உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் பேச்சில் இருந்தது வீரியமா? காரியமா? பேசியது சரியா? இது நல்ல முறையா? : இங்கு எழுதுங்கள் வாசகர்களே...

விஜய் பேச்சில் இருந்தது வீரியமா? காரியமா? பேசியது சரியா? இது நல்ல முறையா? : இங்கு எழுதுங்கள் வாசகர்களே...

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கட்சி துவங்கி 2 ஆண்டுகளில் இரண்டு மாநில மாநாடுகளை நடத்தி முடித்துள்ளார் நடிகர் விஜய். நேற்று மதுரையில் நடந்த மாநாட்டுக்கு 3 லட்சம் பேர் வந்திருக்கலாம் என்று உளவுத்துறை தமிழக அரசுக்கு அறிக்கை அளித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் 4 லட்சம் பேர் வரை வந்திருக்கலாம் என்று பொதுமக்கள் தரப்பில் பேசப்படுகிறது. தானாக சேர்ந்ததாக கூறப்படும் இந்த கூட்டம், ஓட்டாக மாறுமா என்பது இப்போதைக்கு தெரியாது. ஆனால், விஜய் பின்னால் அணிவகுக்க இளைஞர்களின் ஒரு பகுதி தயாராவதையே இது காட்டுகிறது.ஆனால் மாநாட்டில் விஜய் பேசிய பேச்சு எந்த அளவிற்கு பொது மக்களிடம் எடுபட்டது என்பது அந்த பொது மக்களுக்கே வெளிச்சம்.திராவிட கட்சி தலைவர்களின் நீண்ட நெடிய அடுக்குமொழி வசனங்களையும், வார்த்தை ஜாலங்களையும் கேட்டு பழகிய தமிழக மக்களுக்கு விஜய் பேச்சு கொஞ்சம் வித்தியாசமாக தெரிந்திருக்கும். அவரது பேச்சுக்கு வரவேற்பும் இருக்கிறது பல மாதிரியான விமர்சனங்களும் இருக்கின்றன.அவரது பேச்சில் கொள்கை இல்லை, கோட்பாடு இல்லை என்று ஒருசாராரும், திட்டங்கள் இல்லை, செயலாக்கம் இல்லை என்று ஒருசாராரும், தனது பலம் தெரியாமல் எப்படி இவரால் தொடர்ந்து மற்ற கட்சிகளுக்கு போட்டியை தரமுடியும் என்று ஒருசாராரும், விஜய் பேச்சு எளிமையாக, எதார்த்தமாக இருந்தது, வார்த்தை ஜாலம் எங்களுக்கு தேவையில்லை என்று ஒருசாராரும் சமூக வலைதளங்களில் பேசிக்கொள்கின்றனர்.விஜய் பேச்சு பற்றி தினமலர் இணையதளத்தில் வாசகர்களாகிய நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை நடுநிலையாக கருத்துகளை பதிவிடுங்கள். விஜய் பேச்சை படிக்க இந்த லிங்க்கை சொடுக்குங்கள்..https://www.dinamalar.com/news/tamil-nadu-news/vijay-announced-the-contest-between-dmk-and-tmc-at-the-madurai-conference/4013546


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 312 )

Kasi V
செப் 21, 2025 14:04

Weaaasst


baala
செப் 20, 2025 09:56

நடுநிலை என்ன சொல்லுகிறீர்கள்?


MARUTHU PANDIAR
செப் 14, 2025 11:31

இருக்கும் கட்சிகள் போதாதா? இவனை இயக்குவது ஒரு மிஷனரி என்று கூறுகிறார்கள். திடீரென்று முளைத்த இவனுக்கு பேச்சில் முதிர்ச்சியோ, உடல் மொழியோ, அரசியல் அறிவோ ,தலைவனுக்குரிய தகுதிகளோ தெளிவான கொள்கையோ செயல் திட்டமோ உண்டா?


Thirumal Kumaresan
செப் 11, 2025 09:36

எதுவும் தெரியாத ஒருவனை நம்பி எப்படி இவ்வளவு கூட்டம். மக்கள் இன்னும் முட்டாளாகத்தான் இருக்கிறார்கள் என்பது என் கருத்து. சினிமாவை வைத்து மக்களை ஏமாற்ற முயற்சிக்கும் ஒரு தலைவன். அதை நம்பி விட்டில் பூச்சிகளாய் மக்கள் நான் எனது மக்களை நினைத்து வருந்த மட்டும்தான் முடியும் வேதனை


Ambikapathy Muniaraj
செப் 01, 2025 10:18

நீங்கள் உங்கள் கட்சிக்காரங்களே அந்த விமானதில் இலவசமா அழைத்து செல்விர்களா


joe
ஆக 29, 2025 19:21

விஜய் சாதாரண முறையில்தான் பேசி உள்ளார் .இதை விட கேவலமாக ஆளும் அரசியல் வாதிகள் பேசி இருக்கிறார்கள் .


M Ramachandran
ஆக 28, 2025 17:25

. தமிழ்நாடெ கண்ணீ ரில் மிதக்குது. அடுத்த விடியல் உதையாமாகி விட்டது என்று. அன்னைக்கி சைக்கில் உத்தப்பா மகிழ்சாயாய் தான் இருந்தது.இப்போர் அதுவென பூதமாகி விட்டது எப்போ அது மூழுங்க போவு தோ தெரியலையயே? ஒரு உரையில் இரண்டு கத்தி அதாவது விடியல் இருக்க கூடாது. ஒன்று சூரியன் போல் அஸ்தனம் இன்னொன்று ஏசு பிரான் உயிர்த்தெழுவது போல் ஜோ என்ற சத்தத்துடன் எழுந்துடுச்சி.


M Ramachandran
ஆக 28, 2025 17:17

அவரின் சினிமாவில் காட்டுவது போல் சென்னையை சேர்ந்த குளத்தூரில் அல்லது சேத்து பட்டில். சும்மா பாஞ்சி பாஞ்சி அடிப்பார் எதிரிகளை. சினிமா வில்லன்கள் போல் எதிரிகள் ஓடி ஒளிவார்கள். 200 ஊபீஸ் களுக்கு கண்ணிலிருந்து கண்ணீர் தாரை தாரையயாக பெருகி ஓடும்.


M Ramachandran
ஆக 28, 2025 17:10

பைத்தியகரனை சுத்தியும் பலபேர். முக்கால் வாசி பேர் ஸ்டாலினின் 200 உபீஸ்.


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 24, 2025 00:24

மோடிக்கு வர்ற கூட்டத்தைப் போல நாலு மடங்கு அதிகம். அதான் ஒரே எரிச்சல்


முக்கிய வீடியோ