UPDATED : அக் 27, 2024 09:53 PM | ADDED : அக் 27, 2024 09:02 PM
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் இன்றைய பேச்சு, 2026 ல் நடைபெறவுள்ள ஆட்சி மாற்றத்திற்கான பார்முலா என்றும் அதனை புதிய தமிழகம் கட்சி வரவேற்பதாக, கட்சியின் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி இன்று கூறினார்.கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி, முதல் மாநாட்டை இன்று வெற்றிகரமாக முடித்துள்ள விஜய்க்கு பாராட்டுக்கள்.தமிழ்நாட்டில் கடந்த 75 ஆண்டு கால அரசியலில், எந்த அரசியல் கட்சியும் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்று கூட்டணி ஆட்சி குறித்து வெளிப்படையாக பேசவும் இல்லை.அதற்கான சூழ்நிலை இருந்தாலும் ஆட்சியில் எந்த கட்சிக்கும் பங்கு அளிக்கவில்லை.ஆனால் தம்பி விஜய், தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி முழக்கத்தை முன் வைத்துள்ளார்.புதிய தமிழகமும் கூட்டணி ஆட்சி முறையை வலியுறுத்தி வருகிறது.2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி மாற்றத்தையும், மக்களுக்கு புதிய விடியலை உருவாக்கும்.இவ்வாறு கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.