உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு தேர்வு கண்காணிப்பாளருக்கு லேப்டாப்பில் என்ன வேலை: தேர்வு பணியில் இருந்து விடுவிப்பு

அரசு தேர்வு கண்காணிப்பாளருக்கு லேப்டாப்பில் என்ன வேலை: தேர்வு பணியில் இருந்து விடுவிப்பு

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மணலூர் தனியார் பள்ளியில் பொது தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தலைமையாசிரியடம் இருந்து லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் தேர்வு பணியில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.சிவகங்கை மாவட்டத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் 83 தேர்வு மையங்ளில் 7234 மாணவர்களும் , 8829 மாணவிகளும் , 174 தனி தேர்வாளர்களும் தேர்வு எழுதுகின்றனர். 10 பறக்கும் படையினர் 83 முதன்மை கண்காணிப்பாளர்கள், 83 துறை அலுவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று திருப்புவனம் அருகே மணலூர் தனியார் ( அழகுமலர் மெட்ரிகுலேசன்) பள்ளியில் 11 ம் வகுப்பு ஆங்கில தேர்வு நடந்து கொண்டிருந்த போது தேர்வு மைய கண்காணிப்பாளர் ஜெயக்குமார் (தலைமையாசிரியர், திருப்பாச்சேத்தி அரசு மேல்நிலைப் பள்ளி) தேர்வு எழுதியவர்களை கண்காணிக்காமல் லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். பறக்கும் படை துறை கண்காணிப்பாளர் தனலட்சுமி தலைமையிலான தனிப்படையினர் ஆய்விற்கு வந்த நிலையில் அவரிடம் இருந்து லேப்டாப்பை பறிமுதல் செய்தனர். அவரை தேர்வு பணியில் இருந்தும் விடுவித்தனர். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை