உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எங்களால பணி செய்ய முடியல பொள்ளாச்சி நகராட்சியில் குமுறல்

எங்களால பணி செய்ய முடியல பொள்ளாச்சி நகராட்சியில் குமுறல்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சியில், நேற்று அதிகாரிகள், ஊழியர்கள் ஒன்றாக கூடி, பணிகளை புறக்கணித்து நகராட்சி கமிஷனர் கணேசனை சந்தித்து முறையிட்டனர்.

அதிகாரிகள், ஊழியர்கள் பேசியதாவது:

பொள்ளாச்சி நகராட்சியில், கவுன்சிலர்கள், கவுன்சிலர்களின் கணவர்கள், உறவினர்கள் தலையீட்டால், நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் வேலை செய்ய முடியவில்லை. குடிநீர் இணைப்பு வழங்க வேண்டுமென்றால், நகராட்சிக்கு பணம் கட்டிய பின்னரே இணைப்பு வழங்க முடியும். ஆனால், பணம் கட்டுவதற்கு முன்பே, வேலை செய்ய சொல்லி கவுன்சிலர்கள் வற்புறுத்துகின்றனர்.கேள்வி எழுப்பினால், மிரட்டும் தொனியில் பேசுகின்றனர். பொது இடத்தில் அத்துமீறி வைத்த பிளக்ஸ் பேனரை அகற்றுவதில் கூட தலையீடு அதிகரித்துள்ளது.புதிதாக கட்டடம் கட்டும் உரிமையாளர்களிடம் நேரடியாக பேசினால், உடனே சம்பந்தப்பட்ட கவுன்சிலர் அல்லது அவரது கணவர் போனில் தொடர்பு கொண்டு, மக்களிடம் நேரடியாக நீங்க பேசக்கூடாது. எங்கள் வாயிலாகத்தான் பேச வேண்டும் என கூறுகின்றனர். ஒவ்வொருரிடமும் பேரம் பேசுகின்றனர்.குப்பை அகற்றுவதிலும் தலையிட்டு, இடைஞ்சல் செய்கின்றனர். தேர்தல் நெருங்குவதால், வரி வசூலிக்க வேண்டாம் என்கின்றனர். அன்றாட பணிகளை செய்வதைக்கூட, அவர்களைக் கேட்காமல் செய்யக்கூடாது எனக் கூறுகின்றனர். ஒவ்வொரு நாளும் மன உளைச்சலுடன், அச்சத்துடன் வேலை செய்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.நகராட்சி கமிஷனர் கணேசன் பேசுகையில், ''அதிகாரிகள், கவுன்சிலர்கள் இணைந்து பணியாற்றினால் தான் மக்களுக்கான பணியை செய்ய முடியும். இது குறித்து, நகராட்சி தலைவரின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Aro
ஜூலை 15, 2025 12:49

இவர்கள் ஒழுக்க சீலர்கள் போல கவுன்சிலர்கள் மேல் குற்றம் சாட்டுகிறார்கள். இவர்கள் லஞ்சம் வாங்காமல் பணி செய்து அவர்களை கேள்வி கேட்கலாம்.


MGM Basha
ஜூலை 09, 2025 20:42

பொள்ளாச்சி நகராட்சி என்று ஒன்று இருக்கிறதாக தங்களது பத்திரிகை செய்தி மூலமாக தான் தெரிகிறது. எங்கு பார்த்தாலும் குப்பை , சாக்கடை நீர் குளங்கள் , குண்டு குழி சாலை ஒன்றும் சொல்வதற்கு இல்லை. ஊராட்சியாக மாற்றி விடலாம். மத்திய அரசு நிதி மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரடி நிர்வாகம் கிடைக்கும்


Muralidharan S
ஜூலை 08, 2025 12:28

60 வருடங்களாக திராவிஷ கட்சிகளை ஒவ்வொரு தேர்தலிலும் ஆதரிக்கும் அரசு ஊழியர்கள் இப்பொழுது குமறுவதில் அர்த்தம் இல்லை.. Hand in Gloves என்று கூறுவதை போலத்தானே திராவிஷங்களுடன் இனைந்து செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.. இந்த குமரல் உண்மை என்றால், குமறுவதை விட்டு, திராவிஷங்களுக்கு பணியாற்றாமல், திராவிஷன்களின் மிரட்டலுக்கு அஞ்சாமல் நேர்மையாக மக்களுக்காக, மக்கள் நலனுக்காக, நாட்டு நலனுக்காக மட்டும் பணியாற்றுங்கள்.. நேர்மையான மக்கள் துணை நிற்பார்கள் உங்களுடன்...


raja
ஜூலை 08, 2025 08:44

கூத்து கட்டுகிறவன் ஆட்சியில் கோமாளிகளுக்கு எல்லாம் கொண்டாட்டம்...விடியல் வந்து விட்டது என்று டாஸ்மாக் சரக்கடித்து குதூகலித்து கொண்டாடுங்க மக்கா..


kannan sundaresan
ஜூலை 08, 2025 07:10

பொள்ளாச்சி மட்டும் இல்லை, தமிழகத்தின் அநேக இடங்களில் இதேதான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை