உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத கல்லூரி கல்வி இயக்குநருக்கு வாரன்ட்!

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத கல்லூரி கல்வி இயக்குநருக்கு வாரன்ட்!

சென்னை: நீதிமன்ற உத்தரவை கடந்த மூன்றரை ஆண்டுகளாக அமல்படுத்த மறுத்ததோடு, நீதிமன்றத்திலும் ஆஜராகாமல் 'டிமிக்கி' கொடுத்து வந்த, தமிழக அரசின் கல்லுாரி கல்வி இயக்குநருக்கு, 'வாரன்ட்' பிறப்பித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் உள்ள நேசமணி நினைவு கிறிஸ்துவ கல்லுாரியில், இயற்பியல் துறையில் விரிவுரையாளராக, எல்.பத்மஜா என்பவர் நியமிக்கப்பட்டார்.

பதில் இல்லை

அதற்கு ஒப்புதல் வழங்கி, உரிய பணப் பலன்களை வழங்க வேண்டும் என, தமிழக கல்லுாரி கல்வி இயக்குநருக்கும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பதிவாளருக்கும், கடந்த 2022ம் ஆண்டு பிப்., 1ல் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xb4r1qea&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நீதிமன்றம் வழங்கிய நான்கு வார காலக்கெடுவுக்குள் உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி, மனுதாரர் பத்மஜா, கடந்த 2022 டிசம்பரில், உயர்கல்வித் துறை செயலர் கார்த்திகேயன், கல்லுாரி கல்வி இயக்குநர் எம்.ஈஸ்வரமூர்த்தி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பதிவாளர் ஜெ.சாக்ரடீஸ், கல்லுாரி தாளாளர்கள் டி.வினோத்குமார், பிரவீன் ஆகியோருக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு, பல முறை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டும், அதிகாரிகள் தரப்பில் உரிய பதிலளிக்கப்படவில்லை. இதையடுத்து, இந்த மனு குறித்து நேரில் ஆஜராகி, விளக்கம் அளிக்கும்படி, கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி, கல்லுாரி கல்வி இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டது; அவர் நேரில் ஆஜராகவில்லை. இந்த வழக்கு, நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே.சதீஷ்குமார் ஆஜரானார்.

அவகாசம்

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கி, உரிய பணப் பலன்களை வழங்கும்படி, கடந்த 2022ம் ஆண்டு பிப்., 1ல், இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. உத்தரவை நிறைவேற்ற நான்கு வாரம் அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும், நீதிமன்ற உத்தரவை கடந்த மூன்றரை ஆண்டுகளாக அமல்படுத்தவில்லை. மேலும், வழக்கில் நேரில் ஆஜராக உத்தரவிட்டும் ஆஜராகவில்லை; இது துரதிர்ஷ்டவசமானது மட்டுமல்லாமல், நீதிமன்ற அவமதிப்பு செய லும் கூட. எனவே, கல்லுாரி கல்வி இயக்குநரை, வரும் 21ம் தேதி நேரில் ஆஜர்படுத்தும் வகையில், ஜாமினில் வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பிக்கிறேன்.

பதிவுத்துறை

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மறுத்ததற்காக ஏன் தண்டிக்கக் கூடாது என்பது குறித்து, கல்லுாரி கல்வி இயக்குநர் விளக்கம் அளிக்க வேண்டும். அவருக்கு எதிராக பிறப்பித்த வாரன்டை செயல்படுத்த, அதிகாரி ஒருவரை நியமிக்கும் வகையில் இந்த உத்தரவு நகலை, சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு அனுப்பி வைக்க, உயர் நீதிமன்ற பதிவுத் துறைக்கு உத்தரவிடுகிறேன். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை வரும் 21க்கு தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

N S
நவ 13, 2025 20:26

திராவிட மாடல் தன்னிகரில்லா தமிழக அரசு "தவப்புதல்வன் மற்றும் பேரன்" ஆட்சியில் "அப்பாவின்" வழிகாட்டுதல் படி, கண்ணசைவை அறிந்து அரசு நிர்வாகம் நடந்து கொண்டிருக்கிற இந்நிலையில், அரசியல் சாசனமும், நீதிமன்ற உத்தரவுகளும் சில சமயங்களில் மதிக்க படாமல் போகலாம். மாணவர்களை நாளைய தலைவர்களாக உருவாக்க வேண்டிய ஒரு இயக்குனரகம் முன்னுதாரணமாக செயல்படுகிறது. அவ்வளவு தான்.


SUBBU,MADURAI
நவ 13, 2025 17:39

திமுகவின் வழக்கறிஞர் கைப்புள்ள R.S பாரதி உனக்கு அந்த கட்டதுரையை திட்டுவதற்கு சரியான நேரம் வாய்த்திருக்கிறது உன் தானை தலைவன் கருணாநிதி சொன்னது போல் நீதிபதிகள் ஒன்றும் வானத்தில் இருந்து குதித்து வந்தவர்கள் என்று வீர முழக்கமிட்டு பேட்டி கொடுத்து உன் அமைப்புச் செயலாளர் பதவியை தக்க வைத்துக் கொள்...


duruvasar
நவ 13, 2025 08:22

அரசும் அதன் அதிகாரிகளும் ஆடும் ஆட்டம் அதிகரித்துக்கொண்டே போகிறது. சட்டத்தை மதிக்காத ஆட்சிக்கு காட்டாட்சி என்று பெயர்


VENKATASUBRAMANIAN
நவ 13, 2025 08:21

இவரை பதவியை விட்டு நீக்க வேண்டும். இவர் திமுக அனுதாபியாக இருந்தால் எந்த நடவடிக்கையும் இருக்காது.


Sundaran
நவ 13, 2025 08:12

நாங்க அதுக்கு பயப்பட மாட்டோம். அரசு எங்களுக்கு பதவி உயர்வு தான் கொடுக்கும் .சட்டத்துக்கு எதிராக செயல் பட்டால் தான் இந்த அரசில் சலுகைகள் கிடைக்கும்


Gajageswari
நவ 13, 2025 06:07

நீதிமன்றம் குறைந்த பட்சம் 6 மாதம் சிறை தண்டனை விதிக்க வேண்டும்


Kasimani Baskaran
நவ 13, 2025 04:18

"நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மறுத்ததற்காக ஏன் தண்டிக்கக் கூடாது என்பது குறித்து, கல்லுாரி கல்வி இயக்குநர் விளக்கம் அளிக்க வேண்டும்" - நீதிமன்றமே சட்டத்தை அமல்படுத்தலாமா என்று கேட்பது பதிதாபம். வேலை செய்யத்தெரியவில்லை என்றால் டாஸ்மாக் வேலைக்கு போகலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை