உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  4 மாநகராட்சிகள், 10 நகராட்சிகளுக்கு வார்டு ஒதுக்கீடு

 4 மாநகராட்சிகள், 10 நகராட்சிகளுக்கு வார்டு ஒதுக்கீடு

சென்னை: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நான்கு மாநகராட்சிகள் மற்றும் 10 நகராட்சிகளில் வார்டு வரையறை செய்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக காரைக்குடி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, நாமக்கல் ஆகிய நான்கு மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த மாநகராட்சிகளுக்கு தலா, 48 வார்டுகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதேபோல, ஸ்ரீபெரும் புதுார், மாமல்லபுரம், திருவையாறு, போளூர், செங்கம், கன்னியாகுமரி, சங்ககிரி, கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை ஆகிய, 10 நகராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த நகராட்சிகளுக்கு தலா 22 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி