உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈரோடு விஜய் பிரசார கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்பு

ஈரோடு விஜய் பிரசார கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு: ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர். ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே, சரளை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றார். கொங்கு மண்டலத்தில் முதல்முறையாக, ஈரோட்டில் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி என்பதால் தொண்டர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kkoegts6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

நல்லவர், வல்லவர்

முதலில் பிரசார கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செ ங்கோட்டையன் பேசியதாவது: கூட்டத்தை பார்க்கும் போது நாளைய தமிழகத்தின் முதல்வர் இவர் தான் என வரலாறு படைக்கும் என்பது போல் உள்ளது. நாளை தமிழகத்தை ஆளப்போவது விஜய் தான். நல்ல தலைவர் தேவை எனும் மக்களின் கனவு நனவாகி உள்ளது.

ரூ.500 கோடி வருவாய்

விஜய் நல்லவர், வல்லவர், உங்களுக்காகவே வாழ்பவர். ஆண்டுக்கு ரூ.500 கோடி வருவாயை விட்டு விட்டு மக்களுக்காக வந்திருக்கிறார்; இதற்கு முன் புரட்சித்தலைவரைப் பார்த்தேன்; இன்றைக்கு விஜயை காண்கிறேன். இவ்வாறு செங்கோட்டையன் பேசினார். கூட்டம் நடந்த இடத்திற்கு தவெக தொண்டர்கள் இன்று அதிகாலை முதலே குவிந்தனர். அவர்கள் விஜய் கூட்டம் நடந்த இடத்திற்கு பிரசார வாகனத்தில் வந்த உடன் உற்சாகம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 55 )

Baskar
டிச 18, 2025 16:35

கூட்டத்துக்கு வருவாங்க , நல்ல பார்த்தீங்கன்னா கழக தொண்டர்கள் கூட வருவாங்க , ஆனா தவேக வோட்டு போட மாட்டாங்க


vbs manian
டிச 18, 2025 15:48

இருக்கின்ற சூழ்நிலையில் பூங்காவில் பறக்கும் வண்டு கழகம் வேண்டாம் என்று ரீங்காரம் செய்தாலும் மக்கள் வரவேற்பார்கள். அந்தளவுக்கு வேதனை படுத்தி விட்டார்கள்.


vivek
டிச 18, 2025 15:29

ஏல கணோஜ், சூடான தோசை கல்லில் உட்கார்ந்து மாதிரி இருக்கா


Rajah
டிச 18, 2025 15:28

வாசகர்கள் கருத்தை பார்க்கும்போது அறியாத பேய்களை விட அறிந்த பேய்கள் நல்லதென நினைக்கின்றார்கள் என்று தோன்றுகின்றது. ஆக மொத்தத்தில் நம்மை ஆள்பவர்கள் எல்லோரும் பேய்கள் என்பதை ஒத்துக் கொள்கின்றார்கள். அப்போ யார்தான் நமக்கு நல்லாட்சி கொடுக்கப்போகின்றார்கள்? என்னைப் பொறுத்தளவில் அண்ணாமலையத் தவிர வேறு யாராகவும் இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால் தமிழர்கள் பேய்களை நம்புகின்றார்கள்.


Sridhar
டிச 18, 2025 14:56

ஆடுற மாட்ட ஆடிகறக்கணும் பாடுற மாட்ட பாடி கறக்கணும்னு பெரியோர் சொற்படி, இந்த விசில் குஞ்சுகளுக்கு அண்ணாமலை போன்றோர் படித்து ஆராய்ந்து புள்ளிவிவரங்களோடு திமுக ஒரு திருட்டு கும்பல் அப்படிங்கற உண்மைய சொன்னா புரியாது, அதுவே இந்த ஜோசப் சொல்லும்போது நல்லாவே மண்டைக்குள்ள ஏறும். முதல்ல இந்த திருட்டு கும்பல் தமிழ்நாட்டுக்கு ஒரு நச்சுங்கற விஷயம் மக்களுக்கு புரியனும். அதுக்கப்புறம் வாடிகன் எப்படிப்பட்ட ஆளுங்கங்கறத பிற்பாடு பாத்துக்கலாம்.


SULLAN
டிச 18, 2025 13:39

பணியா எம் ஜி ஆர் என்றா?? ஷா என்றாலே கொஞ்சம் அலாதிதான் விஜய்க்கு


Anantharaman Srinivasan
டிச 18, 2025 13:16

ஆண்டுக்கு ரூ.500 கோடி வருவாயை விட்டு விட்டு... ஆட்சியை பிடித்து முதல்வரானால் தினமும் பல கோடி.


Makkal Manam
டிச 18, 2025 13:11

தற்குறி கூட்டம்


Rajah
டிச 18, 2025 14:58

இந்த தற்குறிகளைப் பெற்ற பெற்றோரின் வாக்குகளால்தான் இன்று திமுக ஆட்சியில் இருக்கிறது.


எஸ் எஸ்
டிச 18, 2025 12:51

திமுகவை பிடிக்காது. ஆனால் ஒன்றிய அரசு என்று மத்திய அரசை குறிப்பிடுவார். என்ன முரண்பாடு! இதுவரை திருப்பரங்குன்றம் பற்றி வாய் திறக்கவில்லை. இவருக்கும் இந்துக்களை கண்டால் இளப்பம் போலும்!


ASIATIC RAMESH
டிச 18, 2025 12:43

ஆண்டுக்கு ரூ.500 கோடி வருவாயை விட்டு விட்டு மக்களுக்காக வந்திருக்கிறார்.... வருமான வரித்துறை கவனத்திற்கு.....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை