உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தெளிவான விளக்கம் வேண்டும்: கேட்கிறார் முதல்வர்

தெளிவான விளக்கம் வேண்டும்: கேட்கிறார் முதல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழக மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம்! மத்திய அரசு எங்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும்,'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.கடந்த 2021ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கோவிட்-19 தொற்று நோய் காரணமாக, ஒத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் கூடிய அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில், அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாதி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜாதிவாரி கணக்கெடுப்பு பணியுடன் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, வரும் 2027 மார்ச் 1 அன்று தொடங்கும் என்று தெரியவந்துள்ளது.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, பார்லிமென்டில் தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பா.ஜ., வெளிப்படையாக அறிவித்துள்ளது. தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே நான் எச்சரித்திருந்தேன். அது இப்போது நிரூபணமாகிவிட்டது. பா.ஜ.,வுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் மூலம், பழனிசாமி இந்தச் சதித்திட்டம் பற்றிப் பேசாமல் அமைதி காப்பதோடு, இந்தத் துரோகத்துக்குத் துணைபோகிறவராகவும் இருக்கிறார். டில்லி ஆதிக்கத்தின் முன் அவர் அடிபணிந்துவிட்டது இப்போது தெள்ளத் தெளிவாகியுள்ளது.நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழக மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம்! மத்திய அரசு எங்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும்! இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

vijai hindu
ஜூன் 05, 2025 14:39

யார் ஒன்று பட்டு நிக்கல


Kulandai kannan
ஜூன் 05, 2025 13:49

கேட்டால் தெளிவாக விளக்குவார்.


ஆரூர் ரங்
ஜூன் 05, 2025 13:19

கல்வியின்மை, வறுமையில் வாடும் பல சமுதாயங்கள் பிற்பட்ட பட்டியலில் இருக்கும் போது MBC என தனிப்பட்டியலை உருவாக்கி அதில் உடனடியாக தனது சமூகத்தை சேர்த்ததுத்தான் கட்டுவின் சுயநலம். இப்போது அவர்கள் மட்டும் எண்ணிக்கைக்கு மீறிய மூத்த அமைச்சர், MP பதவிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


எவர்கிங
ஜூன் 05, 2025 11:41

அப்படி தெளிவா சொன்னா மட்டும் விளங்கிடுமா


Barakat Ali
ஜூன் 05, 2025 09:02

எம்புட்டு தெளிவா விளக்கினாலும் புரியப்போறதில்ல .......


ஆரூர் ரங்
ஜூன் 05, 2025 08:57

கணக்கெடுக்கும் அலுவலர்கள் தமது சாதிக்கு சாதகமாக கணக்கில் தில்லுமுல்லு செய்ய வாய்ப்பு அதிகம். இவற்றைத் தவிர்க்க ஏராளமான பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய டிஜிட்டல் முறையை உருவாக்க அதிக காலம் பிடிக்கும். இதற்கு முன்பு எடுக்கப்பட்ட சென்சஸ் முடிவுகள் முழுமையாக வெளியாக மூன்றாண்டுகள் வரை ஆனது. இப்போது ஓராண்டுக்குள் வெளியாகப் போவதை ஸ்டாலின் ஏற்கவில்லையா?


Saai Sundharamurthy AVK
ஜூன் 05, 2025 08:54

படிக்கவே தெரியவில்லை. அண்ணாமலை போல் ஒரு சப்ஜெக்ட்டை பற்றி விரிவாக பேசத் தெரியவில்லை. விளக்கவும் முடியவில்லை. துண்டு சீட்டை பார்த்து படிப்பது, படிப்பதை பிழையாக சொல்வது போன்ற பழக்கம் உடையவருக்கு என்ன விளக்கம் கொடுக்க முடியும் ??? அதுவும் சரியான விளக்கம் வேண்டுமாம் !!!!


ஆரூர் ரங்
ஜூன் 05, 2025 08:53

சாதி வாரி கணக்கெடுப்பு சாதிவாரி இடஒதுக்கீட்டை அமல் படுத்தவே. சாதி வேறுபாட்டை ஏற்காத மதங்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. எனவே சாதிக்கணக்கெடுப்பு ஹிந்துக்களுக்கு மட்டும் எடுக்கலாம்.


GMM
ஜூன் 05, 2025 06:50

ஒரு மாநிலத்தில் பிரதிநிதிகள் கூடினாலும் குறைந்தாலும் என்ன பாதிப்பு ஏற்படும். ?பாராளுமன்றத்தில் எந்த மாநிலமும் தனியாக மெஜாரிட்டி பெற முடியாது. மக்கள் தொகை, வாக்காளர் பட்டியல், மாநில பரப்பளவு என்று ஏதாவது ஒரு அடிப்படை விதிகள் வகுத்து தான் தொகுதி மறு சீரமைப்பு செய்ய முடியும். தமிழக சட்ட பேரவை மற்றும் கொலிஜியம் போல் இஷ்டம் போல் தொகுதி மறு சீரமைப்பு செய்ய முடியாது?


Kasimani Baskaran
ஜூன் 05, 2025 04:02

ஜனநாயகத்துக்கு விரோதமாக சிந்திப்பதில் இவர்களைப்போல கைதேர்ந்தவர்கள் வேறு ஒருவரும் இல்லை.


புதிய வீடியோ