உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் மனைவியிடம் ரூ.43 கோடி மோசடி: இருவர் கைது

விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் மனைவியிடம் ரூ.43 கோடி மோசடி: இருவர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தேமுதிக தலைவராக இருந்த மறைந்த விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷின் மனைவியிடம் ரூ.43 கோடி அளவிற்கு மோசடி செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.சென்னை மாதவரம் பகுதியில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷின் மனைவி பூர்ணஜோதிக்கு சொந்தமாக இடம் உள்ளது. இந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்வதற்கு தனியார் கட்டுமான நிறுவனத்துடன் பூர்ணஜோதி கூட்டு ஒப்பந்தம் போட்டுள்ளார். இதன்படி குறிப்பிட்ட இடத்தில் 274 வீடுகளை கட்டுவது என்றும் இதில் 75 வீடுகளை சுதீஷின் மனைவியான பூர்ணஜோதியிடம் ஒப்படைத்து விடுவது என்றும் குறிப்பிடப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q2xg9khw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கட்டுமான நிறுவனத்துடன் முறைப்படி போடப்பட்ட இந்த ஒப்பந்தங்களை மீறி கட்டுமான நிறுவனத்தின் அதிபர் சந்தோஷ்சர்மா செயல்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட படி 75 வீடுகளை ஒதுக்காமல் 48 வீடுகளை கட்டுமான நிறுவனம் போலியாக கையெழுத்து போட்டு வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளது. இதன்மூலம் பூர்ணஜோதியை ஏமாற்றி ரூ.43 கோடி மோசடி நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது.இதுபற்றி பூர்ணஜோதி கட்டுமான நிறுவன அதிபர் சந்தோஷ் சர்மா மற்றும் உதவியாளர் சாகர் ஆகியோர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கட்டுமான நிறுவனம் மோசடியில் ஈடுபட்டிருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து சந்தோஷ் சர்மா, சாகர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

राजा
பிப் 23, 2024 11:26

சசிகலா 250 கோடியில் ஓ எஸ் தோட்டத்தில் பிரம்மாண்டமான பங்களா கட்டியுள்ளார் 30க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன என்ற செய்தி வந்தது. இது பற்றி வருமான வரித்துறை அமலாக்கத்துறை என்ன செய்து கொண்டுள்ளது எங்கிருந்து பணம் வந்தது. ஏன்டா இ டி ஐ டி அதிகாரிகளே ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கினேன் என்று சிறையில் தள்ளுகிறார்கள் இவ்வளவு பெரிய பண முதலைகளை பெருச்சாளிகளை எதுவுமே செய்ய மாட்டீங்களா.


GURU THENI
பிப் 23, 2024 10:49

கேப்டன்ன ஏமாத்தின குடும்பம் இப்படித்தான் சீரழியும்


வாய்மையே வெல்லும்
பிப் 23, 2024 10:15

தீபாவளி வந்தால் போதும்..


Velan Iyengaar
பிப் 23, 2024 10:11

புகுந்து விளையாடி இருக்கானுங்க


வாய்மையே வெல்லும்
பிப் 23, 2024 10:45

இதே டகாலடி வேலையை தீய மூர்க்க ஆட்கள் / அமைதி மார்கத்தினர் செய்தால் வருமா சார் ? தெரியாமல் கேட்கிறேன்.. ஊரானுக்கு தான் உபதேசமோ ?


DARMHAR/ D.M.Reddy
பிப் 22, 2024 23:29

ஊழ் வினை உறுத்து வந்து வீழ்த்தும்.


NicoleThomson
பிப் 23, 2024 03:21

இப்பவும் என்னோட கூட்டணி வைத்துக்கொள்ளவில்லை என்றால் உன் கட்சி உடைக்கப்படும் என்பதனை கார்பொரேட் கம்பெனியின் குடும்பம் சொல்லாமல் சொல்லியிருக்கு என்றுதான் பார்க்கிறேன்


Velan Iyengaar
பிப் 23, 2024 10:12

திமுக அடித்து விரட்டி விட்டபிறகும் இப்படி பேசுவது ஒரே தமாஷா இருக்கு


M Ramachandran
பிப் 22, 2024 20:39

போலிசு கேசானதும் கொஞ்சம் அப்பத்தை பூனை கரந்துவிட்டு சமாதான ஒப்பந்தம் போட படும். இதை எதிர்பார்த்த பருந்தோ பூனையையும் கொத்தும் குரங்க்குகளையும் கொத்தும்


தாமரை மலர்கிறது
பிப் 22, 2024 20:27

விஜயகாந்த் மைத்துனர் என்ற ஒரு பதவியை வைத்துக்கொண்டு, நாற்பத்திமூன்று கோடி ரூபாயை ஒரு சமோசா வியாபாரியிடம் இழந்தது போன்று இருக்கிறார் பாருங்கள். எல்லாம் எடப்பாடியுடன் தேர்தல் பேரத்தில் பிரேமலதா சம்பாரித்த பணம் தான் என்று அனைவருக்கும் தெரியும்.


Velan Iyengaar
பிப் 23, 2024 10:09

ஏமாற்றியது ஒரு ஷர்மா என்பது இங்கு கூடுதல் சிறப்பு


Bye Pass
பிப் 22, 2024 20:24

கட்டுமான நிறுவன அதிபர் சந்தோஷ் சர்மா மற்றும் உதவியாளர் சாகர்... பொதுமக்களிடம் திராவிடம் திராவிடம்னு பொங்குவாங்க ...பிரசாந்த் கிஷோர் சாகர் ஷர்மா போன்ற ஆரியர்கள் தான் இவாளுக்கு நம்பிக்கை பாத்திரங்கள்


sankaranarayanan
பிப் 22, 2024 20:21

மறைந்த நடிகர் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷின் மனைவி பூர்ணஜோதிக்கு சொந்தமாக இடம் சென்னை மாதவரம் பகுதியில் உள்ளது. எல்.கே.சுதீஷின் மனைவியிடம் ரூ.43 கோடி அளவிற்கு மோசடி செய்த வழக்கில் அடுத்த அமலாக்கத்துறை ரைடு விரைவில் சுதீஷ் வீட்டில்தான்


NicoleThomson
பிப் 22, 2024 19:40

திடீரென்று சுதீஷ் சம்பந்தப்பட்ட செய்தி , ஹ்ம்ம் கல்லால் அடித்தால் காய் விழத்தான் செய்யும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை