உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம்: இன்று வரை 1.53 லட்சம் பேர் மனு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம்: இன்று வரை 1.53 லட்சம் பேர் மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரி இன்று வரை 1.53 லட்சம் பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் நிறைவடைந்து, டிச.19ம் தேரித அனைத்து மாவட்டங்களிலும் வாக்காளர் வரைவு பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளதாகவும், 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rb2keleg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வரைவு வாக்காளர் பட்டியலானது தமிழகம் முழுவதும் உள்ள 75 ஆயிரம் ஓட்டுச்சாவடிகளில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது.இதை வாக்காளர்கள் பார்வையிட்டு வரும் சூழலில், அதில் நீக்கப்பட்டவர்கள் தங்கள் பெயரை பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்து வருகின்றனர்.டிச.19ம் தேதி முதல் இன்றைய தினம் வரை பெயர் சேர்ப்புக்கு படிவம் 6 மற்றும் 6 ஏ படிவங்களை நிரப்பி 1 லட்சத்து 53 ஆயிரத்து 571 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதற்கு ஆட்சேபனை தெரிவித்து படிவம் 7 ஐ நிரப்பி பேர் மனு அளித்துள்ளனர். இந்த விவரத்தை தமிழக தலைமை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

spr
டிச 24, 2025 04:14

வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படுவதோ, பட்டியல் தயாரிப்பதோ ஒரு பெரிய பிரச்சினையில்லை வாக்காளர் உரிமை கோரிப் பதிந்த பலர் இடம் மாற்றிச் சென்றாலும், இறந்தே போனாலும் அவர்கள் பெயரை முறையாக நீக்குவதில்லை. வாக்காளர் உரிமை கோரிப் பதிவதால் பல சலுகைகள் கிடைக்கும் என்பதால் அதனைக் கோருபவர்களுக்கு அதனை நீக்குவதால் ஆதாயமில்லை தேவையற்றது என்பதறிந்து அக்கறை காட்டுவதில்லை. அறியாமையும் ஒரு காரணம் அரசும் தேர்வாணையமும் ஊக்குவிப்பதில்லை. அரசியல்வியாதிகளுக்குக் கள்ள வாக்குப் போட வசதி. வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்கவென்று தேர்தல் ஆணையத்திற்கென்று பொறுப்புள்ள வாக்காளர் சீரமைப்புப் பணியாளர்கள் இல்லை என்பதோடு வலுக்கட்டாயமாகப் பணிக்கமர்ந்த தாற்காலிகமாக வரும் அரசு ஊழியர்கள் பலருக்கு அதன் துல்லியம் குறித்த அக்கறையுமில்லை. அதனால் அவர்கள் சரிபார்க்க வரும் போது வாக்காளர்களும், தனிப்பட்ட காரணங்களால் அவர்களைச் சந்திக்க இயலாமல் போவது இயல்பே. அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கூட ஒருவரையொருவர் அறிந்து கொள்ள விரும்பாத சூழலில் அவர்களும் விவரம் தர விரும்புவதில்லை. அந்நிலையில் அவர்கள் பெயர் விடுபட்டுப் போக வாய்ப்புள்ளது பெயர் விடுபட்டவர் தங்கள் பெயரை புதுப்பிக்க விண்ணப்பிப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்றே. இந்தச் சரிபார்ப்பு தேர்தல் தொடங்குவதற்கு ஒரு ஆறுமாதம் அவகாசம் விட்டு நடந்திருந்தால் குறைகள் கொஞ்சமாக இருந்திருக்கும். ஆனால் இதனை அரசியலாக்குவது மாபெரும் குற்றம். இதனைச் சீர் செய்யப் பல வழிகள் இருக்கின்றது. ஆனால் அரசு தொடங்கி அரசு அதிகாரிகள்,மற்றும் தேர்தல் ஆணையம் வரை எவருக்குமே பொறுப்போ அக்கறையோ இல்லை இப்படியெல்லாம் செய்ய முடியுமென்ற அறிவும் இல்லை. சிந்திக்கவும் இல்லை என்பதுதான் இதனை ஒரு பெரிய பிரச்சினையாக மாற்றுகிறது. கள்ள வாக்குப் போட வழியில்லை என்பதால் அரசியல்வியாதிகள் பிரச்சினையாக மாற்றுகிறார்கள்.


Ramesh Sargam
டிச 23, 2025 21:00

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம்: இன்று வரை 1.53 லட்சம் பேர் மனு. மீண்டும் இதில் 99 சதவிகிதம் நபர்கள் வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவில் நுழைந்திருக்கும் இஸ்லாமியர்களும், அதில் ஒரு சிலர் கிறிஸ்துவர்களாகவும் இருப்பார்கள்.


Suresh
டிச 23, 2025 19:04

ஆக ஒன்னரை லட்சம் மக்கள் தமிழகத்தில் பொறுப்பில்லாமல் இருந்திருக்கிறார்கள்


சாமானியர்
டிச 23, 2025 18:41

ஓட்டளிப்பவர் தான் எங்கே இருந்தாலும் தனது இருப்பிட தொகுதிக்கு வாக்களிக்கும் முறை கொண்டு வரவேண்டும். தீபாவளி, பொங்கல் மாதிரி சொந்த ஊரிற்கு போய்தான் ஓட்டளிக்க வேண்டுமா ? டிக்கட் விலை எகிறுடுமே ! இதனாலேயே சிலர் ஓட்டுப் போட மாட்டார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை