பணத்தை வைத்து ஆட்சிக்கு வருவதை தடுக்க வேண்டும்
அரசியல் என்பது ஒரு அறிவியல். தலித் மக்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கி உள்ளனர். 2026ல், தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.தாய்மொழி தமிழை அனைவரும் படிக்க வேண்டும். வணிக ரீதியாக வெற்றி அடையக்கூடிய மொழியாக உலகம் முழுவதும் ஆங்கிலம் உள்ளது.நம்மிடம் ஒரு மொழியை திணிக்கக்கூடாது. தேர்தலில் வெற்றி பெற்று ஊழல் செய்து விட்டு ஓட்டுக்கு ரூ.3 ஆயிரம் கொடுப்பது, சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. பணத்தை வைத்து ஆட்சிக்கு வருவதை தடுக்க வேண்டும். கனிமவள சுரண்டல் தடுக்கப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் வருமானம் ஏழை மக்களின் திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும். டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகம் உருவாக்கப்படும்; அதன் வழியாக அமைதி உருவாகும். ஆதவ் அர்ஜுனா, தேர்தல் மேலாண்மைப் பிரிவு செயலர், த.வெ.க.,