உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓய்வூதியரா, கார் பந்தயமா எது முக்கியம்: அண்ணாமலை கேள்வி

ஓய்வூதியரா, கார் பந்தயமா எது முக்கியம்: அண்ணாமலை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:'போக்குவரத்து கழகங்களில் ஓய்வுபெற்றவர்களின் ஓய்வூதியத்தை முறைப்படுத்தி, அகவிலைப்படி உயர்வு, ஓய்வுகால பண பயன்களை, தமிழக அரசு உடனே வழங்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு, 102 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு வழங்காமல், அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. 18 மாதங்களாக ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு கால பண பலனையும் வழங்காமல் இருப்பதாக தெரிகிறது.கடந்த எட்டு ஆண்டுகளில் அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள், 93,000 பேர் உள்ளனர். இவர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாததுடன், ஓய்வூதியம் முறைப்படுத்தவில்லை. பல முறை அரசிடம் கோரிக்கை விடுத்தும் 2022 செப்., மாதம் உயர் நீதிமன்றமே அகவிலைப்படி உயர்வு வழங்கக்கூறி தீர்ப்பளித்த பின்பும், தி.மு.க., அரசு வழங்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.ஓய்வூதியதாரர்கள், பலமுறை அரசின் கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்தியுள்ளனர். அரசு துறைகளில் பல ஆண்டுகள் சேவை செய்து ஓய்வுபெற்றவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நிதி ஒதுக்காமல், கார் பந்தயம் போன்ற அனாவசிய செலவுகளுக்கு, அரசு அதிக நிதி ஒதுக்கி கொண்டிருக்கிறது.பொதுமக்களின் வரி பணம், அவர்களுக்கான சேவைகளுக்கே தவிர, தி.மு.க.,வினரின் கேளிக்கைக்கு அல்ல. உடனே, அரசு போக்குவரத்து கழகங்களில் ஓய்வுபெற்றவர்களின் ஓய்வூதியத்தை முறைப்படுத்தி அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு, ஓய்வுகால பண பயன்கள் ஆகியவற்றை உடனே நிறைவேற்ற வேண்டும்.பொங்கல் பண்டிகை வரை இழுத்து, மீண்டும் வழக்கம் போல் போராட்டத்தில் ஈடுபடும் சூழலுக்கு ஊழியர்களை தள்ள வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Raja
ஆக 12, 2024 01:39

இவருக்கு ஒரே எதிர்ப்பு அதான் கண்ணைமூடிக்கொண்டு திமுக எதிர்ப்பு இது தான் ஒரே குறிக்கோள்.... இதே உபி யிலேயோ ம பி லே யோ நடந்தால் அதுக்கு ஒரு முட்டுக்கொடுப்பார்.....தவறை சுட்டிக்காட்டலாம் ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் நடந்தால் அதுக்கு ஒரு வேறு மாதிரியான பல்லு படாமல் ஒரு கருத்து தெரிவிப்பார்.... அங்கு ஒரு கண்ணு இங்கு சுண்ணாம்பு...எல்லாத்திலயும் பாரபட்சம் இல்லாமல் தெரிவித்தால் ஆதரவு உண்டு


venugopal s
ஆக 10, 2024 15:01

உங்கள் பாஜக ஆட்சியில் உள்ள உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் இதே கார் பந்தயம் கடந்த ஆண்டு நடந்தது இவருக்கு தெரியாதா? அப்போது உ பி முதல்வர் உங்கள் நண்பர் யோகி ஆதித்யநாத்திடம் இதே கேள்வியை ஏன் கேட்கவில்லை?


DHANA K
ஆக 10, 2024 12:57

போக்குவரத்து தொழிலாளி ஒய்வு பெற்று அவர்களுடைய பி எப் பணம் கூட கிடைக்கவில்லை என்பதே உண்மை


P.Sekaran
ஆக 10, 2024 10:40

உச்ச நீதி மன்றம் மகாராஷ்டிர அரசை கேட்ட கேள்விதான் இந்த திராவிட மாடல் ஆட்சிக்கும் பொருந்தும். மகளிர் உரிமைத் தொகையும், மகளிருக்கு இலவச பேருந்தும் வழங்கும் அரசு. இந்த மாதிரி முறையான செலவு செய்யாது. நீதிமன்றத்திற்கு போனாலும் நடக்காது. இவர்கள் ஊழல் செய்ய ஏதுவான விளம்பரமான செலவுகளை செய்து பேரை பெயர்த்து எடுக்கத்தான் செலவு செய்வார்கள். மானங்கெட்ட அரசு


pmsamy
ஆக 10, 2024 10:17

அண்ணாமலைக்கு எந்த கேள்வியும் கேட்க தகுதி இல்லை


ஆரூர் ரங்
ஆக 10, 2024 10:32

வாக்கிங் போட்டி நடத்தினா விடியல் ஜெயிப்பார்.


RaajaRaja Cholan
ஆக 10, 2024 11:04

வந்துட்டாரு திராவிட கூட்டம் , யாருக்கு தகுதி இருக்கு இல்லை என்று சான்று அளிக்க


மீனாராவ்
ஆக 10, 2024 09:34

ஒரு வெங்கலத்துக்காக 6 பேரை சுவிட்சர்லாந்து அனுப்பி டிரெய்னிங் குடுத்து புரட்சி பண்ணியது தெரியாது போலிருக்கு.


ஹரிராவ்
ஆக 10, 2024 09:32

பந்தயம் நடத்தலேன்னா ஓய்வூதியம்.கிடைச்சுருமா? அபத்த கேள்விகளுக்கு ஐ.பி.எஸ் படிச்சிட்டு ஒருத்தர்.


vbs manian
ஆக 10, 2024 08:58

ரோம் நீரோ மன்னன் ஞாபகம் வருகிறது.


Svs Yaadum oore
ஆக 10, 2024 07:28

பொதுமக்களின் வரி பணம், அவர்களுக்கான சேவைகளுக்கே தவிர, தி.மு.க.,வினரின் கேளிக்கைக்கு அல்ல என்று அறிக்கை ....வெத்து பெத்துக்காக இந்த பார்முலா4 கார் பந்தயம் விடியல் திராவிடம் நடத்தறாங்க ....இதுதான் சமூக நீதி ....


Senthoora
ஆக 11, 2024 08:17

கார் பந்தயம் நடத்துவது பலநாடுகளில், அன்னிய செலாவணியை கொண்டுவர, ஊக்குவிக்கத்தான், பொது மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படுவது இல்லை. வரிப்பணத்தை போட்டு அதிக இலாபம் நடத்துவதுதான், டெனிஸ்,உதைபந்தாட்டம் போல தான் கார்பந்தயம். பல வெளிநாட்டவர்கள் வருவார்கள். விளம்பரத்தில் வரிப்பணம் வரும்.


VENKATASUBRAMANIAN
ஆக 10, 2024 07:23

First look into internal long pending problem. Boosting economy there are so many ways . Is it important now?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை