உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நமக்கு மரியாதை இல்லை

நமக்கு மரியாதை இல்லை

நமக்கு மரியாதை இல்லை பெரம்பலுார், தென்சென்னை, சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களின் தலைவர்கள், தி.மு.க., எப்போதுமே கூட்டணி கட்சிகளுக்கு உரிய மரியாதை அளிப்பது இல்லை என குற்றம் சாட்டினர். அவர்கள் கூறியதாவது:திருமாவளவனுக்கும், தமிழிசைக்கும் மரியாதை கொடுக்கிற தி.மு.க., அமைச்சர்கள், காங்கிரஸ்காரன் என்றால் கண்டுகொள்வதே இல்லை. ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவிக்க செல்லும்போது கூட, நம் கட்சியினர் ஓரங்கட்டப்படுகின்றனர். சால்வையை போர்த்த வேண்டாம்; கையில் கொடு என்கின்றனர். அமைச்சர்களும், அதிகாரிகளும் நாம் வைக்கும் எந்த கோரிக்கையையும் செய்து கொடுப்பதில்லை. எனவே, உள்ளாட்சி தேர்தலில் அவர்களுடன் கூட்டணி தேவையில்லை; தனித்து போட்டியிடலாம். டில்லி தலைவர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்தால், கட்சிப் பதவி கிடைக்கிற நிலை நம் கட்சியில் இருக்கிறது. இது ஒழிய வேண்டும். தகுதி படைத்தவர்களுக்கு பதவி தர வேண்டும். மாவட்ட தலைவர்களை மாற்றக் கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ