உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்திக்கு மாறிய இணையதளம்: எல்.ஐ.சி., விளக்கம்

ஹிந்திக்கு மாறிய இணையதளம்: எல்.ஐ.சி., விளக்கம்

சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே, எல்.ஐ.சி., இணையதளத்தின் முகப்பு பக்கம் ஹிந்திக்கு மாறியதாக, அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., இணையதளத்தின் முகப்பு பக்கம் ஆங்கிலத்தில் இருக்கும். ஆனால், நேற்று காலை திடீரென அது ஹிந்திக்கு மாறியது. ஆங்கில மொழியை தேர்ந்தெடுக்கும் குறிப்பு கூட ஹிந்தியில் இருந்தது.இது, அப்பட்டமான ஹிந்தி திணிப்பு என்று, முதல்வர் உள்ளிட்ட தமிழக கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, எல்.ஐ.சி., வெளியிட்ட செய்தியில், 'இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே, முகப்பு பக்கம் ஹிந்தி மொழிக்கு மாறியுள்ளது. தற்போது, அது சரி செய்யப்பட்டு, ஆங்கிலம், ஹிந்தியில் தெரியும் அளவுக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சிரமத்திற்கு வருந்துகிறோம்' என்று கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

Barakat Ali
நவ 20, 2024 21:09

ஒரு மாநில முதல்வரே எகிறிக்குதிக்கும் அளவுக்கு பிரச்னை கடுமையானதல்ல .... ஆனால் தமிழக மக்கள் இந்த அரசால் சந்திக்கும் பிரச்னைகளைத் திசை திருப்ப வேண்டிய கட்டாயம் அவருக்கு உள்ளதே ????


அப்பாவி
நவ 20, 2024 21:08

இந்தியை திணிக்காம விட மாட்டோம்னு கெவுனர் முதல் எல்லோரும் கங்கணம் கட்டிக்கிட்டுக்கு அலையறாங்க.


ஆரூர் ரங்
நவ 20, 2024 14:45

ஸ்டாலினின் பெயரிலிருக்கும் ஸ் எந்த மொழி எழுத்து? மகேஸ் பொய்மொழி?


ஆரூர் ரங்
நவ 20, 2024 14:41

எல்ஐசி பட்டியலிடப்பட்ட வணிக நிறுவனம். இப்போது தனியாருடன் போட்டியிட வேண்டியுள்ளது.அப்படியும் முன்பைவிட சிறப்பாக லாபம் ஈட்டுகிறது. இந்நிலையில் வேண்டுமென்றே வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாக வாய்ப்பில்லை. மென்பொருள் மேலாண்மையில் தவறு இருக்கலாம். உள் நோக்கம் கற்பிப்பது தவறு. அப்படி செய்யும் களவாணிக் கட்சிகளை எதிர்த்து எல்ஐசி வழக்குப் போட வேண்டும்.


jagadesh
நவ 20, 2024 12:56

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே இந்த LIC இணைய தளத்தில் ஹிந்தி மட்டுமே காண்பித்துக்கொண்டிருந்தது, என்னால் எனது LIC பாலிசி பற்றிய தகவல்களை சரிவர பராமரிக்க முடியாமல் இருந்தது, இது முற்றிலும் உண்மை, தற்போது கண்டன குரல் கொடுத்தவுடன் LIC தளம் திரும்பவும் ஆங்கிலத்தில் காண்பிக்கின்றது


Suppan
நவ 20, 2024 11:42

நல்ல கண்கள் இருந்தால்தானே. ஹிந்தியிலிருந்து ஆங்கிலத்துக்கு மாறும் சுவிட்ச் சில மணித்துளிகள் சரியாக வேலை செய்யவில்லை. இந்த திராவிட மடக்குஞ்சுகளுக்கு இது கூட தெரியவில்லை. அதற்குள் ஆஹா ஹிந்தித்திணிப்பு ஓஹோ ஹிந்தித்திணிப்பு என்று கூவி தங்களுக்கு அறிவில்லை என்று காண்பித்துக்கொண்டார்கள்.


Indian
நவ 20, 2024 11:09

அனைவருக்கும் அவர் அவர் தாய் மொழி தான் முக்கியம் ... அதையும் மீறி அடுத்த மொழியை திணித்தாள் யாரும் கற்க போவதில்லை ....விரும்பியவர்கள் விரும்பிய மொழி கற்கலாம் ..திணிக்காதீர்கள் .


Svs Yaadum oore
நவ 20, 2024 11:32

தமிழ் நாட்டில் அரசு உதவி பெறும் உருது பள்ளியில் தமிழே படிக்காமல் பள்ளி படிப்பை முடிக்கலாம் என்று விடியல் திராவிடனுங்க உத்தரவு .....அரசு உதவி பெற்று உருது படிக்கலாம் ஆனால் தமிழ் படிக்க வேண்டாம் என்று உத்தரவு போட்டு விடியல் திராவிடனுங்க தமிழை காப்பாற்றியுள்ளார்கள் ....


Svs Yaadum oore
நவ 20, 2024 10:24

தமிழ் நாட்டில் சன் டிவி என்று பெயர் வைத்து ஹிந்தி சேனல் குஜராத்தி சேனல் நடத்தி சம்பாதித்து தமிழையும் விடியல் திராவிடனுங்க காப்பாற்றி உள்ளார்கள் ......அது போல ஹிந்தியில் வெப்சைட் வைத்து தமிழை காப்பாற்றலாம் என்று எல் ஐ சி க்காரன் நினைத்திருப்பான் .........


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
நவ 20, 2024 10:04

அது எப்படி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு ஹிந்தியில் மட்டும் மாறியது? ஏன் தமிழில் மாறவில்லை? யாரிடம் காதி பூ சுற்றுகிறீர்கள்? இதெல்லாம் 10ம் நூற்றாண்டில் சொல்ல வேண்டிய பொய். அது சரி. ஆங்கிலம் ஹிந்தி மட்டும் ஏன் ? தமிழ் ஏன் அதில் இல்லை? தமிழை நீக்குவதற்குத்தான் இந்த நாடகம். அப்படி என்றால் ஹிந்தி ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டும் LIC கட்டினால் போதுமா?


Gopalakrishnan Balasubramanian
நவ 20, 2024 12:15

ஹிந்திக்கு மாறவில்லை இங்கிலிஷ், மராத்தி மொழிகளில் கூட இருக்கிறது, Lic Site அனால், சின்ன பிரச்சனை என்னவென்றால் மொழி என்பதை பாஷா என்று ஹிந்தியில் எழுதி இருந்ததால் ஹிந்தி தெரியாதவர்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள் அதை எடுத்து விட்டு default ஆப்ஷன் English என்று மீதும் கொண்டு வந்திருக்கிறார்கள்


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 20, 2024 09:59

திமுகவின் ஹிந்தி எதிர்ப்பு போலியானது.. இதனால் மக்களின் வயிறு நிறையாது .........


Indian
நவ 20, 2024 11:06

ஹிந்தி மொழியை விரும்பியவர் கற்கலாம் . எக்காலத்திலும் திணிப்பை ஏற்கமுடியாது ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை