உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிபிஐ என்றால் என்னவென எங்களுக்கு தெரியும்: சொல்கிறது திமுக

சிபிஐ என்றால் என்னவென எங்களுக்கு தெரியும்: சொல்கிறது திமுக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் அன்றும், இன்றும் சிபிஐ விசாரணைக்கு நாங்கள் (திமுக) கோரவில்லை; சிபிஐ என்றால் என்னவென எங்களுக்கு தெரியும்'' என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நீதிமன்றம் ஏதோ நிரபராதி என விடுதலை செய்துவிட்டதுபோல் இபிஎஸ் பேசியிருக்கிறார். அதிமுக ஆட்சிக்காலத்தில் அவரது உறவினருக்கு கொடுத்த டெண்டரில் முறைகேடு என லஞ்ச ஒழிப்புத்துறையில் திமுக சார்பில் புகாரளிக்கப்பட்டது. டெண்டர் வழக்கில் திமுக சார்பில் சிபிஐ விசாரணை கோரவில்லை; எஸ்.ஐ.டி விசாரணையை தான் கோரினோம். டெண்டர் வழக்கில் பல்வேறு சிக்கல் இருக்கின்ற காரணத்தினால் சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் தான் உத்தரவிட்டது. அன்றும், இன்றும் நாங்கள் சிபிஐ விசாரணை கோரவில்லை. சிபிஐ என்றால் என்னவென எங்களுக்கு தெரியும். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் விசாரணை துரிதமாக நடைபெறவே சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. உண்மைக்கு புறம்பான தகவல்களை இபிஎஸ் கூறி வருகிறார். இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

s chandrasekar
ஜூன் 27, 2024 21:01

இவனுக்கு தெரிந்தது ....


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 26, 2024 22:58

மத்திய உள்துறை சி பி ஐ விசாரணைக்குப் பரிந்துரைக்க வாய்ப்பில்லை.. ஆகவே மக்கள் பட்டு திருந்துவார்கள்.. இன்னும் ஐம்பதாண்டுகள் கழித்து .....


Ramesh Sargam
ஜூன் 26, 2024 22:22

அப்படியா? என்ன என்ன தெரியும் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்?


adalarasan
ஜூன் 26, 2024 22:06

உங்களுக்கு தெரியும் இல்ல? அப்புறம் என்ன பயம்,,, ஓத்துகொள்ளுள்கள், மடியில் கணம் இல்லைன்னா. ..?


Ramesh Sargam
ஜூன் 26, 2024 21:36

திருட்டு திமுகவினரை ஊரே அறியும்.


Rajasekar Jayaraman
ஜூன் 26, 2024 20:51

நீ சொல்லும் சிபிஐ காங்கிரஸ் ஓடது இந்த சிபிஐ பாஜக ஓடது உமக்கு தெரியாது மோடி தெரிய வைத்து விடுவார்.


M Ramachandran
ஜூன் 26, 2024 20:31

அப்போ ஏன் சும்மா கூவுற. பயப்படாமல் வரட்டுமேயென்று சொல்ல வேண்டியது தானே.


Kuppan
ஜூன் 26, 2024 20:05

கள்ளக்குறிச்சி கள்ள சாராய விவகாரத்தில் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும் என்பதால் சிபிஐ வேண்டாம் என்பதற்கு எப்படியெல்லாம் கோமாளி வேடம் போட வேண்டியதா இருக்கு.


Kuppan
ஜூன் 26, 2024 19:56

ஒரு ஊழல் பண்ணத்துக்கே 7 பாராளுமன்ற தொகுதிகளிலும் தோல்வியை டெல்லி மக்கள் கொடுத்து உள்ளார்கள், அனால் திராவிட மட்டைகள் பரம்பரையா ஊழலை தவிர வேறு எதுவும் செய்யாத விடியல் கும்பலுக்கு 40 ஐயும் வாரி கொடுத்து உள்ளார்கள் .


bal
ஜூன் 26, 2024 19:40

ஆமாம் நாங்க கோர்ட் வளாகத்திலேயே தீ வைத்து ஆதாரத்தை அழித்தவர்கள். எங்களால் சிபிஐ எப்படி சமாளிப்பதென்று தெரியும். ஊழல் செய்து மாட்டாமல் இருப்பது எப்படி என்று திமுக நன்றாக கற்றுக்கொடும்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி