உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுபான்மை இன மக்களுக்கு தி.மு.க., என்ன செய்தது: அண்ணாமலை கேள்வி

சிறுபான்மை இன மக்களுக்கு தி.மு.க., என்ன செய்தது: அண்ணாமலை கேள்வி

சென்னை: ''சிறுபான்மையின மக்களுக்கு தி.மு.க., என்ன செய்தது என கேட்டுப் பாருங்கள்,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது: உங்களோடு, நாங்களும் இப்தார் நோன்பில் பங்கேற்பதை கடவுள் கொடுத்த வரப்பிரசாதமாக கருதுகிறோம். நம்முடைய கொள்கை என்ன என்பது குறித்து தமிழிசை சிறப்பாக பேசி உள்ளார். நாங்கள் தனித்தனியே பேசுவதை விட கூட்டணி கட்சி தலைவர்கள் பேசுவதை தான் நான் மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dkc9edwb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தலைவர்கள் அனைவரும் தே.ஜ., கூட்டணியில் பிரதமர் மோடி தலைமையை ஏற்று பயணம் செய்கின்றனர். எல்லா கட்சியிலும் சிறுபான்மை தலைவர்கள், தொண்டர்கள் உள்ளனர். சிறுபான்மை இன மக்களுக்காக மேடையி்ல் இருக்கும் தலைவர்கள் உழைக்கின்றனர். நாங்கள் சிறுபான்மை இன மக்களுக்கு என்ன செய்தோம் என்பதை பா.ஜ., தலைவர்கள் ஆதாரப்பூர்வமாக சொல்ல முடியும். ஆனால், அவர்களுக்கு நாம் எதிரி என சொல்லக்கூடிய தி.மு.க.,விடம் சிறுபான்மை இன மக்களுக்கு என்ன செய்தீர்கள் என கேட்டுப்பாருங்கள்.தி.மு.க., மற்றும் முதல்வர் ஸ்டாலின் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் மட்டும் சிறுபான்மை இன மக்கள் பக்கத்தில் அமர்ந்து உங்கள் பாதுகாவலனாக பேசுவார்கள்.நான்கு ஆண்டு ஆட்சியில் எந்த விதமுமான விஷயமும் இருக்காது.

பட்டியல்

*சிறுபான்மை இன மக்கள் அதிகம் வாழும் மாவட்டத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் சராசரியாக 31 சதவீத வீடுகள் சிறுபான்மை இன மக்களுக்கு சென்று கொண்டு உள்ளது. இதை ஆதாரப்பூர்வமாக சொல்ல முடியும்.*பிரதமரின் முத்ரா கடன் திட்டத்தில் 32 லட்சம் கோடி ரூபாய் மக்களுக்கு கடனாக கொடுக்கப்பட்டு உள்ளது. 36 சதவீத சிறுபான்மை இன மக்கள் பயனடைந்துள்ளனர்.*விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் 33 சதவீதம் சிறுபான்மை இன மக்கள்*உஜ்வாலா திட்டத்தில் 37 சதவீதம் பயனடைந்து உள்ளனர்.தே.ஜ., கூட்டணி சிறுபான்மை இன மக்களுக்கு எங்காவது எதிரியாக இருந்து இருக்கிறோமா? அப்படி நீங்கள் 10 நிமிடம் யோசித்துப் பார்த்தால் போதும். தே.ஜ., கூட்டணி தலைவர்கள் தவறு செய்திருக்கிறோமா? 10 ஆண்டுகளில் இந்தியாவில் எங்காவது தவறு நடந்துள்ளதா? அதற்கு பிரதமர் அல்லது தே.ஜ., கூட்டணி காரணமா என யோசித்து பாருங்கள்

பிரதமருக்கு விருது

பிரதமர் மோடிக்கு 20 நாடுகள் உயரிய விருது கொடுத்து உள்ளன. அதில் 7 முஸ்லிம் நாடுகள் பிரதமருக்கு உயரிய விருது வழங்கி உள்ளது.சவுதி அரேபியா, ஆப்கன், பாலஸ்தீனம்,யுஏஇ,பஹ்ரைன், எகிப்து,குவைத் நாடுகள் தங்களின் உயரிய விருது கொடுத்து உள்ளன. அந்நாடுகள் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கின்றன.

முழு நேர பணி

முதல்வர் ஸ்டாலின் கையில் வரைபடத்தை கொடுத்து, மணிப்பூரை தொட்டு காட்டினால் அரசியலை விட்டு போகிறேன். மணிப்பூர் எங்கு இருக்கிறது என தெரியாது. மணிப்பூரில் நடந்ததற்கு பிரதமர் மோடி தான் என்ன காரணம் என சொல்கின்றனர். காங்கிரஸ் ஆட்சியி்ல், ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை நீக்க வேண்டும் என பெண்கள் ஆடையில்லாமல் நடந்து சென்றனர். மணிப்பூரில் அமைதி திரும்பும்போது இரண்டு பிரிவினருக்கு இடையே நடந்த மோதல் ஏற்பட்டது. மாநில அரசு ராஜினாமா செய்து, கவர்னர் ஆட்சி வந்து நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது.எங்கு நடந்தாலும் பா.ஜ., தே.ஜ., கூட்டணி மீதும் பழி போடுவது மட்டுமே முழு நேர பணியாக முதல்வர் வைத்து உள்ளார். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

தெரியாது

தொடர்ந்து நிருபர்களை சந்தித்த அண்ணாமலையிடம் , அ.தி.மு.க., பொதுச் செயலர் இ.பி.எஸ்., டில்லி பயணம் குறித்தும், அமித்ஷாவை சந்திக்கிறாரா எனவும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அண்ணாமலை அளித்த பதில்: உள்துறை அமைச்சரை யார் வேண்டும் என்றாலும் சந்திக்கலாம். இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. அரசியல் ரீதியாக முடிச்சு போட்டு கேள்விகேட்டால், பதில் சொல்லும் நிலைமையில் நான் இல்லை என்றார்.

நம்பாதீர்கள்

அண்ணாமலை கூறியதாவது: முதல்வர் பொறாமைப்படும் அளவுக்கு விழா நடந்தது. எங்கள் கட்சியி்ல் முஸ்லிம் சொந்தங்கள் உள்ளனர். அவர்கள் கட்சியை வழிநடத்துகின்றனர். நோன்பு திறப்பு விழாவை தி.மு.க., மட்டும்தான் நடத்த வேண்டும் என பட்டா போட்டு வைத்துள்ளார்களா. சிறுபான்மையின மக்கள் பிரதமர் மோடி தலைமையை ஏற்று உள்ளனர். மோடி செய்த வேலையை பார்க்கின்றனர். இதனை பார்த்து முதல்வர் ஸ்டாலின் பொறாமைப்படுகிறார். தி.மு.க., கூட்டணியை வீழ்த்த வேண்டும் என நினைத்தால் தே.ஜ., கூட்டணிக்கு எந்த கட்சியும் வரலாம். தே.ஜ., கூட்டணி விரிவடைந்து வருகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் மிக வித்தியாசமான தேர்தல் களம் இது. வலிமையான கட்சிகள் ஐந்து கூட்டணியாக உருவாகி உள்ளது.திமுக கூட்டணிஅதிமுக கூட்டணிபாஜ கூட்டணிசீமான்விஜய் கட்சி என ஐந்து முனைபோட்டி நிலவுகிறது. இதுபோன்று யாரும் பார்த்தது கிடையாது. சீமான் ஒவ்வொரு முறையும் வாக்கு வங்கியை காட்டுகிறது. அடுத்த 8 மாதத்தில் ஐந்து முனை போட்டி நல்லதா. இது 3 முனை போட்டியாக மாறுமா என தெரியாது. தி.மு.க.,வை சிறுபான்மையினர் நம்பக்கூடாது. இஸ்லாமிய, கிறிஸ்தவ சமுதாயத்தை ஓட்டு வங்கியாக பயன்படுத்த முடியாது. அவர்கள் பா.ஜ.,வை நோக்கி வருகின்றனர். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Nandakumar Naidu.
மார் 26, 2025 06:06

என்ன தான் நீங்க இஃப்தார் நோன்பு வைத்து கஞ்சி குடித்தாலும், அவர்கள் உங்களுக்கு வாக்களிக்கப்போவதில்லை. அவர்கள் பிரும்பான்மை ஆகும் வரை தான் உங்களையும், தற்போது அவர்களுக்கு துணை போகும் மற்ற கட்சிகளையும் சுற்றி வருவார்கள். பேரும்பான்மை ஆகிவிட்டால் உங்களை எல்லாம் அழிக்க துணிந்து விடுவார்கள். இது சத்தியம். எனவே ஹிந்துக்களை எப்படி காப்பாற்றுவது, ஹிந்துக்களை எப்படி ஒன்று சேர்ப்பது, எப்படி ஒன்றாக ஹிந்து விரோதிகளுக்கு வாக்களிக்க புரிய வைப்பது என்பது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். இவர்களிடத்தில் உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள்.


மதிவதனன்
மார் 25, 2025 23:53

பாபர் மசூதி இடித்து ராமர் கோயில் கட்ட வில்லை , இப்போ ஒளரங்கசீப் மயானம் பற்றி PESAVIILAI


karupanasamy
மார் 26, 2025 02:30

பாபர் மசூதி ராமர் கோவிலை இடித்து கட்டியதுதான் என்று ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டு விட்டது. அவ்வுரங்கசீப் எம் மக்களுக்கு செய்த கொடூரத்தை எங்களால் எந்த நிலையிலும் மன்னிக்கமுடியாது. மதம் மாறிய நீ அவ்வுரங்கசீப்பை கொண்டாட வேண்டும் என்றால் இந்தமண்ணில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.


Oviya Vijay
மார் 25, 2025 22:28

பாஜக மட்டும் என்ன செஞ்சுச்சாம்... கலவரம் பண்றதத் தவிர வேற ஒன்னுமே பண்ணதில்லையே...


K.Ramakrishnan
மார் 25, 2025 22:04

எதற்கெடுத்தாலும் முஸ்லிம்களை குறை கூறிவரும் பா.ஜ., நோன்பு கஞ்சி குடிக்கும்போது மட்டும் உயர்த்தி பேசுவார்கள். இதுவே பா.ஜ.வின் இரட்டை வேடம். இஸ்லாமியர்களுக்கு திமுக என்ன செய்தது என்பதை அவர்களின் வீட்டுக்கு சென்று கேளப்பா...பயன் அடைந்தவர்கள் கூறுவார்கள். அவர்களின் இட ஒதுக்கீட்டையே ரத்து செய்யும்படி கூறுகிற நீங்க, எப்படி நண்பனாக இருப்பீங்க?


SENTHIL NATHAN
மார் 25, 2025 22:04

அமலாக்க துறை என்றால் என்ன என்று தமிழக மக்களுக்கு ஆறிமுகம் செய்து வய்த்த திணகறன் ஒரு பக்கம், தன்னை வளர்த்த கட்சியை சுயநளம் கொன்டு சிதய்க்கின்ற பண்ணீரு இன்னொரு பக்கம் அன்னாமளை பாவம் ஐபிஎஸ் அதிகாரியாகவே இருந்திருந்தால் கொஞ்சமாவது மதிப்பு மரியாதை எல்லாம் தொடர்ந்து இருக்கும். இந்துக்களை ஒருங்கிணைப்பு செய்ய தவறிய மோதி இன்று மட்ர கட்சியினரை நம்பி ஆட்சி செய்ய வேண்டிய நிலை .இப்படி ஓட் வங்கி அரசியலுக்கு சிருபாண்மயினரை பிடித்தொங்குவதால் பெரும்பாண்மயினரின் ஓட்கள் விழாது..


Mario
மார் 25, 2025 21:44

முதலில் நீங்க ஒரு கவுன்சிலர் ஆக பாருங்க


நாஞ்சில் இந்தியன்
மார் 25, 2025 21:42

பிரியன் அவர்களே...நான் மதவெற்றி என்று எங்கேயும் கூறவில்லையே... மதப்பற்று என்றுதான் பதிவிட்டுள்ளேன்...உண்மையாகவே, எனக்கு மதப்பற்றை விட தேசப்பற்று பன்மடங்கு அதிகமாக உள்ளது... உண்மையான இந்துமக்கள் 90% பேரும் இதே வகைதான்..புரிந்து கொள்ளுங்கள்... ஆனால் சிறுபான்மையரில் உங்களைப் போல் 10% பேர் மட்டுமே, தேசப்பற்று மிக்கவர்கள்...


vbs manian
மார் 25, 2025 21:23

என்ன செய்ததா. நாங்கள் அரண் என்று எதனை தடவை சொன்னார்கள். தவறாமல் அவர்கள் பண்டிகைகளுக்கு வாழ்த்து. போராட்டம் என்றால் உடனே அனுமதி. இறுதி அஞ்சலி திருப்பரங்குன்றத்தில் வெளியும் உள்ளும் என்னமாய் ஆதரவு. கோவை வெடிகுண்டு விஷயத்தில் எவ்வளவு பயங்கர சமாளிப்பு. தீபாவளி கிறிஸ்துமஸுக்கு விருந்து இல்லை தவறாமல் நோன்பு திறப்பு உண்டு. வக்ப் விவகாரங்களில் சிலிர்க்கும் மௌனம்.


நாஞ்சில் இந்தியன்
மார் 25, 2025 21:09

அய்யா, ஒன்று நல்லா புரிந்து கொள்ளுங்கள்...நீங்க என்ன உருண்டாலும், சிறுபான்மை ஓட்டு ஒன்று கூட கிடைக்காது...காரணம் அவர்கள் தேசப்பற்று உடையவர்கள் அல்ல...மாறாக மதப்பற்று உடையவர்கள்...இந்து ஆதரவு கட்சிகளை அடிப்படையிலேயே வெறுப்பவர்கள்...எனவே நேரத்தை வீணாக்காமல், இந்துக்களை ஒருங்கிணைத்து, திராவிட மாடலை சீக்கிரம் வீழ்த்துங்கள்... உங்களுக்கு புண்ணியமாப் போகும்...


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மார் 25, 2025 21:26

உண்மையிலும் உண்மை அடிப்படைவாதி முஸ்லிம்கள் கிருஷ்துவர்களுக்கு தேசத்தை விட அவர்கள் மதமே முக்கியம்.....வட மாநிலங்களில் உள்ள முஸ்லீம்கள் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக தேசியத்தை ஏற்று வருகிறார்கள்.... தென்மாநிலங்களில் தமிழகம் கேரளாவில் தேசியத்தை ஏற்று வந்தால் அனைவருக்கும் நல்லது....!!!


Priyan Vadanad
மார் 25, 2025 21:27

நாஞ்சிலாரே மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். உங்களைப் போன்றோர் மதவெற்றி இல்லாமலா இப்படிப்பட்ட பதிவை போடுகிறீர்கள்? சிறுபான்மையினருக்கு பெரும்பான்மையினருக்கும் இருப்பது மதவெற்றி அல்ல. மதப்பற்று. வெகுசிலர்தான் மதவெற்றி பிடித்து அலைகிறார்கள். சிறுபான்மையினர் எவரையும் மதவெற்றியர் என்று சொல்வதில்லை ..


Haja Kuthubdeen
மார் 25, 2025 22:02

நாஞ்சில் சார் நீங்கள் சொண்ணதில் ஒரு உண்மையும் உண்டு...மதத்தில் தீவிர நம்பிக்கையும் உறுதியும் உள்ளவர்கள்.ஹிந்து மதத்தை சேர்ந்த பெரும்பாலானோரிடம் ஏன் இறை நம்பிக்கை ஏனோதானோ என்று இருக்கு???முஸ்லிம் வெறுப்புணர்வை ஒதுக்கி வைத்து விட்டு சிந்தியுங்கள்.


S.L.Narasimman
மார் 25, 2025 20:11

டோக்கன் தினகரன் ஊழல் ஓபீ எஸ் உடன் கஞ்சி குடித்து அண்ணாமலை ஊழலை ஒழிச்சிருவாரூன்னு நம்பனும்.


Appa V
மார் 25, 2025 21:21

200 உபிக்கெல்லாம் தவறில்லாமல் தமிழ் எழுத சொல்லித்தர வேண்டும் ..டாஸ்மாக் மயக்கத்தில் கருத்து போடக்கூடாது என்று அறிவுறுத்த வேண்டும் ..நோகடிக்கிறாங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை