உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ம.க.,விடம் விஜய் தரப்பு பேச்சு: முதல்வர் பதவியால் குழப்பம்

பா.ம.க.,விடம் விஜய் தரப்பு பேச்சு: முதல்வர் பதவியால் குழப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழக சட்டசபை தேர்தலில், பா.ம.க.,வுக்கு, 90 தொகுதிகளை ஒதுக்கீடு செய்து, கூட்டணி அமைக்க, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உடன் த.வெ.க., தரப்பில் பேச்சு நடத்தியதாக, தகவல் வெளியாகி உள்ளது.இதுகுறித்து, பா.ம.க., வட்டாரங்கள் கூறியதாவது:கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் நடந்த தேர்தல்களில், வட மாவட்டங்களில், அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகளுடன், பா.ம.க., கூட்டணி வைத்து, வெற்றியை சுவைத்தது. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில், பா.ம.க., சந்தித்த அனைத்து தேர்தலிலும், இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. வெற்றி எட்டாக்கனியானது.

வியூகம் அமைப்பு

'வரும் 2026 சட்டசபை தேர்தலில், வெற்றிக் கூட்டணியில் இடம்பெற வேண்டும்' என, ராமதாஸ் கருதுகிறார். விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி போட்டியிட்டும், இரண்டாம் இடத்தை பா.ம.க., உறுதி செய்தது.வட மாவட்டங்களில் உள்ள, 20 லோக்சபா தொகுதிகள், 120 சட்டசபை தொகுதிகளில், பா.ம.க.,வை பலப்படுத்தி வெற்றி பெற்றால், முதல்வர் பதவி அன்புமணிக்கே கிடைக்கும். அந்த அடிப்படையில், தேர்தல் கூட்டணியை அமைக்க, தனக்கு நெருக்கமான நண்பர்களை, தைலாபுரம் தோட்டத்திற்கு அழைத்து, ராமதாஸ் வியூகம் அமைத்து வருகிறார். இதற்கிடையில், மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா அன்புமணி தலைமையில் நடக்க இருக்கிறது. மாநாட்டில், 10 லட்சம் பேர் பங்கேற்க வேண்டும்; மாநாட்டின் வெற்றியை தொடர்ந்து, கூட்டணி பேச, தி.மு.க., - அ.தி.மு.க., - த.வெ.க., கட்சிகள் போட்டிபோட்டு வர வேண்டும் என, ராமதாஸ் விரும்புகிறார். த.வெ.க., தலைவர் விஜய்க்கு நெருக்கமான ஆடிட்டர் ஒருவர், சமீபத்தில் ராமதாசை சந்தித்துப் பேசினார். சட்டசபை தேர்தலில் பா.ம.க.,வுக்கு 90 தொகுதிகள், மீதமுள்ள 144 தொகுதிகளில், த.வெ.க., மற்றும் சில கட்சிகள், கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என, ஆடிட்டர் தெரிவித்துள்ளார். அதற்கு ராமதாஸ், 'சினிமாவில் விஜய் உச்ச நட்சத்திரம் என்பதும், அவர் படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதும் தெரியும். அரசியலில் அவரது வெற்றியை இன்னும் பார்க்கவில்லை.

விமர்சிக்கவில்லை

விஜய் கட்சி துவக்கியதும், அன்புமணி வாழ்த்து தெரிவித்தார். நாங்கள் விஜயை, இதுவரை விமர்சிக்கவே இல்லை. வன்னியர் சமுதாய இளைஞர்களும், விஜய் ரசிகர்களாக உள்ளனர். அவர்கள் எல்லாம், முதல்வர் வேட்பாளராக அன்புமணியை விரும்புவர். எனவே, இரண்டரை ஆண்டுகள் விஜய், அடுத்த இரண்டரை ஆண்டுகள் அன்புமணி முதல்வராக இருக்க, ஒப்பந்தம் போடுவதற்கு விஜய் தயாரா எனக் கேட்டுள்ளார்.அதற்கு ஆடிட்டர் தரப்பில், 'துணை முதல்வர் அல்லது அமைச்சர் பதவியை அன்புமணிக்கு வழங்கலாம். முதல்வர் பதவியை பங்கு போடுவது குறித்து, விஜய்தான் முடிவு செய்ய வேண்டும்' என, பதில் அளித்துள்ளார்.சந்தேகங்கள் அனைத்துக்கும் தெளிவான பதில் பெற்று வாருங்கள். கூட்டணி குறித்து பேசி முடிவெடுக்கலாம் என, விஜய் தரப்பு ஆடிட்டரிடம் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

SIVA
ஏப் 24, 2025 09:23

திமுக அணியில் இடம் பிடிக்க பார்ப்பார் இல்லை என்றால் அதிமுக அணி தான் மற்றவர்கள் எல்லாம் இந்த இரு அணியிடமும் பேரம் பேசவே .....


உண்மை கசக்கும்
ஏப் 23, 2025 06:18

இந்த செய்தி உண்மை என்றால் மிக கொடுமை. 90 இடத்திற்காக ராமதாஸ் குடும்பம் வன்னிய சமுதாயத்தையே அடகு வைத்து விட்டது. வெட்கக்கேடு.


Bhaskaran
ஏப் 22, 2025 14:09

அடி என்பதற்கு பெண்டாட்டி இல்லை அதுக்குள்ள பிள்ளை பெக்கறதை பத்தி பேச்சு .விசய் அனைத்து தொகுதியிலும் கட்டுத்தொகை பறி கொடுப்பார்


Deepa Karthick
ஏப் 20, 2025 11:08

பா மா கா கட்சியுடன் த வெ க கூட்டணி வைத்தால் கண்டிப்பாக விஜய் இருக்கும் இடம் தெரியாமல் முதல் போட்டியிலேயே காலி 2026 விஜய் கடைசி பயணம்


Madras Madra
ஏப் 19, 2025 12:44

விஜயை வைத்து எதிர்க்கட்சி கூட்டணிகள் சிதறடிக்க முயற்சி


Sdeh
ஏப் 19, 2025 12:44

ஒரு ஜாதி கட்சியுடன் கூட்டணி அமைப்பது சரிதானா. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..


NACHI
ஏப் 19, 2025 12:07

TVK...2026 தேர்தல்...புறக்கணிக்கும் யாரும் கூட்டணிக்கு சேர்க்காததால்...


hari
ஏப் 19, 2025 11:43

இல்லாததை எழுதுவது உங்கள் வேலை


TMM
ஏப் 19, 2025 11:18

பமக அம்போ….இருப்பதையும் இழந்து நடுத்தெருவில் பமக வருவதை ஆண்டவனாலும் தடுக்க முடியாது.


R Dhasarathan
ஏப் 19, 2025 10:56

அவ்வளவுதான் இருப்பதையும் இழக்க நேரிடும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை