உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அஜய் ரஸ்தோகியை சந்திக்கிறது விஜய் தரப்பு; நடந்ததை விவரித்து ஆதாரங்களை அளிக்க முடிவு

அஜய் ரஸ்தோகியை சந்திக்கிறது விஜய் தரப்பு; நடந்ததை விவரித்து ஆதாரங்களை அளிக்க முடிவு

கரூரில் 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில், தங்களிடம் இருக்கும் விபரங்களையும் ஆதாரங்களையும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகியை சந்தித்து அளிக்க த.வெ.க., முடிவெடுத்துள்ளது. கடந்த மாதம் 27ம் தேதி இரவில், நடிகர் விஜய் பிரசார கூட்டத்திற்கு வந்தோர் நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்து போன சம்பவத்தைத் தொடர்ந்து, நடிகர் விஜய், திருச்சி வழியாக சென்னைக்கு வந்தார். அதன்பின், அவர் கரூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை இன்று வரை சந்திக்கவில்லை. ஆனால், அவருடைய கட்சி நிர்வாகிகள் மட்டும் ஓரிருவர், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eihg13wy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கிடையில், செல்போன் வாயிலாக வீடியோ காலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிலரிடம், சென்னையில் இருந்தபடியே பேசினார் நடி கர் விஜய். தொடர்ந்து, நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்குவதாக அறிவித்த இழப்பீட்டுத் தொகையான தலா 20 லட்ச ரூபாய்க்கான தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தி இருக்கிறார் விஜய். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நேரில் விஜய் ஆறுதல் கூற விரும்புகிறார். இதற்காக, போலீஸ் அனுமதி கேட்டு த.வெ.க.,வினர் தீவிரமாக முயன்று வருகின்றனர். கரூர் செல்ல திட்டமிடும் விஜய்க்கு பாதுகாப்பு கேட்டு, டி.ஜி.பி., அலுவலகத்தில் மனு அளித்தனர். ஆனால், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அணுகி கடிதம் கொடுத்து, அனுமதி பெற்றுக் கொள்ளுங்கள் என டி.ஜி.பி., அலுவலகத்தில் சொல்லிவிட்டனர். இதையடுத்து, த.வெ.க.,வினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை அணுகி கடிதம் கொடுத்து காத்துக் கொண்டுள்ளனர்; ஆனால், உரிய அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால், நடிகர் விஜய் கரூர் சென்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்கும் நிகழ்வு தள்ளிக் கொண்டே போகிறது. இதற்கிடையில் உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, கரூர் நெரிசல் மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ., விசாரிக்கத் துவங்கி உள்ளது. இதற்காக, கரூரில் முகாமிட்டிருக்கும் சி.பி.ஐ., அதிகாரிகள், முதல் கட்டமாக தமிழக போலீசாரிடம் இருந்து, வழக்கு தொடர்பான ஆவணங்களையும் ஆதாரங்களையும் பெற்றுள்ளனர். வரும் வாரத்தில் முழு வேகத்தில் விசாரணையை துவங்கவிருப்பதாக சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் முதல்கட்டமாக, அதிகாரிகளை த.வெ.க., தரப்பில் சந்திக்க உள்ளனர். அப்போது, கரூர் விஜய் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது தொடர்பாக, தங்களுக்கு கிடைத்திருக்கும் விபரங்கள் அனைத்தையும் அளிக்கவிருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

இது குறித்து, த.வெ.க., வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:

கரூரில் நடிகர் விஜயின் பிரசாரம் கூட்டம் நடத்துவதற்காக த.வெ.க., தலைமையில் திட்டமிட்டது முதல் நெரிசலில் சிக்கில் 41 பேர் உயிர் இழந்தது வரை, எல்லா விஷயங்களும் த.வெ.க.,வால் தொகுக்கப்பட்டுள்ளது. அதில் போலீசார், அரசுத் துறை அதிகாரிகள், த.வெ.க., நிர்வாகிகளிடம் பேசிய பேச்சு, அளித்த நிபந்தனைகள் என எல்லா விபரங்களையும் சொல்லப்பட்டுள்ளன. அதேபோல, கூட்ட நெரிசலில் சிக்கியோர் சிலரை, முகம் தெரியாத சிலர் கழுத்தில் ஏறி நின்று மிதித்தது, விஜயை நோக்கி செருப்பு வீசியது, பொதுமக்களில் சிலரின் முதுகில் கத்தியால் கீறி; குத்தியது, மக்களை விரட்டியடிக்க போலீசார் தடியடி நடத்தியது உள்ளிட்ட சந்தேகப்படும்படியாக நடந்த அனைத்து நிகழ்வுகளும் தொகுக்கப்பட்டுள்ளன. அதற்கான சாட்சியங்கள், சி.சி.டி.வி., பதிவுகள் ஆகியவற்றையும் சி.பி.ஐ., அதிகாரிகளிடம் முதல் கட்டமாக த.வெ.க.,வினர் அளிக்க உள்ளனர். சி.பி.ஐ., விசாரணையை கண்காணிப்பதற்காக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, அடுத்த வாரம் கரூர் வருவதாக சொல்லப்படுகிறது. அப்படி அவர் கரூரில் முகாமிட்டால், அவரையும் த.வெ.க., தரப்பில் சந்திக்க உள்ளனர். தங்களிடம் உள்ள ஆதாரங்களை த.வெ.க.,வினர் அவரிடமும் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின. -நமது நிருபர்-:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Kadaparai Mani
அக் 21, 2025 15:42

திகழ் ஓவியன் புரட்சி தலைவர் எம்ஜிஆர் 1953 ஆம் ஆண்டு திமுகவில் சேர்ந்தார் .அதன் வெற்றிக்கு 1962,67,71 தேர்தல்களில் உழைத்து திமுகவை பெரிய கட்சியாகினார் .19 வருட அனுபத்துடன் அதிமுகவை ஆரம்பித்து தமிழகத்தில் அதிகம் முறை ஆட்சி கண்ட காட்சியாக்கினார் .அவருடன் ஒப்பிட தமிழகத்தில் யாருமில்லை .அவர் நடிகர் என்பதை விட அரசியல் தலைவர், வள்ளல் , பொன்மனச்செம்மல் என்பதே பெரியது .


sengalipuram
அக் 21, 2025 12:50

70 வருட ட்ராவிடின் ஆட்சியின் சாதனை, மக்களை இன்னும் சினிமா நடிகனின் கவர்ச்சின் மயக்கத்தில் வைத்திருப்பதுதான். நல்ல படிப்பறிவு , பகுத்தறிவு மக்களுக்கு கொடுத்திருந்தால் அவர்கள் இப்படி வெய்யலில் நின்று உயிரை விட்ருக்க மாட்டார்கள் .


திகழ்ஓவியன்
அக் 21, 2025 12:32

விஜய் ரசிகர்கள் கட்டுப்பாடு அற்ற கூட்டம் இது தான் தலைவிதி, இதுவரை TRANSFORMER மீது ஏறிய வரலாறு இல்லை, நாம் தமிழகம் படிப்பறிவில் 53 % என்று பெருமை கொள்ளும்போது இந்த மாதிரி தற்குறி தலைவன் அவனை போல தொண்டன் அதை விட கேவலம் ஒருத்தன் மயக்கத்தில் இருக்கும்போது அவனுக்கு உதவாமல் செலிபிய எடுது கேடு கேட்ட ஜென்மம் வர்கள் தமிழ்நாட்டிற்க்கே கேடு


Modisha
அக் 21, 2025 17:05

பார்ப்பதற்கு யாருமே வராத ஸ்டாலின் மற்றும் உதயநிதி தான் சிற்ந்தவர்கள் , அவர்கள் வரும் போது stampede ஏற்பட வாய்ப்பே இல்லை .


திகழ்ஓவியன்
அக் 21, 2025 12:28

அமித் ஷா ஆணைப்படி இவரை சந்திக்கிறார்கள் இவர் தான் பில்கிஸ் பானு வழக்கில் அந்த 11 பேர் விடுவித்தவர் அனால் உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் மீண்டும் சிறையில் , அதே நிலை விஜய்க்கு வருமோ


வாய்மையே வெல்லும்
அக் 21, 2025 12:42

ஊழல் செய் ஜமாய் .. பிறகு மாட்டி கொண்டால் கதறல்ஸ்.. ஹாஹாஹா


Rathna
அக் 21, 2025 11:26

அங்கு போய் சினிமா நடிகன் வருகிறான் என்று காத்து இருந்த அப்பாவி அரசியல் தெரியாத மக்களை தான் குறை சொல்ல வேண்டும். அரசியல் என்பதே சின்ன மீனை போட்டு பெரிய மீனை எடுப்பது தான். மனத்திலோ, செயலிலோ நேர்மை ஆனவர்கள் அரசியலில் இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் மிக குறைவு.


Kulasekaran A
அக் 21, 2025 10:26

கூட்ட நெரிசல் யாரும் எதிர்பாராத விபத்து. நெரிசல் ஏற்பட்டதற்கு கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களின் கவனக்குறைவு ஒரு முக்கிய காரணம். இதை தேவையில்லாமல் அரசியல் ஆக்குவது விஜயின் அரசியல் வாழ்க்கைக்குத் தான் பெரிய இடையூறாக அமையும்


Haja Kuthubdeen
அக் 21, 2025 12:36

எதிர்பாரா விபத்தா ..திட்டமிடப்பட்டதா என்பதை கண்டறியத்தான் உச்சநீதிமன்ற கண்கானிப்பில் சிபிஐ விசாரணையே...


VSMani
அக் 21, 2025 10:13

அதேபோல, கூட்ட நெரிசலில் சிக்கியோர் சிலரை, முகம் தெரியாத சிலர் கழுத்தில் ஏறி நின்று மிதித்தது, விஜயை நோக்கி செருப்பு வீசியது, பொதுமக்களில் சிலரின் முதுகில் கத்தியால் கீறி குத்தியது, மக்களை விரட்டியடிக்க போலீசார் தடியடி நடத்தியது இது எல்லாமே செந்தில் பாலாஜியின் செயலாகத்தான் இருக்கும்.


Ramesh Sargam
அக் 21, 2025 09:12

யாரை யார் சந்தித்து இனி என்ன ஆகப்போகுது.


திகழ்ஓவியன்
அக் 21, 2025 12:43

பாவம் உங்கள் நிலை


தமிழ்வேள்
அக் 21, 2025 09:02

பஸ்ஸின் உட்புறம் விளக்கினை அணைத்து, எரிய விட்டு, மீண்டும் அணைத்து விளையாடியது சிறுபிள்ளைத்தனம்.... பஸ்ஸில் நடிகைகளை கூட்டிவந்து பஸ்ஸுக்குள்ளேயே கூத்தடித்தது என்னமாதிரியான வேலைத்தனம்? இதைப்பற்றியும் புகார் போயிருப்பதாக ஒரு செய்தி.. நடிகன் என்பவன் ஆளுவதற்கு அரசியலுக்கு லாயக்கற்றவன்.... பொது வெளிக்கான ஒழுக்கம் படியாத வரை.


Kumar Kumzi
அக் 21, 2025 09:34

நடிகனா இருந்தவர் தானே


திகழ்ஓவியன்
அக் 21, 2025 12:29

ஆமாம் MGR ஜெயா எல்லாம் நடிகர்கள் தான்


Haja Kuthubdeen
அக் 21, 2025 12:39

உதயண்ணாவும் சூப்பர்ஸ்டார் நடிகர்தானே..மறந்துட்டீங்களே...


Modisha
அக் 21, 2025 17:07

By the same token no dmk leader is fit for public life.


Suppan
அக் 21, 2025 17:32

பல தலைவர்களுக்கு தனிமனித ஒழுக்கம் என்பதே கிடையாது. அதில் முதலிடம் எந்தக்கட்சி என்று எல்லோருக்கும் தெரியும்.


Nalla
அக் 21, 2025 08:46

உப்பை திண்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும் தப்பு செய்தவன் தண்டனை கொள்ள வேண்டும் 41 பேரை கொல்ல காரணமாக இருந்த எங்கள் தலைவர் விஜய் பொறுப்பேற்பார்


KavikumarRam
அக் 21, 2025 09:50

itharku பின்னால் இருக்கும் ...


சமீபத்திய செய்தி