உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாங்க இருக்கோம் வாங்க; அழைக்கும் பழனிசாமி

நாங்க இருக்கோம் வாங்க; அழைக்கும் பழனிசாமி

சென்னை : 'மழை நீர் வடிகால் பணிகள் என, தி.மு.க., ஆட்சியாளர்கள் எடுத்த 'போட்டோ ஷூட்' வெற்று விளம்பரங்கள்தான் என்பதை, சென்னை சாலைகள் அம்பலப்படுத்தி உள்ளன' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:'பெஞ்சல்' புயல் காரணமாக, சென்னையில் கன மழை பெய்து வருகிறது. மழை நீர் வடிகால் பணிகள் என்று, தி.மு.க., ஆட்சியாளர்கள் எடுத்த, 'போட்டோ ஷூட்'கள் வெற்று விளம்பரங்கள்தான் என்பதை, இன்றைய சென்னை சாலைகள் அம்பலப்படுத்தி உள்ளன.இனி இவர்களை நம்பி, எந்தப் பயனும் இல்லை. எனது அறிவுறுத்தலின்படி, அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி சார்பில், 'ரேப்பிட் ரெஸ்பான்ஸ் டீம்' அமைக்கப்பட்டு உள்ளது. சென்ன மக்கள், இந்த கடுமையான தருணத்தில், தங்களுக்கு தேவையான உதவிகளை, அ.தி.மு.க., தன்னார்வலர்களை எந்நேரமும் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை