உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 5 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்க வழிவகை; வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

5 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்க வழிவகை; வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை: 5 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்க வழிவகை செய்யப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்கள் பின்வருமாறு:* முந்திரி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க ரூ.10 கோடியில் தமிழக முந்திரி வாரியம் அமைக்கப்படும்.* மானிய விலையில் சோலார் பம்ப்செட் வழங்கப்படும்.* பொதுமக்களுக்கு 6 காய்கறி விதை தொகுப்பு வழங்கப்படும்.* பனை சார்ந்த தொழில்களை ஊக்குவிக்க ரூ.1.65 கோடி ஒதுக்கீடு* பலா மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு.* ஊட்டச்சத்துள்ள வெண்ணைப்பழ சாகுபடியை தென்காசி, திண்டுக்கல், தேனி, கள்ளக்குறிச்சி, நீலகிரி, சேலம் மாவட்டங்களில் 500 ஏக்கரில் ஊக்குவிக்க ரூ.69 லட்சம் ஒதுக்கீடு.* 17,000 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்கப்படும்.* நல்லூர் வரகு (கடலூர்), வேதாரண்யம் முல்லை (நாகப்பட்டினம்), நத்தம் புளி (திண்டுக்கல்), ஆயக்குடி கொய்யா (திண்டுக்கல்), கப்பல்பட்டி கரும்பு முருங்கை (திண்டுக்கல்) ஆகிய 5 விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்க வழிவகை செய்யப்படும். இதற்காக ரூ.15 லட்சம் ஒதுக்கீடு.* சிறு, குறு விவசாயிகளின் பயனிற்காக 130 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்க ரூ.10.50 கோடி ஒதுக்கீடு* இ-வாடகை செயலி மூலம் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்குவதை வலுப்படுத்த ரூ.17.37 கோடி ஒதுக்கீடு.* காவிரி, வெண்ணாறு, வெள்ளாறு வடிநிலப்பகுதிகளிலும், கல்லணை கால்வாய்ப்பாசனப் பகுதிகளிலும் உள்ள 'சி' மற்றும் 'டி' பிரிவு வாய்க்கால்களில் 2,925 கிலோ மீட்டர் நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள ரூ.13.80 கோடி ஒதுக்கீடு.* புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்கிட, பழைய மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்றிட 1000 விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.1.50 கோடி ஒதுக்கீடு* 63,000 ஆயிரம் மலைவாழ் உழவர்கள் பயன் பெரும் வகையில் 22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு மலை வாழ் உழவர் முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்படும்.* சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரையில் உயிர்ம வேளாண் விளைபொருட்களுக்கு தர நிர்ணய ஆய்வகங்கள் அமைக்கப்படும். இதற்கு ரூ.6.16 கோடி ஒதுக்கீடு* காலநிலை மாற்றத்தினால் விவசாயம் மற்றும் சுற்றுசூழலில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள திறனுடைய கிராமங்கள் உருவாக்கப்படும். இதற்கு ரூ.1.35 கோடி ஒதுக்கீடு* நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.68 கோடி ஒதுக்கீடு* வேளாண்மைப் பொறியியல் துறை இயந்திரங்களைப் பயன்படுத்தி, 500 நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை தூர் வாருதல் மற்றும் 100 புதிய மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை உருவாக்க ரூ.2,75 கோடி ஒதுக்கீடு* திறந்த வெளி பாசன கிணறுகளை புனரமைக்க ரூ.2.50 கோடி ஒதுக்கீடு* வேளாண் விளைபொருட்களுக்கான 100 மதிப்புக்கூட்டு மையங்கள் அமைக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு.* 9 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் தலா 1000 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும். இதற்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு* தமிழகத்தில் அதிக வரத்துள்ள 50 உழவர் சந்தைகளில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த ரூ.8 கோடி ஒதுக்கீடு* உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு (FPO) ரூ.10 இலட்சம் வரை பொருளீட்டு கடன் வழங்கப்படும்.* இதுவரை 54,000 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் தற்போது வரை 10, 346 கோடி தொகையும், வட்டித் தொகையும் தமிழக அரசால் விடுவிக்கப்பட்டுள்ளன. 2025-26-ல், ரூ. 1,427 கோடி தள்ளுபடி செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Saai Sundharamurthy AVK
மார் 15, 2025 19:09

புவிசார் குறியீடு பெற்று தருவோம் என்பது ஸ்டிக்கர் ஒட்டும் வேலை தானே தவிர வேறு ஒன்றும் இல்லை.


B MAADHAVAN
மார் 15, 2025 15:33

கர்நாடகாவில் திறந்து விடும் காவிரியின் அளவு அப்படியே எல்லோராலும் முழுமையாக உபயோகப் படுத்தப் படுகின்றதா என்றால் இல்லை. பட்ஜெட்டில் ஒதுக்கப் படும் நிதி அப்படியே அந்தந்த செயல்களுக்கு முழுமையாக போய் சேருமா என்றால் இல்லை. பலர் ஆட்டையை போட்டு, ஒரு பொய் கணக்கைக் காட்டி, ஏனோ தானோ என்று ஒரு காரியத்தை செய்து விட்டு, விளம்பரத்திற்கு கூடுதலாக பணம் செலவு செய்து, யாருமே செய்யாத காரியத்தை செய்து விட்டோம் என்று ஒரு மாயையை உண்டுபண்ணி, பொய் கணக்கு காட்டி பணம் சம்பாதிக்கும் வழி என்று தான் நம்பத் தோன்றுகிறது. விவசாயிகளுக்கு 100 சதவிகிதம் பட்ஜெட்டில் ஒதுக்கப் பட்ட பணம் முறையாக போய் சேர்ந்து, பூரண பலன் அடையும்படி செய்தால் உண்மையில் மகிழ்ச்சி.


Balaji Radhakrishnan
மார் 15, 2025 12:33

ஒரு ஆண்டில் தேர்தல் வரப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் சொல்ல பட்டிருந்த எந்த திட்டத்தை முழுமையாக செய்யல் படுத்த முடியாது. திட்டங்கள் சொல்லி கொள்ளை அடிப்பார்கள்.


ஆரூர் ரங்
மார் 15, 2025 12:31

புவிசார் குறியீடு அளிக்க மாநில அரசுக்கு பவர் இருக்கா? இல்லை வழக்கமான ஸ்டிக்கரா?


ஆரூர் ரங்
மார் 15, 2025 12:29

திமுக போட்ட 17 பட்ஜெட் களுக்குப் பிறகும் ஒவ்வொரு ஆண்டும் கொள்முதலுக்கு வரும் தானியங்கள் மழையில் நனைந்து வீணாகின்றன. இவங்க என்னடான்னா மாநில பட்ஜெட்டில ரயில், விமான தளம், ராக்கெட் ஆராய்ச்சி ன்னு கலர் கலரா ரீல் விடுறாங்க.


நாஞ்சில் நாடோடி
மார் 15, 2025 12:20

திராவிட மாடல் ஆட்சியின் கடைசி பட்ஜெட்...


Dharmavaan
மார் 15, 2025 11:47

இதில் எவ்வளவு உண்மை யில் வரும் ஆண்டவனுக்கே வெளிச்சம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை