உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாடு திருடிய வாலிபர்கள் 3 பேரை கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த கிராம மக்கள்

மாடு திருடிய வாலிபர்கள் 3 பேரை கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த கிராம மக்கள்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கானாகாத்தான் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மேச்சலுக்கு செல்லும் மாடுகள் தொடர்ந்து திருடு போயிருந்த நிலையில் இன்று மாலை கானாடுகாத்தான் வடகுடிபட்டி வயல்வெளியில் மேய்சலுக்கு சென்ற பசு மாடு வித்தியாசமாக சத்தம் போட்டுள்ளது.அப்போது அருகில் இருந்த விவசாயி ஒருவர் சென்று பார்த்தபோது வாலிபர்கள் மூவர் பசுமாட்டை பிடித்து வாகனத்தில் ஏற்ற முயன்றது தெரியவந்தது. உடனடியாக கிராமத்தினருக்கு தகவல் தெரிவித்து, அங்கு வந்த கிராமத்தினர் மாடு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரையும் பிடித்து ஊர் கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் மூன்று பேரையும் ஒப்படைத்தனர்.விசாரணையில் மாடு திருடிய சம்பவத்தில் ஈடுபட்டது புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதி சேர்ந்த லோகேஸ்வரன்(20) முகர்ஜி(19) அரவிந்த்(23) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து மூன்று பேரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தஞ்சை மன்னர்
ஏப் 20, 2025 12:49

நல்ல வேலை பெயர் ஹிந்துவாக இருந்தது இல்லாட்டி...


Ramesh Sargam
ஏப் 20, 2025 12:44

மேலும் மாடுகளை அவிழ்த்துவிட்டு அந்த மாடு திருடர்களை முட்டவைக்கவேண்டும்.


veeramani
ஏப் 20, 2025 09:45

பசு மா டுகளுக்கு பங்களாதேஷ் நாட்டில் அதிகவிலை கொடுக்கப்படுகிறது. இந்த எண்ணத்தில் தமிழகத்தில் பசு மாடுகள் திருடப்படுகின்றன. செட்டிநாட்டு மக்களை பற்றி தெரியாமல் இவர்கள் திருடும்போது மாட்டியுள்ளனர்.


vadivel
ஏப் 20, 2025 07:58

அண்டை நாட்டை சேர்ந்த கும்பல்


chennai sivakumar
ஏப் 20, 2025 08:31

சிறிது காலத்திற்கு பிறகு நமக்கு அந்த பட்டம் அண்டை நாட்டினர் கிடைத்து விடும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை