வாசகர்கள் கருத்துகள் ( 2 )
வானிலை மையம் கணிப்பு பலிக்க மடுக்கிறது
வானிலை மையம் ஜோசியமா சொல்லுகிறது பலிக்க, அறிவியல் பூர்வமா கணக்கீடு செய்து தப்பு தப்பா சொல்லுறாங்கனு சொல்லுங்க மாரி
சென்னை: தமிழகத்தில் இன்று (டிச.,04) முதல் டிசம்பர் 10ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று முதல் டிசம்பர் 10ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பனிமூட்டம்
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வானிலை மையம் கணிப்பு பலிக்க மடுக்கிறது
வானிலை மையம் ஜோசியமா சொல்லுகிறது பலிக்க, அறிவியல் பூர்வமா கணக்கீடு செய்து தப்பு தப்பா சொல்லுறாங்கனு சொல்லுங்க மாரி