிறதுக்கான வழியும் இல்ல. இதுவரை எந்த சமுதாய பொறுப்பையும் வெளிப்படுத்தாதவர் விஜய். யார் இவருக்கு இப்படி தப்பான அறிவுரை எல்லாம் சொல்றாங்கனு தெரியல,” என கிண்டலாகவும் பேசியுள்ளார்.சுசித்ராவின் இந்த வீடியோ பேச்சை விஜய், த்ரிஷா தரப்பில் இதுவரையில் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. தேவையின்றி சுசித்ரா பேசி வருவதாகவும் வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர். மேலும் எம்ஜிஆர் - ஜெயலலிதா பற்றியும் சுசித்ரா பேசியிருப்பது அவருக்கு எதிர்ப்பை தந்துள்ளது.விஜய் அவருடைய மனைவி சங்கீதா, மகள், மகன் ஆகியோரை விட்டு பிரிந்து தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார் என்பது கோலிவுட் தகவல். அவர்கள் சென்னையில் தனி வீட்டில் வசிப்பதாக சிலரும், லண்டனில் சங்கீதா அவரது பெற்றோருடன் இருப்பதாகவும் சிலரும் கூறி வருகிறார்கள். விஜய் சமீபத்தில் வாங்கிய பிரம்மாண்டமான அடுக்கு மாடி குடியிருப்பிலேயே த்ரிஷாவும் ஒரு வீடு வாங்கியிருக்கிறார் என்கிறார்கள்.தீவிர அரசியலில் நுழைய ஆசைப்படும் விஜய்க்கு த்ரிஷா விவகாரம் ஆரம்பத்திலேயே கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போகப் போக அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் அரசியலில் விமர்சிக்கப்படலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Kuppan
ஜூன் 30, 2024 19:43

பூனை குட்டி வெளியே வந்து விட்டது, இவரை இறக்கி விட்டது யாரு என்று தெரிந்து விட்டது திமுகவின் எதிர் காலத்திற்கு சவாலாக எதிர் பார்க்கக்கூடிய ஒரு எதிரியை ஆரம்பத்தில் இருந்தே ஒலித்து கட்ட திரை மறைவு வேலைதான் இது.


என்றும் இந்தியன்
ஜூன் 30, 2024 18:29

எம்ஜிஆர்-சந்தியா-ஜெயலலிதா???அப்போ விஜய்-யார் அத -திரிஷா


குமார்
ஜூன் 30, 2024 14:41

யார் இந்த பெண் எம்ஜிஆர் ஜெயலலிதா பற்றி இந்தப் பெண் எம்ஜிஆர் நேரில் முகத்தைக் கூட பார்த்திருக்க மாட்டார் நாவடக்கம் தேவை


Subramanian N
ஜூன் 30, 2024 14:40

...மாதிரி ஆட்கள் தமிழ்நாட்டில் இருப்பதால்தான் தமிழ்நாடு இன்னும் உருபடவில்லை


panneer selvam
ஜூன் 30, 2024 14:34

Nothing wrong in buying the hotel so that we could cater other needy


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 30, 2024 14:14

ஹோட்டல்ல அவ்வப்போது சாப்பிட்டுவிட்டு பில்லை செட்டில் பண்ணுறது பெட்டரா ???? சாப்பாடு பரவால்ல என்பதால் ஹோட்டலையே வாங்குவது பெட்டரா ????


Barakat Ali
ஜூன் 30, 2024 14:10

25L எல்லாம் அவாளுக்கு ரொம்ப கம்மி .....


Barakat Ali
ஜூன் 30, 2024 14:09

விஜய் அரசியல் களத்தில் இறங்கியதால் திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் பிரியும் ..... வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக எளிதாக வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் ..... ஆகவே அவரை களமிறக்கியதே திமுகதான் ..... இதை எப்படியோ அறிந்து கொண்ட பாஜக சுசித்ராவை இறக்கி பேசவைத்திருக்கலாம் ..... சுசித்ரா பேசியதால் விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பார்கள் .... விஜய் பெயரும் நாறும் ..... அவருடைய வாக்குவங்கியில் பெரிய ஓட்டை விழும் ..... திமுகவின் எதிர்ப்பு வாக்குகளில் பெருமளவு பாஜக கூட்டணிக்குப் போகும் ...


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 30, 2024 13:20

ஐயோ .... ஐயோ .... ஐயோ .....


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 30, 2024 14:15

எம்ஜிஆர் கிட்ட இருந்து எல்லா அரசியலையும் கத்துக்கிட்டு அப்புறம் எம்ஜிஆரையே ஒதுக்கிட்டாங்க. இந்த ஒரு வருத்தம் கருணாநிதி கிட்ட கூட இருந்துச்சி. ஜெயலலிதா அவருடைய நண்பரை இப்படி பண்ணிட்டாங்கன்னு அவரு அப்செட் ஆனாரு.


Anbuselvan
ஜூன் 30, 2024 12:55

இவரை நினைத்தால் பாவமாக இருக்கிறது. நன்றாக பாட கூடியவர். இப்போ வேறு வேலை வெட்டி இல்லாமல் யாரை பற்றியாவது ஏதாவது சொல்லி கொண்டே இருக்கிறார். புரட்டி பார்த்தால் எல்லோருடைய வாழ்க்கையிலேயும் ஏதாவது பிறரார் விரும்ப தகாத நிகழ்வுகள் இருக்கவே செய்யும். இவர் கண்ணாடியை அதாவது மனசாட்சியுடன் பேசி பார்த்தால் இவர் கிட்டேயும் சில கருப்பு பக்கங்கள் இருக்க செய்யலாம். பாவம் இவர்.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ