உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டில்லியில் பழனிசாமி மிரட்டப்பட்டாரா?

டில்லியில் பழனிசாமி மிரட்டப்பட்டாரா?

டில்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, சந்தித்து தமிழகம் திரும்பிய பின், தமிழக எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி பேட்டி அளித்தார். அதில், கூட்டணி குறித்து கேட்ட கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் அளித்துள்ளார். ஆனால், தன்னுடைய எக்ஸ் பதிவில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் தான் கூட்டணி அமையும் என, அமித் ஷா கூறியுள்ளார். அப்படியென்றால், பா.ஜ., தலைமையில் தான் கூட்டணி. டில்லியில் மிட்டா மிராசுகளால், பழனிசாமி உருட்டல், மிரட்டல்களுக்கு ஆளாகி இருக்கிறார். இது போன்ற மிரட்டல்களுக்கு தி.மு.க., மிரளாது என்பது டில்லி ஜாம்பவான்களுக்கு தெரியும். ஆக, வளைந்து கொடுப்பவர்களைத்தான் வளைக்க முடியும் என்பது போல, பழனிசாமியை வளைத்துள்ளனர். டில்லியில் என்ன நடந்து என்பதை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையிடம் கேட்டால் சொல்லி விடுவார். ஆனால், பழனிசாமி சொல்ல மாட்டார்.சேகர்பாபு, தமிழக அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை