உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.489 கோடியில் அணைக்கட்டுகள் தடுப்பணைகள் கட்ட நீர்வளத்துறை திட்டம்

ரூ.489 கோடியில் அணைக்கட்டுகள் தடுப்பணைகள் கட்ட நீர்வளத்துறை திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ், திருக்கோவிலுார் அணைக்கட்டு மறுகட்டுமானம் உள்ளிட்ட, 48 பணிகள், 489 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன. புதிய நீர்ப்பாசன கட்டமைப்புகள் அமைத்தல், நீர்ப்பாசன கட்டமைப்புகளை புதுப்பித்தல், நிலத்தடி நீர் மேம்பாட்டு திட்டம், வெள்ள பாதுகாப்பு, அணைகள் மேலாண்மை திட்டம். கடலரிப்பு தடுப்பு திட்டம், நீர்நிலைகள் புனரமைப்பு திட்டம் போன்றவை, ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என, தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. நிர்வாக ஒப்புதல் அதன்படி, இத்திட்டத்தின் கீழ், 48 பணிகளை மேற்கொள்ள, 489 கோடி ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. திருப்பூர் மாவட்டம் பெரிய குமாரபாளையத்தில், உப்பாறு ஓடையில், 7.98 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட உள்ளது. மதுரையில் கவுண்டா நதியின் குறுக்கே, 5 கோடி ரூபாய் மதிப்பிலும்; விருதுநகர் காரியப்பட்டி அருகே குண்டாறு அணையின் குறுக்கே, 23.8 கோடி; கள்ளக்குறிச்சி வானபுரம் அருகே தென்பெண்ணையாற்றின் குறுக்கே, 75 கோடி; திண்டுக்கல் மாவட்டம் மாங்கரை ஆற்றின் குறுக்கே, 4.10 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் புதிய அணைக்கட்டுகள் கட்டப்பட உள்ளன. திருச்சி, திருவாரூர், பெரம்பலுார், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி மாவட்டங்களில் பழைய நீர் சேமிப்பு கட்டமைப்புகள் புனரமைத்தல், வெள்ள தடுப்பு சுவர் கட்டுதல், 'ரெகுலேட்டர்' கள் புதுப்பிப்பு உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களில், வைகை ஆற்றின் கரைகளில் நீர்வளத் துறை, 'லோகோ'வுடன் கூடிய எல்லை கற்கள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மறு கட்டுமானம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 'பெஞ்சல்' புயலில் பாதிக்கப்பட்ட திருக்கோவிலுார் அணைக்கட்டு, 130 கோடி ரூபாயில் மறுகட்டுமானம் செய்யப்பட உள்ளது. இவை உட்பட பல்வேறு மாவட்டங்களில், 489 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான நிர்வாக அனுமதி வழங்கி, நீர்வளத்துறை செயலர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுஉள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை