உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொடர்ந்து கொட்டுது மழை; செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை!

தொடர்ந்து கொட்டுது மழை; செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கனமழை காரணமாக, செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.,29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று (நவ.29) அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nwtf02kv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.,29) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் நேற்றிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பல்வேறு இடங்களில் இடைவிடாமல் மழை பெய்து வருவதால், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.,29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை விடப்படுவதாக கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Boopathy GT
டிச 01, 2024 06:55

சிறப்பு மிக சிறப்பாக இருக்கிறது.


தவெக மயிலாப்பூர்
நவ 29, 2024 10:45

மழை காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கும் அரசின் முடிவை பற்றி விவாதம் செய்வது தவறு.  அதே நேரம், அத்தகைய விடுமுறையை மாணவர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில், அந்தந்த பள்ளி ஆசிரியர்கள், வீட்டில் இருக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்துதல் அல்லது வாட்ஸ்அப் மூலம் உரிய வீட்டு பாடம் Homework அளித்தல் போன்றவை செய்ய வலியுறுத்த வேண்டும்.  இது குறிப்பாக 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.  அரையாண்டு தேர்வு நெருங்குவது அனைவரும் அறிந்ததே....


orange தமிழன்
நவ 29, 2024 10:28

இந்த மாதிரி செய்திகளில் பெண் குழந்தைகளின் ஃபோட்டோ வை தவிர்க்கவும்....


duruvasar
நவ 29, 2024 10:02

சென்னியில் எந்த பகுதியில் கண மழை பெய்து வருகிறது என கூறினால் நலமாக irrukkum.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை