உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மொழி மற்றும் கலையை காக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

மொழி மற்றும் கலையை காக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''எந்த ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல், மொழிக்கும், கலைக்கும் உண்டு; இந்த இரண்டையும் கண்கள் போல காக்க வேண்டும்'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.முத்தமிழ் பேரவை பொன்விழா ஆண்டு, இசைவிழா, விருதுகள் வழங்கும் விழா, சென்னையில் நேற்று நடந்தது. பேரவை செயலர் அமிர்தம் வரவேற்றார்.நடிகர் சத்யராஜுக்கு, கலைஞர் விருது; டி.கே.எஸ். மீனாட்சி சுந்தரத்திற்கு, ராஜரத்னா; ஆண்டாள் பிரியதர்ஷினிக்கு, இயல் செல்வம்; காயத்ரி கிரிஷ்சுக்கு, இசைச் செல்வம்; திருக்கடையூர் டி.எம்.எம்.உமாசங்கருக்கு, நாதஸ்வர செல்வம்; சுவாமிமலை குருநாதனுக்கு, தவில் செல்வம்; சோமசுந்தரத்துக்கு, கிராமிய கலைச்செல்வம்; பார்வதி ரவிக்கு, நாட்டிய செல்வம் விருது வழங்கப்பட்டது.முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கி பேசியதாவது:முத்தமிழ் பேரவை கருணாநிதியால் துவக்கப்பட்டது. இந்த ஆண்டில் கலைஞர் விருது, சத்யராஜுக்கு வழங்கப்பட்டது மகிழ்ச்சி. அவர் கருணாநிதியின் கனல் தெறிக்கும் வசனத்தை பேசி நடித்தவர். கலையுலகில் சுயமரியாதை எண்ணத்தை வளர்த்தவர். திராவிட சிந்தனைகளை மறைக்காமல், துணிச்சலாக பேசுபவர். எம்.ஜி.ஆரிடம் நல்ல மரியாதை வைத்திருப்பவர். கருணாநிதி மீது இருக்கும் மரியாதையையும் மறைக்காதவர். இதுதான் அவருக்குரிய பெருமை. இயல், இசை, நாடகம் என மூன்று தமிழிலும், தமிழகத்தில் முத்திரை பதித்தவர் கருணாநிதி. கருணாநிதி பேச்சில் இசைநயம் இருக்கும். அவர் எழுதுவதை வாசித்தால் இசை போல் இருக்கும். பொதுக்கூட்ட மேடையில், கருணாநிதி உணர்ச்சி பிழம்பாக பேசும் போது, நாடகத்தமிழை நேரில் பார்க்கலாம்.இப்படி முத்தமிழாக வாழ்ந்தவர் கருணாநிதி. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது நம் முழக்கம். அந்த வரிசையில் இசையிலும் தமிழ் ஒலிக்க வேண்டும். சிறக்க வேண்டும்.ஜாதி, மதம் என்றும், அன்னிய மொழிகள் வாயிலாகவும், பல்வேறு பண்பாட்டு தாக்குதல் நடந்தாலும், எல்லாவற்றையும் தாங்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு. எந்த ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல் மொழிக்கும், கலைக்கும் உண்டு. இந்த இரண்டையும் கண்கள் போல் காக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

V RAMASWAMY
நவ 25, 2024 18:59

வெறும் எதிர் கமெண்ட்ஸ் மட்டும் போடுவதோடு நில்லாமல், தமிழர்களை, தமிழகத்தை உண்மையிலேயே தீய சக்திகளிடமிருந்து, கொள்ளை கூட்டங்களிலிருந்து காப்பாற்ற வேண்டுமானால், ஜால பொய் வார்த்தைகளை நம்பாமல், உதாசீனப்படுத்தி தங்கள் எதிர் உணர்வுகளை வரும் தேர்தலில் வெளிப்படுத்துங்கள்.


ஆரூர் ரங்
நவ 25, 2024 11:16

மொழியை வளர்க்கவே திமுக தீப்பொறி வெற்றி கொண்டான்,நன்னிலம் நடராஜன், வண்ணை ஸ்டெல்லா, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சைதை சாதிக் போன்ற பாச பேச்சாளர்களை ஊக்குவித்தது. இவர்களை மிஞ்சி பேசிய ஒரே நபர் கலைஞர்.


Rpalnivelu
நவ 25, 2024 10:57

எங்க வாரிசுகளை காப்பத்துங்க உலகம் பூரா பரந்து விரிந்திரிக்கிற எங்க ஊழல் சொத்துக்களை காப்பாத்துங்க


Perumal Pillai
நவ 25, 2024 09:31

தெலுங்கு மொழியை காக்க வேண்டும் .இதுதான் திராவிட மாடல் .


Perumal Pillai
நவ 25, 2024 09:08

ஈமு கோழிக்கு மரியாதை .


theruvasagan
நவ 25, 2024 08:35

எந்த ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல் மொழிக்கும் கலைக்கும் உண்டு. அப்புறம் என்னத்துக்கு நாங்கதான் தமிழ்காவலர்கள் என்று செக்யூரிட்டி வேலை.


Rajan
நவ 25, 2024 08:27

கட்டப்பாவிற்கு தகுந்த விருது. எந்த மொழியில் நடித்தாலும் துட்டு துட்டு மா. அப்பொழுது தமிழ் பேக் பண்ணப்படும்


Rajan
நவ 25, 2024 08:24

தமிழை ஒழுங்காக பேச எழுத தெரிய வேண்டும். தமிழால் சொத்து குவித்தது


S. Rajan
நவ 25, 2024 07:58

திராவிட மாடலே அந்நியப்பெயர் தான். தமிழ் என்று சொல்லி பிழைப்பை நடத்தும் jenmankal.


V RAMASWAMY
நவ 25, 2024 08:59

தமிழக அரசியலில் தலை முதல் கால் வரை முக்காலுக்கு மூன்று தெலுங்கு வந்தேறிகள் தானே, இவர்கள் ஒரிஜினல் தமிழர்களை வந்தேறிகள் என்கிறார்கள். காலம் செய்யும் கொடுமை. ஆனால் காலம் மாறும். உண்மையான தமிழ்/தமிழர் துரோகிகள்இனம் கண்டுகொள்ளப்படுவார்கள் .


VENKATASUBRAMANIAN
நவ 25, 2024 07:52

முதலில் உங்கள் வீட்டு பிள்ளைகளை தமிழ் படிக்கச் சொல்லுங்க. அரசு பள்ளிகளில் சேர்த்து விடுங்கள். அப்புறம் வந்து இந்த வசனம் எல்லாம் பேசலாம். எத்தனை காலம்தான் ஏமாற்றி வருவீர்கள்.. சத்யராஜ் அவர் பிள்ளைகளை எங்கே படிக்க வைத்தார். சொல்ல முடியுமா. ஊருக்கு உபதேசம் செய்வதை விடுங்கள்