உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கழிவு பட்டாசில் தீ: மூவர் காயம்

கழிவு பட்டாசில் தீ: மூவர் காயம்

சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் கழிவு பட்டாஸில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.சிவகாசி அருகே அய்யனார்காலனியைச் சேர்ந்தவர்கள் கார்த்திக் 22, கருப்பசாமி 21, முத்துராஜ் 18. இவர்கள் செங்கமலப்பட்டியில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடினர். தொடர்ந்து அவர்கள் அதே பகுதியில் அமர்ந்து மது அருந்தி விட்டு சிகரெட் பிடிக்க தீக்குச்சியில் பற்ற வைத்து விட்டு தீக்குச்சியை வீசி எரிந்தனர். தீக்குச்சி அப்பகுதியில் கொட்டியிருந்த கழிவு பட்டாஸில் விழுந்து பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் மூவரும் காயமடைந்தனர். சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி