உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணி விவகாரத்தில் யாராவது நிலையாக இருந்தது உண்டா? * கேட்கிறார் பழனிசாமி

கூட்டணி விவகாரத்தில் யாராவது நிலையாக இருந்தது உண்டா? * கேட்கிறார் பழனிசாமி

சென்னை:''கூட்டணி விவகாரத்தில், எந்த கட்சியாவது நிலையாக இருந்திருக்கிறதா; இவ்வளவு ஏன் தி.மு.க.,வும் அதன் கூட்டணி கட்சிகளும் நிலையாக இருந்திருக்கின்றனவா?'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.அவர் அளித்த பேட்டி:மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனான என் சந்திப்பை, ஊடகங்கள் தான் விமர்சனம் செய்கின்றன; வேறு யாரும் விமர்சனம் செய்யவில்லை. எதற்காக பார்த்தேன் என்பதை தெளிவாக சொல்லி விட்டேன்.இந்த சந்திப்பில், தமிழகத்தில் நிலவுகிற பிரச்னைகள் குறித்து கோரிக்கை மனு அளித்தோம். தேர்தல் கூட்டணி விவகாரத்தில், எந்த கட்சியாவது நிலையாக இருந்தது உண்டா? இவ்வளவு ஏன்... தி.மு.க.,வும் அதன் கூட்டணி கட்சிகளும் நிலையாக இருந்திருக்கின்றனவா? இதை யாராலும் சொல்ல முடியாது; காரணம் இது அரசியல். அரசியல் சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் இருக்கும். 2019ல் மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலுக்கு, பிப்., மாதம் தான், கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்டோம்; 2021 சட்டசபை தேர்தலிலும் அப்படித்தான்.தேர்தல் வரும்போது தான் அனைவரும் பேசி முடிவெடுக்க முடியும். கூட்டணி பற்றி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவரது, 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டால், நாங்கள் என்ன செய்வது? அது அவர்களின் விருப்பம். அ.தி.மு.க., கூட்டணி அமைக்கும்போது, அனைவருக்கும் தெரிவிக்கப்படும். தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்பது தான், எங்களின் ஒரே குறிக்கோள்; அதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !