உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வழக்கறிஞரை விசிகவினர் தாக்கிய போது போலீசார் என்ன செய்தனர்: ஐகோர்ட் கேள்வி

வழக்கறிஞரை விசிகவினர் தாக்கிய போது போலீசார் என்ன செய்தனர்: ஐகோர்ட் கேள்வி

சென்னை: சென்னையில் வழக்கறிஞரை விசிகவினர் தாக்கிய போது, அங்கிருந்த போலீசார் என்ன செய்து கொண்டிருந்தனர் என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.சென்னை உயர் நீதிமன்ற நுழைவாயில் வெளியே, கடந்த 7ஆம் தேதி, வழக்கறிஞர் ராஜிவ் காந்தியின் இரு சக்கர வாகனம் மீது, வி.சி.க., தலைவர் திருமாவளவன் கார் மோதியது. இவ்விவகாரத்தில், வழக்கறிஞர் ராஜிவ் காந்தியை, வி.சி.க.,வை சேர்ந்தவர்கள் தாக்கி காயப்படுத்தினர். அவரது வாகனத்தையும் சாலையில் தள்ளி சேதப்படுத்தினர். தற்காப்புக்காக, பார் கவுன்சில் அலுவலகத்தில் நுழைந்தவரை, உள்ளே நுழைந்த வழக்கறிஞர்கள் சிலர், சரமாரியாக தாக்கியதுடன், பார் கவுன்சில் பொருட்களையும் சேதப்படுத்தினர். இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. சம்பவம் தொடர்பாக, இரு தரப்பிலும் தரப்பட்ட புகார்கள் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து நடவடிக்கை கோரி பார் கவுன்சில் இணைத்தலைவரான வழக்கறிஞர் கே. பாலு, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், 'குற்றவாளிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததைத் தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரு தரப்பினர் மீதும் எதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது' என்று கேள்வி எழுப்பினார்.'இந்தச் சம்பவத்தை பார்த்துக் கொண்டு இருந்த அரசியல் கட்சித் தலைவர் சம்பவத்தை கட்டுப்படுத்தாமல் பிரச்னையை தூண்டும் விதத்தில் செயல்பட்டாரா? கட்சியினர் தாக்கிய போது போலீசார் என்ன செய்து கொண்டு இருந்தனர்' என்றும் நீதிபதி சதீஷ் குமார் கேள்வி எழுப்பினார். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
அக் 18, 2025 11:11

போலீசார் மாண்புமிகு திரு.திருமாவளவன் அவர்களுக்கும் அவருடைய தொண்டர்களையும் பாதுகாத்து இருந்திருப்பார்கள். இரு சக்கர வாகனத்தை மாண்புமிகு திரு.திருமாவளவன் அவர்களின் தொண்டர் ஒருவர் தள்ளி விட்டு அது கிழே போய் விழுந்தவுடன் ஒரு நல்லெண்ணம் கொண்ட போலீஸ்காரர் ஓடிப்போய் அதை தூக்கி நிறுத்தினார். மற்ற போலீஸ்காரர்கள் அடிக்க அடிக்க அடி வாங்கிய வரை தள்ளிக் கொண்டு சென்றார்கள். இது எல்லா தொலை காட்சிகளிலும் திரும்ப திரும்ப ஒளிபரப்பி தொலைக்காட்சி பார்ந்தவர்களை மனதில் மனப்பாடம் செய்து வைத்தார்கள்.


Kasimani Baskaran
அக் 18, 2025 05:57

ஆளும் கட்சிக்கு வேண்டியவர்களை விட்டுவிட்டு அவர்களை எதிர்ப்பவர்கள் அனைவரையும் பிடித்து மிரட்டுவது காவல்துறையின் தலையாய கடமை. மற்றப்படி நீதிமன்றத்துக்கு கேள்விகேட்குமளவுக்கு பொறுப்பில்லை. வழக்கறிஞர் என்பதற்காக கேள்வி வருகிறது. மற்றப்படி கோர்ட்டுக்கு வெளியே தீர்வு கண்டுவிடுவார்கள்..


Appan
அக் 18, 2025 05:45

இதில் வருத்த பட வேண்டிய விஷயம் என்ன என்றால் , திருமா , இந்த வக்கீலை அடித்தது சரியே என்கிறார். ஏனென்றால் டு வீலரை காரில் இடித்து விட்டு அந்த வக்கீல் இவர்களை பார்த்து முரைத்தாராம் . முதலில் யார் இடித்தார்கள் என்று தெரியாது. ஒரு எம்.பி இப்படி பேசலாமா.?. திருமா மாபியா காலாசக்கரம் செய்கிறார். இவரோடு எதற்கு அவ்வளவு கைப்பிடிகள் ..?. இவர்களுக்கு செலவு செய்ய திருமாவுக்கு எப்படி இவளவு பணம் வெறுக்கிறது ..?. இந்தியா அரசியல் சாசனம் மைனாரிட்டி களுக்கு சலுகைகள் கொடுத்தது அவர்களை பாதுகாத்து முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல. ஆனால் திருமா அடாவடி செய்து அதை பெருமை பட பேசுகிறார். இது நல்லதா .?


சிட்டுக்குருவி
அக் 18, 2025 03:31

தாக்குதல் நடந்த இடத்திற்கு பொறுப்பான காவல்துறை அதிகாரி தகுந்த நடவடிக்கை தானாக முன்வந்து எடுக்காததினால் தான் பொறுப்பேற்கும்போது எடுத்த உறுதிமொழியஆகிய நான் எனது பணியை நேர்மையுடனும் பரபட்சமின்றியும் நிறைவேற்றுவேன் என்பதை மீறி இருக்கின்றார் .அதனால் அவர்மீது உறுதிமொழி மீறல் வழக்கு தொடுக்க வேண்டும் .ஒரு காவல்துறை அதிகாரியே சேர்ந்து அடித்ததாகவும் தெரிகின்றது .ஒரு உயர்நீதிமன்ற வழக்கறிஞ்சருக்கே இந்த கதி என்றால் மற்றவர்களுக்கெல்லாம் என்னகதி .பார் கவுன்சில் வழக்கறிஞ்சர்கள் ஒரு மனித உரிமைபாதுகாப்பு குழுவை ஏற்படுத்தி வசதியற்ற மக்களையும் இதுபோன்ற வன்முறைகளில் இருந்து காப்பாற்றமுன்வரவேண்டும் .


Sankar Ramu
அக் 18, 2025 02:40

வீடியோ மட்டும் இல்லைனா இன்னேரம் அவர் தூக்கு போட்டு இறந்து விட்டதா செய்தி வந்திருக்கும்.


Venugopal,S
அக் 17, 2025 23:44

முதலில் இந்த கட்சியின் தலைவர், ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்


மணிமுருகன்
அக் 17, 2025 23:34

நீதிமன்றத்தில் கார்கள் வாசலில் நிறுத்த முடியாது .இருசக்கர வண்டிகள் என்றால் வழக்கறிஞர் நீதிபதி அவர்களுக்கு தனி இடம் உண்டு அப்படி இருக்க வழக்கறிஞர் வாசலில் நிறுத்தியது ஏன் அதை விசிக வாகனம் மோதக் காரணம் என்ன? ரோடு அகலம் தான். போக்குவரத்து வழக்கு உள்ளது. 80–90 களில் சைனா பஜார் சந்து அருகி ல்நெருக்கடி இருக்கும் இப்போது அதுவும் இல்லை பார் கவுன்சில் வரை போகிறார்கள் என்றால் வழக்கறிஞர் ஏன் இடித்தீர்கள் என்று கேட்டாரா? காரில் ஓட்டுனர் பயிற்சி பெற்றவர் தானே விசிக திருமாவளவன் வண்டி ஓட்டுபவர்தானே அப்படி என்றால் கண்டிப்பாக இது வேண்டும் என்றே நடந்த ஒன்று. யாரையோ மிரட்ட நடத்தப்பட்ட செயல். தலைவர் என்பவர் மக்களுக்கு தவறு நேராமல் தடுக்க வேண்டும் .தவறு செய்துவிட்டு மிரட்டுவது தப்பிக்க வழி தேடுவது இந்நிகழ்வுக்கு பிறகு விசிக ஊழல்கட்சி திமுக கூட்டணி சந்திப்பு என்பது பணம் பெறத் தான். செய்த வேலைக்கு கூலி


சிட்டுக்குருவி
அக் 17, 2025 22:52

தமிழ்நாட்டில் குற்றங்கள் அதிகரிப்புக்கு காவல்துறையில் நேர்மைஇன்மையே காரணம் .குற்றங்களின் தன்மையறிந்து நடவடிக்கை எடுக்காமல் குற்றவாளிகளை வகைபடுத்தி ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்கள் /வேண்டாதவர்கள் என்று பிரித்துப்பார்த்து நடவடிக்கை எடுப்பதே குற்றங்கள் அதிகரிப்புக்கும் /குற்றங்களுக்கெதிரான நடவடிக்கை இல்லாமைக்கும் காரணம் .இதற்கு இந்த வழக்கு மூலம் உயர்நீதிமன்றம் ஒரு நல்ல முடிவை ஏற்படுத்தி மக்களுக்கு பாதுகாப்பான தமிழகத்தை உருவாக்கிட வழிவகுக்கவேண்டும் .


Madhavan
அக் 17, 2025 22:18

தொலைக் காட்சியில் நாம் பார்த்தவரை ஒரு காவலர் அந்த நபரைப் பிடரியில் அடித்து இழுத்துக் கொண்டு அருகில் உள்ள பார் கவுன்சில் அலுவலகத்தினுள் மற்ற சில தொண்டர்களுடன் செல்கிறார். உள்ளேயும் சென்று அவர்கள் வழக்கறிஞரைத் தாக்கினார்கள் என்பதை உணர முடிகிறது. இந்த சம்பவம் பட்ட பகலில் பார் கவுன்சில் முன்பாக நடந்துள்ளது. அருகே ஒரு பெண் வழக்கறிஞர் உள்பட இரண்டு மூன்று வக்கீல்கள் காணப்படுகிறார்கள். இந்த வீடியோ பதிவையும் அங்கே இருந்த வழக்கறிஞர்களையும் கனம் கோர்ட்டார் அவர்கள் நம்பத் தகுந்த சாட்சிகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.


Krishna
அக் 17, 2025 22:18

Why Slept for Long in Such Grave Goonda Offences by ?


சமீபத்திய செய்தி