உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சபாஷ், சரியான போட்டி; மோதலில் ஈடுபட்ட காங்கிரஸ் மேயர், தி.மு.க., கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி

சபாஷ், சரியான போட்டி; மோதலில் ஈடுபட்ட காங்கிரஸ் மேயர், தி.மு.க., கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் மேயர் சரவணன், தி.மு.க., கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நெஞ்சுவலிப்பதாக கூறிய மேயர் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு உள்ளார். தற்போது, தான் தாக்கப்பட்டதாக கூறி, தி.மு.க., கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார்.கும்பகோணம் மாநகராட்சி மேயராக பதவி வகித்து வருகிறார் சரவணன். தமிழகத்தில் காங்., கட்சியின் ஒரே மேயரான இவருக்கும், தி.மு.க., கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனிடையே, மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் நேற்று (டிச.,30) நடைபெற்றது. இதில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7dqcivad&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 54 தீர்மானங்களுக்கான கோப்புகளை தி.மு.க., கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி கேட்ட போது, கூட்டம் முடிந்துவிட்டதாகக் கூறிய மேயர், அவரது அறைக்குச் செல்ல முயன்றார். இதனையறிந்து வேகமாக ஓடிச்சென்ற தட்சிணாமூர்த்தி, மேயர் அறை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது மேயர் சரவணன் திடீரென மாமன்ற அலுவலகத்தின் தரையில் படுத்தபடி, தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுவிட்டதாக அலறினார். இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று (டிச.,31) 'தான் தாக்கப்பட்டதாக கூறி, தி.மு.க., கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். காங்கிரஸ் மேயர் சரவணன், தி.மு.க., கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி ஆகிய இருவரும், போட்டி போட்டு கொண்டு மருத்துவமனையை நோக்கி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

sankar
ஜன 02, 2025 00:38

உள்ளாட்சி அமைப்புகள் என்பதே ஒரு தேவை இல்லாத ஆணி.அரசியல் அநாகரிகங்கள் மக்கள் பணத்தை கபளீகரம் செய்யவே இருக்கின்றன, அவைகள் விரட்டப்படவேண்டும்.


raj
டிச 31, 2024 17:59

சூப்பர் ட்ராமா, என்ன அவர்டா கொடுக்குறாங்க


Sampath Kumar
டிச 31, 2024 17:13

ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு தானே கொண்டாட்டம்


N.Purushothaman
டிச 31, 2024 13:30

டேய் ...எப்புட்ரா ?


kantharvan
டிச 31, 2024 15:06

எல்லாம் உன் அம்மாவின் கைங்கர்யம்தான் ??? உனக்கு ரெண்டு அப்பா போலிருக்கு ஒன்னு தியமுக இன்னொன்னு கான் கிராஸ். பெயரே புருஷ ஒத்தமனா ???


N.Purushothaman
டிச 31, 2024 19:11

கருத்தை கருத்தால எதிர்கொள்ள திராணி இல்லாதவன்னு நல்லாவே தெரியுது .. மொதல்ல அம்பேத்க்கரை பற்றியும் அவர் பாரத்தை பற்றி என்ன சொல்லி இருக்காருன்னு படிச்சிட்டு வா ....


N.Purushothaman
டிச 31, 2024 19:24

விழிப்புணர்வு தேவை ..


Sakthi
டிச 31, 2024 13:27

பொது சேவை செய்யவா சண்டை பொடாங்க. எல்லாம் பங்கு பிரிப்பதில் தான் இந்த கட்சி கயவர்களின் கூடாரம். இவர்களை இந்த தேர்தலோடு விரட்டி விடுவோம்


KRISHNAN R
டிச 31, 2024 13:16

கடவுளே என்று சொல்ல வேண்டும்


Barakat Ali
டிச 31, 2024 12:34

உள்ளாட்சி அமைப்புக்களே தேவையில்லை .... கலைத்துவிடுங்கள் ..... உள்ளாட்சி மன்றங்களை பள்ளிகளாகவும், மருத்துவமனைகளாகவும் ஆகிவிடுங்கள் .... மக்களின் வரிப்பணம் மிச்சம் ...


CHELLAKRISHNAN S
டிச 31, 2024 14:07

when mgr was in power for ten years, no local body elections took place.


Barakat Ali
டிச 31, 2024 15:34

Why do you bring MGR here?


sankaranarayanan
டிச 31, 2024 12:11

ஐயோ நெஞ்சு வலிக்குதே நெஞ்சு வலிக்குதே என்று எப்படி அய்யா இருதய அட்டாக் வந்த ஆசாமி கத்த முடியும் இதய அட்டாக் வலி வந்தவர்கள் பேசவே முடியாது அதுவும் கத்தவே முடியாது கீழே அப்படியே சாய்வார்கள் இந்த பப்புக்கு காங்கிரசு ஆளு நெஞ்சு வலிக்குதே என்றே கத்திக்கொன்டே சொல்லமுடியுமா இதல்லாம் பாபுவின் நாடகம் இவ்வளவு மட்டமாக நடுப்பு காங்கிரசுக்கு ஏனெனிப்படி


rasaa
டிச 31, 2024 11:57

இந்த காட்சி நன்கு பழக்கப்பட்ட ஒன்றுதான்.


Constitutional Goons
டிச 31, 2024 11:55

ஜனநாயகம் விவாதம் தளைத்தோங்குகிறது . உடல் ஆரோக்கியம் இல்லை என்பது உலகத்தரம் வாய்ந்த ஒன்றுதான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை