உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று திண்டுக்கல், தேனி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் கன மழை

இன்று திண்டுக்கல், தேனி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் கன மழை

சென்னை : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் இன்று (ஜூன் 8)கன மழை பெய்யும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில், 200 இடங்களில் 1 முதல், 9 செ.மீ., வரை மழை பெய்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டையில், 9 செ.மீ., மழை பெய்துள்ளது.கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும். மற்ற இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம், 36 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகும்.குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகள்; ஆந்திர கடலோரம், மத்திய, தெற்கு வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள்; கேரள, கர்நாடக கடலோரம் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், வரும், 10ம் தேதி வரை மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி