வாசகர்கள் கருத்துகள் ( 16 )
முதல்வர் பேசுவதை நாங்க சீரியசாக எடுத்து கொள்வதில்லை.அந்த நேர ஜோக். அவ்வளவு தான் அவரும் மறந்திடுவார். நாமும் மறந்துடனும்
குண்டர்களை உருவாக்கும் திராவிட முன்னேற்ற தனக்கு தானெ உதவி கழகத்தில் அச்சு பரிதி த வ கா கட்சி. இப்போதே கட்சியை பொறுப்பு தலைவர்களிடம் சுங்கம் வசூலிக்கும் கட்சியை பிற்காலத்தில் கோடிகளில் புரளும். நல்ல வியாபாரம் சினிமாவைவிட மூலதனமில்லாமல் வசூல் ராஜா வாகி வியாபாரம் நடக்குது.
மற்றவர்களை விட இவரை மக்கள் நம்ப காரணங்கள் வேண்டாமா ? மற்ற கட்சிகள் வேண்டாம் என்று விஜய்யிடம் மக்கள் வருவதற்கு இவரிடம் என்ன சிறப்பு தகுதிகள் உள்ளன ? சினிமாவில் க்ளைமாக்ஸில் வசனம் பேசுவது போன்று விஜய் பேசுகிறார். இதுவரைக்கும் ஒரு பிரஸ் மீட் வைத்திருக்கிறாரா ? புள்ளிவிவரத்தோடு ஆட்சியில் இருப்பவர்களை ஒப்பீடு செய்து விமர்சித்து பேசும் திறன் இருக்கா ? குறைந்த பட்சம் இந்தியா விடுதலை அடைந்த காலம்தொட்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் அரசியல் சரித்திரம் இவருக்கு தெரியுமா ? தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களின் பொருளாதார பலம் பற்றிய அடிப்படை ஞானம் இவருக்கு இருக்க வேண்டாமா ? தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மேலும் வளர என்ன செய்யவேண்டும் என்று எங்காவது பேசியிருக்கிறாரா ? சமத்துவம், எல்லோருக்கும் எல்லாம் என்று எல்லோரும் சொல்வதைதான் இவரும் சொல்கிறார். ஆனால் ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்று சொல்கிறார், அதை நடத்தி அதன் முடிவுகளை வைத்து தான் என்னசெய்வேன் என்று எங்காவது சொல்லியிருக்கிறாரா ? ஜாதிவாரி பிரதிநித்துவம் , ஜாதிவாரி திட்டங்கள், ஜாதிவாரி வேலை வாய்ப்பு என்று பேசினால் சமத்துவம் அடிபட்டுபோய்விடுமே ?இவர் ஒன்றுக்கொன்று முரணாக பேசுகிறாரே ? மத்திய அரசை திமுக எதிர்த்தாலும் , திமுகவை மத்திய அரசு கடுமையாக பேசினாலும் அவர்கள் இருவரும் மறைமுக கூட்டணி என்று சொல்கிறார். இவர் திமுகவை எதிர்க்கிறாரே , திமுகவும் இவரும் மறைமுகக்கூட்டணி என்று ஏன் சொல்லக்கூடாது. விஜய் கட்சி ஆரம்பிச்சு இரண்டாவது ஆண்டில் இருக்கிறார். இதுவரைக்கும் மாவட்ட அளவில் பொதுக்கூட்டங்கள் நடக்கவில்லை. என்ன காரணம் என்பது அவரை இயக்கும் அரசியல் இயக்குநர்களுக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் தனது கட்சி நிர்வாகிகளை , தெருத்தெருவா , வீடுவீடா போய் தங்கள் கட்சி பத்தி பேசுங்க அப்படிங்கிறார் , அதை கேட்டு அவங்களும் விசிலடித்த்து கைதட்டுகின்றனர். விஜயை நம்பி வரும் இளைஞர்கள் பாவம் ஏற்கெனெவே சினிமாவின் மூலம் அவர்கள் எதிர்காலத்தை விஜயே வீணடித்துவிட்டார். இப்போது தங்கள் எதிர்காலத்தை விஜயிடம் அடகு வைத்து தங்கள் வாழ்க்கையையே அந்த இளைஞர்கள் தொலைக்கிறார்கள். தற்போது கட்சியில் சிறார் அணி என்று ஒன்றையும் ஆரம்பித்துவிட்டார். இதன்மூலம் ஒட்டுமொத்த இளைஞர் சக்தியையே பாழ்படுத்த தயாராகிவிட்டார். காமராஜர் கால் படாத கிராமமே இல்லை என்று சொல்வார்கள். அதனால் தான் அவர் இன்றுவரை போற்றப்படுகிறார். அந்த மனிதரையே தோற்கடித்துவிட்டார்கள். மக்கள் எதிர்பார்ப்பது அறிவில் சிறந்த, ஆற்றல் வாய்ந்த , ஆளுமை மிக்க , பணத்தின் மீது கொஞ்சமும் பற்றுவைக்காத பொதுவாழ்வில் தூய்மையான ஒரு தலைவனின் நேர்மையான ஆட்சி விஜய்யால் அப்படிப்பட்ட தியாகசீலர் போன்று அரசியலில் இருக்கமுடியுமா ? விஜய் , அதை முதலில் மக்களிடம் நிரூபிப்பாரா ?
தவெ க ஓரு எறும்பு. திமுக, அதிமுக யானை போன்றவை. எனவே எறும்பு யானையுடன் போட்டி என்பது கற்பனையில் தான் நடக்கும். ஆனாலும் இபிஎஸ் கூட்டணி எதிர்பார்க்கிறார் போல் இருக்கிறது. அதனால் தான் பதிலில் சமாளிக்கிறார்.
தொண்டர்களா அவர்கள் இவன் கிட்ட வந்த ஏதாச்சும் பதவி அதன் மூலம் துட்டு பாக்கலாம் எனக்கு என்னமோ இது சரியாய் படலை
தொண்டர்களை உற்சாக படுத்த சரக்கு மட்டும் போதுமே. பேச்சு எதற்கு? திமுக அப்படித்தான் செய்கிறது,. சரக்கு கொடுத்து குடிக்கவைத்து அவர்கள் தொண்டர்களை உற்சாக படுத்துகிறது.
அப்படியே காதல்ல தோல்வி அடைந்தவர்கள் தற்கொலை செய்கிறார்கள் அதனால் காதலை ஒழித்து விடுங்கள் கடன் வாங்கி கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்வதால் கடன் கொடுப்பதை ஒழித்து விடுங்கள் நீங்களும் உங்க வாதமும் பக்க வாதம் தான்
நீட்டை ஒழிக்கும் இரகசியம் அறிந்தவர்கள் திமுக கூட்டணியில் உள்ளார்கள். வேறு யாரும் அல்ல காங்கிரஸ் தான். உலக மகா பொருளாதார மேதை மாண்புமிகு மதிப்பிற்குரிய திரு.ப.சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் எம்பி மாண்புமிகு மதிப்பிற்குரிய திரு.கார்த்தி அவர்களின் தயார் மாண்புமிகு மதிப்பிற்குரிய திருமதி.நளினி சிதம்பரம் அவர்கள் தான் நீட் வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வாதாடி நீட் கொண்டு வந்தார்கள். ஆகவே துணை முதலமைச்சர் மாண்புமிகு மதிப்பிற்குரிய திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு மதிப்பிற்குரிய திருமதி.நளினி சிதம்பரம் அவர்கள் இடம் நீட் ஒழிக்கும் இரகசியம் கேட்டு வரலாம். ஆனால் தெரிந்தோ தெரியாமலோ காங்கிரஸ் திமுக கூட்டணி செய்த நல்ல காரியம் இந்த நீட் ஜிஎஸ்டி ஆதார் கார்டு எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரம் போன்றவை. இவைகள் எல்லாம் வர காரணமாக இருந்து இன்றைக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தவும் நாட்டை வளர்ச்சி பாதை நோக்கி செல்லவும் உதவிய காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு நன்றி சொல்ல வேண்டும்.
அதே போல பிளஸ் டூ, SSLC தேர்வுகளுக்கு பயந்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர்களையும் எண்ணிப் பாருங்கள். ஆதலால் அத்தேர்வுகளையும் ஒழித்துவிடுங்கள்.
வேலை இல்லாமால் தற்கொலை பண்ணிக்கிறாங்க அதனால வேலைஏ வேணாம் மாசம் இவ்ளோன்னு படிச்ச படிக்காதவங்களுக்கு 25 மேல உள்ளவர்களுக்கு பிரிச்சு கொடுத்துடுங்க நீங்க அடிக்கற கொள்ளையள ஜென்மத்துக்கும் நீங்கதான் முதல்வர்
உங்க ஆட்சில கூட தான் இறந்தார்கள், அதுக்கு, டெல்லி போய்ட்டுவந்த மூளை குழம்பிடும் போல.