உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எதிர்பார்த்தோம், ஏமாந்தோம் இனி போராட்டம் தான்: முரசு கொட்டும் அரசு ஊழியர்கள்

எதிர்பார்த்தோம், ஏமாந்தோம் இனி போராட்டம் தான்: முரசு கொட்டும் அரசு ஊழியர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: தி.மு.க., ஆட்சி நான்கரை ஆண்டுகளைத் தாண்டியும் இதுவரை தங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாததால் போராட்டங்களை முன்னெடுப்பது என அரசு ஊழியர்கள் சங்கங்கள் முடிவு எடுத்துள்ளன. இதுகுறித்து மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில செயலாளர் ரமேஷ், பொதுச்செயலாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் கூறியதாவது: தி.மு.க., ஆட்சிப்பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகளாகியும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. அரசு துறைகளில் 4 லட்சம் காலி பணியிடங்களுக்கு மேல் உள்ளன. இதனால் பணிப்பளுவுடன் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். கடந்த ஜூலை 1 முதல் அகவிலைப்படி உயர்வை பீகார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள்கூட அறிவித்தும் தமிழகத்தில் அறிவிக்கவில்லை. இதுபோன்ற 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நவ., 18 ல் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம், 1.7.25 முதல் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வை நிலுவையுடன் வழங்க வலியுறுத்தி, டிச., 4, 5 ல் சென்னையில் உண்ணாவிரதம், 2026 ஜனவரி 18 முதல் ஜன., 30 வரை பிரசார இயக்கம், ஜன., 31ல் சென்னையில் ஆயத்த மாநாடு, அதே ஜனவரியில் சென்னையில் கோரிக்கை பேரணி, பிப்., 10 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் என தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் பாஸ்கரன், பொதுச் செயலாளர் சீனிவாசன் கூறியிருப்பதாவது: தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்து அரசு ஊழியர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றனர். ஆனால் எதிர்பார்த்தது போலின்றி முற்றிலும் முரண்பாடான செயல்பாடுகளை சந்தித்து வருகிறோம். கடந்த ஆட்சி கோரிக்கைகளை பேசவில்லை என்றால் இப்போது அழைத்துப் பேசி இல்லை. அரசு ஊழியர் குடும்பங்களை கருத்தில் கொள்ளாமல் கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை 5 சதவீதமாக குறைத்துள்ளது. அதனால் சமரசமற்ற போராட்டத்தை கையில் எடுப்பதைத் தவிர வேறுவழியில்லை. இதற்காக நவ., 18 ல் வேலை நிறுத்தம், நவ., 24 முதல் 28 வரை பிரசாரம், டிச., 4ல் மாவட்ட தலை நகரங்களில் மறியல், 2026ல் ஜனவரி முதல் வாரம் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்த உள்ளோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

visu
நவ 10, 2025 15:28

ஜெயலலிதா போல ஒன்றரை லட்சம் பேரை டிஸ்மிஸ் செய்து பணிகள் வேலையில்லா இளைஞர்களுக்கு வழங்குவோம் என்றால் பயனுள்ளதாக இருக்கும்


தத்வமசி
நவ 10, 2025 14:12

முதலில் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு ஒழுங்காக வந்து பாடம் நடத்துங்கள். ஆளும் கட்சிக்கு துதிபாடியாக இருந்து உங்கள் வேலைகளை மட்டும் செய்து கொள்ளாதீர்கள்.


நரேந்திர பாரதி
நவ 10, 2025 13:00

இந்த ஜாக்டோ/ஜியோ கொத்தடிமைகளால்தான் சென்ற முறை தமிழ்நாட்டிற்கு "விடியல்" கிடைத்தது இந்த முறையும் கண்டிப்பாக இன்னொரு "விடியலுக்கு" உதவுவார்கள்


நரேந்திர பாரதி
நவ 10, 2025 13:00

இந்த ஜாக்டோ/ஜியோ கொத்தடிமைகளால்தான் சென்ற முறை தமிழ்நாட்டிற்கு "விடியல்" கிடைத்தது இந்த முறையும் கண்டிப்பாக இன்னொரு "விடியலுக்கு" உதவுவார்கள்


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 10, 2025 12:57

நாங்க கூட நீங்க நேர்மையா இலஞ்சம் வாங்காம கழகத்துக்கு துணை போகாம ஒழுங்கா வேலை பார்ப்பீங்கன்னு எதிர்பார்த்தோம், ஏமாந்தோம். இனி உங்களை எதிர்த்து போராட்டம் தான் பண்ணனும் போல இருக்கு.


M Ramachandran
நவ 10, 2025 12:19

உங்க துட்டெல்லாம் குடும்ப சொத்தாக்கி ஜீரணமாகி விட்டதால் இனி ஸ்டாலினிடம் உங்க பப்பு மிரட்டல் ஓன்றும் செய்ய இல்லாது.


N S
நவ 10, 2025 11:33

ஒன்றும் நடக்கப்போவதில்லை.. கண் கெட்ட பின் ....


sundarsvpr
நவ 10, 2025 10:47

அரசு ஊழியர்களுக்கு பச்சை துரோகம் செய்தது முத்துவேல் கருணாநிதி தலைமையான தி மு க அரசு. மத்திய அரசு விகித்த விகிதாரத்தில் அக விலைப்படி வழங்காமல் ரூபாய் 10 மட்டும் இரண்டுதடவை வழங்கியது. இதனால் இன்று வரை கணிக்கிட்டு பார்த்தால் அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் இழப்பு. இதனை கேட்டு வாங் அரசு ஊழியர்கள் போராடவேண்டும். அண்ணா தி மு க எம் ஜி ஆர் தான் மத்திய அரசு விகித்த % படி அக விலை படி வழங்க ஆணையிட்டார். இன்றய அரசுக்கு முக்கிய வேலை மோடியின் புகழை குறைத்திட மத்திய அரசை பொருளற்று விமர்சிப்பது.


Manyam
நவ 10, 2025 10:03

தனியார் மேலாண்மைக்கு கீழ் அரசு அலுவலகங்கள் கொண்டு வரப்பட வேண்டும். அரசு ஊழியர்களின் வேலை நேரம் கட்டாயம் 8 மணி நேரமாக்கப் படவேண்டும்.


Barakat Ali
நவ 10, 2025 09:57

ஜெ ஆட்சியில் கருணாநிதியால் அரசு ஊழியர்கள் போராட்டம் தூண்டப்பட்டது ....


முக்கிய வீடியோ