உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  விஜய் ரோடு ஷோவிற்கு புதுச்சேரியில் அனுமதி மறுப்பு

 விஜய் ரோடு ஷோவிற்கு புதுச்சேரியில் அனுமதி மறுப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில், த.வெ.க., தலைவர் விஜய் 'ரோடு ஷோ' நடத்த அனுமதி மறுத்த போலீசார், பொதுக்கூட்டம் நடத்த இடத்தை தேர்வு செய்து தெரிவிக்குமாறு கூறியுள்ளனர். த.வெ.க., தலைவர் விஜய், கரூரில் நடத்திய பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அவருடைய தொடர் பிரசார பயணம் நிறுத்தப்பட்டது. இதற்கிடையில், 'ரோடு ஷோ' நடத்த, பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தது தமிழக அரசு. இதனால், பொதுக்கூட்டம் மட்டுமே நடத்த முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. இதையடுத்து, காஞ்சி புரத்தில் உள்ள தனியார் கல்லுாரி அரங்கத்தில் அனுமதிக்கப்பட்ட 2,000 பேரை சந்தித்துப் பேசினார் விஜய். அதன் தொடர்ச்சியாக வரும் 5ல், புதுச்சேரியில் காலாப்பட்டு முதல் கன்னியகோவில் வரை 'ரோடு ஷோ' நடத்தி மக்களை சந்திக்க திட்டமிட்டார் விஜய். இதற்கான அனுமதி கோரி, கடந்த மாதம் 26ல், புதுச்சேரி டி.ஜி.பி., அலுவலகத்தில் த.வெ.க., நிர்வாகிகள் மனு கொடுத்தனர்; பின், முதல்வர் ரங்கசாமியிடமும் மனு அளித்தனர். தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து, விஜயின் 'ரோடு ஷோ'வுக்கு அனுமதி கோரினர். இதையடுத்து, நேற்று புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், அமைச்சர்கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். த.வெ.க., தரப்பில் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, பொதுச்செயலர் ஆனந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர். பின், புதுச்சேரி டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் கூறுகையில், ''புதுச்சேரியில் 'ரோடு ஷோ' நடத்த த.வெ.க.,வினருக்கு அனுமதியில்லை. குறிப்பிட்ட இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அறிவுறுத்தி உள்ளோம். நன்கு ஆலோசித்தே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ