உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: வேங்கைவயல் வழக்கில் மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்!

சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: வேங்கைவயல் வழக்கில் மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்!

சென்னை: '' வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவை கலந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய இவ்வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும்,'' என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில், 2022ம் ஆண்டு டிச., 26ல், குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை, இரண்டு ஆண்டுக்கு மேலாக, சி.பி.சி.ஐ.டி., விசாரித்து வருகிறது. விசாரணை முடிந்து, புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. குற்றப்பத்திரிகை தொடர்பாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில், வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவை கலந்த விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு உள்ளது. முத்துக்கிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் இந்த பாதகச்செயலை செய்துள்ளனர். முரளிராஜா பொய்த்தகவல் பரப்பியுள்ளார். முத்துக்காடு பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குற்றம் செய்துள்ளனர். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vnmeu84i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவை கலந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் ஒருவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தாங்கள் குடிக்கும் தண்ணீரில் அவர்களே மனிதக்கழிவை கலந்திருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதாக இல்லை. சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், எப்படியாவது இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்ற நிர்ப்பந்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சமூக மக்களே இதற்கு காரணம் என்பது சரியல்ல என்பதை சுட்டிக் காட்டுகிறேன்.எனவே, இத்தகைய வன்கொடுமை தொடர்பான வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய இவ்வழக்கை, சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்குமாறு தமிழக அரசை மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

திருமாவளவன்

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் கூறியதாவது: சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் ஏற்கக்கூடாது. விசாரணையை தமிழக அரசே சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மூவரை குற்றவாளிகள் எனக்கூறியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. உண்மையான குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் நடவடிக்கை எடுத்துள்ளதாக தோன்றுகிறது. சி.பி.ஐ., விசாரணைக்கு கோர்ட் உத்தவிடுமோ என்ற ஐயத்தில் சி.பி.சிஐ.டி., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Kulandai kannan
ஜன 25, 2025 13:24

தம்பி, இன்னும் 200 ரூபாய் பேட்டா வரலை.


Naga Subramanian
ஜன 25, 2025 09:09

நல்லதொரு திராவிட அரசை பார்த்து மக்கள் கேட்கும் 2 பிரதான கேள்விகள்: 1 யார் அந்த சார்? 2 ஆய் போனது யார்? இதற்கு பதில் சொல்லாத வரையில், செல்லமான தோழர்கள், தனது பெட்டியின் அளவை உயர்த்த திட்டமிட்டது போன்று தெரிகிறது.


Mani . V
ஜன 25, 2025 05:56

செஞ்ச்சட்டை தோழர்கள் பெட்டிக்கு அடி போடுகிறார்கள்.


D.Ambujavalli
ஜன 25, 2025 05:53

‘இந்த எதிர்க்கட்சிகள் தொல்லை தாங்கவில்லை யாராவது சிலரைப் பிடித்துப் போட்டு கேஸை முடித்துத் தொலையுங்கப்பா. தேர்தல் போது ஆளாளுக்கு இதை வைத்தே கிழித்துத் தொங்கவிடுவாங்க’ என்று மேலிடத்து உத்தரவு வந்திருக்கும் கைக்கு கிடைத்தவர்களை மாட்டிவிட்டு அக்கடா என்று இருக்கப்பார்த்தால், இவர் வேறு சி பி ஐக்குப் போ என்று புது பூதத்தைக் கிளப்புகிறார் …..


theruvasagan
ஜன 24, 2025 22:09

குற்றவாளி யாருன்னு சோழி உருட்டி பார்த்து கண்டுபிடிக்க ரெண்டு வருசம் ஆயிப்போச்சாம்.


m.n.balasubramani
ஜன 24, 2025 21:50

25 கோடி பத்தாது , எதிர்பார்ப்பு 100 கோடி , அறிகுறி , வேறு என்ன , கம்யூனிசம் செத்து வெகு வருடங்கள் ஆச்சு , சூரை புலிகள் எங்கே காணோம் . சுப்பராயன் , வெங்கடேசன் , பால பாரதி , ஹி ஹி


sridhar
ஜன 24, 2025 21:24

யார் யார் குற்றவாளியாக இருக்கலாம் , யார் யார் இருக்கக்கூடாது என்று கூட ஒரு கட்சி சொல்லமுடியுமா


SIVA
ஜன 24, 2025 20:46

போட்டோவுல இருக்கும் நபர் போட்டிருக்கும் தூண்டு காவி கலரில் உள்ளது அதனால் அவரை சங்கி என்று சொல்லி ஹாஸ்டேக் செய்து இரு நூறு ஓவா பெற்று கொள்ளுங்கள் ....


Ramesh Sargam
ஜன 24, 2025 20:33

இப்பொழுது வேங்கைவயல் மக்கள் எந்த தண்ணீரை குடிக்கின்றனர்? அது எங்கிருந்து அவர்களுக்கு கிடைக்கிறது?


Velayutham rajeswaran
ஜன 24, 2025 20:31

இன்னும் ஒரு வருடம் கழித்து கேட்பது தானே ஏன் இவ்வளவு அவசரம்


சமீபத்திய செய்தி