உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஸ்வகர்மா திட்டம்: வயது வரம்பை உயர்த்த தமிழக அரசு முடிவு

விஸ்வகர்மா திட்டம்: வயது வரம்பை உயர்த்த தமிழக அரசு முடிவு

சென்னை : தமிழகத்தில், மத்திய அரசின், 'விஸ்வகர்மா' திட்டத்தை அமல்படுத்துமாறு, பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து, அத்திட்டத்திற்கான வயது வரம்பை, 18க்கு பதிலாக, 35 ஆக உயர்த்தி அமல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சிற்பி, தச்சர், பொற்கொல்லர் உட்பட, 18 பாரம்பரிய கைவினை கலைஞர்கள் பயன்பெற, பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை, மத்திய அரசு, 2023 செப்டம்பரில் துவக்கியது.

உதவித்தொகை

இத்திட்டத்தை, மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயல்படுத்துகிறது.திட்டத்திற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது, 18. விண்ணப்பம் செய்வோரில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, முதல் கட்டமாக ஒரு வாரம் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக தினமும், 500 ரூபாய் உதவித்தொகை உண்டு.பயிற்சி முடித்த பின், 15,000 ரூபாய் மதிப்புள்ள தொழில் கருவிகள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்படும். இறுதியாக, 1 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். இதற்கு, 5 சதவீதம் வட்டி. அந்த கடனை, 18 மாதங்களில் திரும்பி செலுத்தலாம். இதேபோல பயனாளிகளின் திறனுக்கு ஏற்ப, கூடுதல் பயிற்சி மற்றும் கடன் தொகை வழங்கப்படும்.

நால்வர் குழு

விஸ்வகர்மா திட்டம், குலக்கல்வியை ஊக்குவிப்பது போல இருப்பதாக கருத்து தெரிவித்து, அத்திட்டத்தை, தமிழகத்தில் அரசு செயல்படுத்தாமல் உள்ளது. திட்டத்தை செயல் படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய, மாநில திட்டக்குழு துணை தலைவர் தலைமையில் நான்கு பேர் அடங்கிய குழுவையும், தமிழக அரசு நியமித்தது.அதே சமயம், விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்துமாறு, பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து, அத்திட்டத்தின் வயது வரம்பை, 18க்கு பதில், 35 வயதாக உயர்த்தி அமல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, மத்திய அரசிடம் அனுமதி கேட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. குறு, சிறு தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வயது வரம்பை, 18 ஆக நிர்ணயித்தால், படித்து முடித்த உடனே குடும்ப தொழில் செய்ய, குடும்பத்தினர் கட்டாயப்படுத்த வாய்ப்புள்ளது; வயது வரம்பை உயர்த்தினால், வேலை தேடும் இளைஞர்கள், தாங்கள் விரும்பிய வேலை செய்வதை உறுதி செய்ய முடியும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

A1Suresh
பிப் 13, 2024 17:14

நாட்டிலே தொழிலை முன்னேற்ற மத்திய அரசு கொண்டுவந்த திட்டத்தினை ஆதரிக்க மனமில்லை. படினெட்டு வயது வரம்பை முப்பத்தைந்து என்று உயர்த்துகிறது. ஆனால் கலப்பு திருமணத்தை மட்டும் பதினெட்டிலிருந்து உச்சவரம்பை கொக்சம் ஏமாந்தாம் பதிமூன்று என்று கூட குறைத்துவிடும். வக்கிரபுத்தி.


jayvee
பிப் 13, 2024 16:39

அறுபது வயதில் இளைஞரணி தலைவராக இருந்துவருக்கு 35 வயது சிறு வயது


Vivekanandan Mahalingam
பிப் 13, 2024 13:33

தமிழக அரசு உதவாக்கரை அரசு -மத்திய அரசின் நல்ல திட்டங்களை செயற் படுத்தாமல் சாக்கு போக்கு


Balaji Radhakrishnan
பிப் 13, 2024 13:25

மத்திய அரசு ஆராய்ந்து நல்ல முடிவு எடுக்கும் திட்டத்தில் கீழ் தரமாக யோசிக்கும் திராவிட கட்சி.


Svs Yaadum oore
பிப் 13, 2024 12:01

Electrician , Fitter , welder , driver என்பதெல்லாம் எந்த குலத்தொழிலில் வரும்?? ...Boat Maker, Armourer, Hammer and Tool Kit Maker,Fishing Net Maker என்பதெல்லாம் இந்த திட்டத்தில் உள்ளது ....இதெல்லாம் எந்த குலத்தொழில் ??...மக்களை டாஸ்மாக் அடிமைகளாக வைத்து இருப்பதே இந்த விடியல் அரசின் நோக்கம் ...


ஆரூர் ரங்
பிப் 13, 2024 10:45

அரசே கோடிக்கணக்கான பேருக்கு கைத்தொழில்களைக் கற்றுக் கொடுத்தால் நடவாத காரியம். பாரம்பரியமாக கற்று ஈடுபட்டால் குலத்தொழில் தவறு என்று பிரச்சாரம். எல்லோரையும் பட்டதாரிகளாக்கி வேலையின்மையால் அல்லாட????‍???? வைத்ததுதான் மிச்சம்.


Svs Yaadum oore
பிப் 13, 2024 11:11

நன்றாக படிக்கிறவன் படிக்கட்டும் ....படித்து பிறகு பிடித்த வேலைக்கு போகட்டும் ...படிக்க விருப்பம் இல்லாதவன் அவனுக்கு பிடித்த தொழில் கல்வி கற்று முன்னேறட்டும் ...இதில் பாரம்பரிய குலத்தொழில் என்பது எங்கே வருது ??.....வெளிநாடுகளில பள்ளியில் தொழில் கல்வி கிடையாதா ??....அங்கே எப்படி கோடிக்கணக்கான பேருக்கு தொழில் கல்வி கற்று தருகிறார்கள் ??...


ஆரூர் ரங்
பிப் 13, 2024 10:41

99 விழுக்காடு பேர் விவசாயத்தை குடும்ப உறுப்பினர்களிடம் கற்றுக் கொண்டு பாரம்பரியத் தொழிலாகவே செய்கிறார்கள். வேறு படிப்பு படித்தவர்கள் விவசாயத்தின் பக்கம் வருவது அபூர்வம். குலத்தொழில் ஒழிப்பு என்ற பெயரில் இதற்கும் வேட்டு வைத்துவிட்டு சோற்றுக்கே அலையும் நிலைமையைக் கொண்டு வந்துவிடுவார்கள் திராவிஷர்கள்????. இதற்குத் தோதாக மன்மோகன் முன்பு நாட்டில் அதிக மக்கள் விவசாயத்திலேயே இருப்பதால் முன்னேற்ற இயலவில்லை என்று கூறினார்????. நல்ல பொருத்தமான கூட்டணி.


Svs Yaadum oore
பிப் 13, 2024 10:04

குலத்தொழில் என்றால் இப்பொது தமிழ் நாட்டில் யாருக்கு குலத்தொழில் என்ன என்று எவனுக்கு தெரியும்?? ..எல்லாம் டாஸ்மாக் மாறி பல காலமாகுது ....மத்திய அரசு நேர்மையாக உழைத்து பிழைக்க வழி செய்தால் அதுக்கும் சமூக நீதி மத சார்பின்மை கட்சி தடை போடும் ....


Svs Yaadum oore
பிப் 13, 2024 09:54

35 வயசுக்கு மேல் எவனாவது தொழில் கற்று தொழில் துவங்க முன் வருவானா?? இதெல்லாம் இங்குள்ளவன் இது போல் செயல்படுத்தாமல் அடிபட்டால்தான் இங்குள்ளவனுக்கு தெளிவு வரும் ... இந்த மாநில திட்டக்குழு என்பதும் மதம் மாற்றிகள் பிடியில்தான் .......பேசாமல் செயல்படுத்தாமல் விட்டு விட்டு போகட்டும் ...


R GANAPATHI SUBRAMANIAN
பிப் 13, 2024 09:32

என்னுங்கடா மறைந்த ராஜாஜி சொன்னப்ப திருட்டு திராவிடனுங்க எதிர்த்தாங்க. இப்ப என்ன ரோசம் பொத்துகிட்டு வருதோ ?? மத்திய அரசின் இந்த திட்டத்திலும் ஸ்டிக்கர் ஓட்ட பார்க்கிறார்களோ என்ற சந்தேகம் எழுவது நியாயாம் தானே ?


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை