உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்னும் 24 மணி நேரம் தான்; வங்கக்கடலில் வரப்போகுது காற்றழுத்த தாழ்வு!

இன்னும் 24 மணி நேரம் தான்; வங்கக்கடலில் வரப்போகுது காற்றழுத்த தாழ்வு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தென்மேற்கு வங்கக்கடலில் இன்று (நவ.,11) உருவாகும் என்று கணிக்கப் பட்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது' என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை, அக்டோபர், 15ல் துவங்கியது. பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் இன்று (நவ.,11) உருவாகும் என்று கணிக்கப் பட்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது' என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7s2dyfb0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'அடுத்த 2 நாட்களில் மேற்கு திசையில் தமிழகம், இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள சூறாவளி சுழற்சி அதே இடத்தில் நீடிக்கிறது. தமிழகத்தில் நவ.,15ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது' எனவும் இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ