உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குடையை மறக்காதீங்க…. தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்!

குடையை மறக்காதீங்க…. தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு வாரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும், '' என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.இது தொடர்பாக வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: இன்று கோவை, விழுப்புரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை(அக்.,11) திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 13, 14 தேதிகளில் வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களிலும், 14ம் தேதி சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. தற்போதைய நிலவரப்படி அரபிக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதனால், சென்னை புறநகர் பகுதிகளில் ஒரு வாரத்திற்கு மிதமான மழை இருக்கும். 14ம் தேதி கனமழை எதிர்பார்க்கலாம்.வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மற்றொரு சுழற்சி உருவாகும் சூழல் நிலவுகிறது. இதனால், 5 நாட்களுக்கு மழை தொடரும். தமிழகம், புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்திற்கு பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
அக் 10, 2024 21:19

மக்களே கவலையை விடுங்கள். தமிழக அரசு பலகோடி செலவில் படகுகள் வாங்கி விட்டார்கள் ..... உங்களை வெள்ளத்தில் இருந்து மீட்க. மழைக்காலம் முடிந்தவுடன் அந்த படகுகளை ஆட்டைபோட்டுவிடுவார்கள். மீண்டும் அடுத்த வருடம் ஆட்சியில் இருந்தால் மீண்டும் பலகோடி மக்கள் வரிப்பணத்தில் மீண்டும் படகுகள் வாங்குவார்கள்... உங்களை காப்பாற்ற.


sundarsvpr
அக் 10, 2024 19:25

தேவைக்கு மேல் மழை பெய்தால் தேக்கி வைக்க ஏன் அரசு முயலவில்லை என்பது ஒரு பெரிய கேள்வி. ?


முக்கிய வீடியோ