உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அச்சமோ, பதற்றமோ எங்களுக்கு இல்லை

அச்சமோ, பதற்றமோ எங்களுக்கு இல்லை

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மீது தி.மு.க.,விற்கு எவ்வித அச்சமோ, பதற்றமோ கிடையாது. வரும் பிப்ரவரியில், சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நிலையில், அவசரமாக மேற்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. எஸ்.ஐ.ஆர்., வாயிலாக, பா.ஜ.,வின் தேர்தல் முறைகேடு திட்டம் தமிழகத்தில் நிறைவேறாது. தி.மு.க., ஒருபோதும், போலி வாக்காளர்கள் வாயிலாக வெற்றி பெறவில்லை. தி.மு.க.,வின் அடித்தளம் உறுதியாக இருக்கிறது. அதே நேரத்தில், தேர்தலை நம்பிக்கையுடன் சந்திக்க முடியாததால், பல்வேறு குற்றச்சாட்டுகளை அ.தி.மு.க., கூறி வருகிறது. அ.தி.மு.க., தலைமை மீது அக்கட்சியின் தொண்டர்களுக்கே நம்பிக்கை இல்லை. அக்கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என மக்களும் நினைக்கவில்லை. -- பெரியசாமி தமிழக அமைச்சர், தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
நவ 11, 2025 05:39

சர்க்காரியா கமிஷனுக்கே சர்க்கரை கொடுத்த தலைவனின் வழியில் வந்த இந்த கொள்ளைக் கூட்டம் என்று அச்சப்பட்டுள்ளது, இப்பொழுது அச்சப்பட?


புதிய வீடியோ