உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையா? எனக்கு தெரியாது என்கிறார் அமைச்சர் துரைமுருகன்

மகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையா? எனக்கு தெரியாது என்கிறார் அமைச்சர் துரைமுருகன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மகன் கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ' சோதனை குறித்து எதுவும் தனக்கு தெரியாது' என அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மகன் கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடைபெறும் நிலையில் சென்னையில் வக்கீல்களுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை மேற்கொண்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vfm17f0u&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின்னர், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'உங்களுக்கு எவ்வளவு தெரியுமா? அதுமட்டும் தான் எனக்கு தெரியும். எனக்கு யார் வந்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. யாரும் வீட்டில் இல்லை. இரண்டு வேலை காரங்க மட்டும் தான் இருக்கிறார்கள். சோதனை நடத்த வந்திருப்பது எந்த டிபார்ட்மென்ட் அதிகாரிகள் என்று தெரியவில்லை' என காரில் இருந்த படியே துரைமுருகன் பதில் அளித்து விட்டு சென்று விட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

ராமகிருஷ்ணன்
ஜன 03, 2025 20:48

நக்கல் நாயகன் நடிக்கிறாரு. நாங்க நம்பிட்டோம்.


sankaranarayanan
ஜன 03, 2025 18:50

நான் கோபாலபுரத்து விசுவாசி என்னை விட்டுவிடுங்கோ யானறியேன் பராபரமே என்றெல்லாம் சொல்லோவிட்டேனே இன்னுமா எனக்கு இந்த கொடுமைகள் .


naranam
ஜன 03, 2025 17:45

திருடனுக்கு தேள் கொட்டியது போலவா!


அப்பாவி
ஜன 03, 2025 17:44

அப்பாவுக்கு தெரியாம தனி ஆட்டையா இருக்குமோ?


M. PALANIAPPAN
ஜன 03, 2025 15:58

உப்பு தின்றால் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும்


Madras Madra
ஜன 03, 2025 15:16

இவருக்கு உடம்பெல்லாம் வாயி வாயெல்லாம் கொழுப்பு


SRITHAR MADHAVAN
ஜன 03, 2025 16:46

நாவில் குவிந்த கொழுப்பு. அகற்ற முடியாது


R.Balasubramanian
ஜன 03, 2025 15:08

இவருக்கு ஒன்றும் தெரியாதாம். நாம் நம்பணுமாம். நீட் கையெழுத்து போல ஒன்னும் தெரியவில்லை போலும்


xyzabc
ஜன 03, 2025 14:08

திராவிடம் ஒன்று தான் தெரியும். வேறு எது கேட்டாலும் தெரியாது என்று சொல்பவன் . மக்களை மண்டு ஆக்கியாச்சு


Kasimani Baskaran
ஜன 03, 2025 13:44

பழைய மாணவர் சங்கத்தலைவரை நெருங்குவதன் மூலம் தீம்க்காவை உடைக்க முடியும்?


Mani . V
ஜன 03, 2025 13:21

உனக்கு எதுதான் தெரியும்? நாட்டைப் பற்றிக் கேட்டாலும் "தெரியாது" என்பதுதான் பதில்.


சமீபத்திய செய்தி