உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை வரும் முதல்வரிடம் என்ன பேசணும்?: கட்சியினருக்கு பாடம் எடுத்த செந்தில் பாலாஜி

கோவை வரும் முதல்வரிடம் என்ன பேசணும்?: கட்சியினருக்கு பாடம் எடுத்த செந்தில் பாலாஜி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவை வரும் முதல்வர் ஸ்டாலின், ஹோட்டல் ஒன்றில் நடத்த திட்டமிட்டுள்ள கூட்டத்தில், தி.மு.க., நிர்வாகிகள் 200 பேரிடம் ஆலோசிக்க உள்ளார். அப்போது, என்ன பேச வேண்டுமென, கட்சியினருக்கு பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுரை வழங்கினார்.வரும் நவ., 5 மற்றும் 6ம் தேதிகளில் கோவை வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அப்போது கட்சி நிர்வாகிகளை சந்தித்து அவர்களுடைய கருத்தை அறிய வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் விருப்பப்பட்டார். இதையடுத்து, நிர்வாகிகளில் 200 பேரை சந்திக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அவிநாசி ரோட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றில், நிர்வாகிகளை சந்தித்து, முதல்வர் அறிவுரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இச்சூழலில், கோவை வந்த பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாநகர், தெற்கு, வடக்கு மாவட்டம் என கட்சி நிர்வாகிகளை வைத்து மூன்று கூட்டங்களை, தனித்தனியாக நடத்தினார். அப்போது, கட்சியினரிடம் நிறைய விஷயங்களை செந்தில் பாலாஜி பகிர்ந்து கொண்டார்.கூட்டத்தில் செந்தில் பாலாஜி பேசியது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:லோக்சபா தேர்தலில் சரியாக பணிபுரியாத, 'பூத்' ஏஜென்டுகளை உடனடியாக மாற்ற வேண்டும். கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகள் மட்டுமின்றி, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.வார்டு செயலர்கள், கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். நான் உட்பட கட்சி நிர்வாகிகள் யார் தவறு செய்தாலும், அதை முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.கடந்த லோக்சபா தேர்தலில், ஏராளமான பூத்களில், தி.மு.க., பின்னடைவை சந்தித்துள்ளது; சில பூத்களில் மூன்றாமிடத்துக்குச் சென்றுள்ளது. இதற்கு, கட்சியினர் உள்ளடி வேலை செய்ததே காரணம். அவர்கள் மீது கட்சி தலைமை விரைவில் நடவடிக்கை எடுக்கும். கோவையில், கட்சியினரிடம் முதல்வர் நேரடியாக பேசும்போது, லோக்சபா தேர்தலை ஒட்டி நடந்த விஷயங்கள் அனைத்தையும் மறைக்காமல் சொல்ல வேண்டும்.நிர்வாகிகள் கூட்டத்தில் செந்தில் பாலாஜி இப்படி பேசியதை அடுத்து, லோக்சபா தேர்தலில் நடந்தது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் கட்சி நிர்வாகிகள் வெளிப்படையாக பேச உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Lion Drsekar
அக் 27, 2024 20:53

சாராயக்கடைகளில் மாமூல் அமோகமாக நடந்து கொண்டு இருக்கிறது.


nv
அக் 27, 2024 12:15

நம்முடைய நீதி துறையின் அவலங்களை என்ன சொல்வது.. குழந்தைக்கு கூட தெரியும் இவர் திருடன் என்று ஆனால் நம்ம நீதிபதிகள்??


வைகுண்டேஸ்வரன்
அக் 27, 2024 09:07

தளபதி யின் முதன்மைத் தளபதி செந்தில் பாலாஜி தான். தேர்தல் வீயூகம் அமைப்பதிலும், தொண்டர்களை பணிகளில் முடுக்கி விடுவதிலும் பிஸ்தா.


hari
அக் 27, 2024 13:22

பாதாம், பிஸ்தா , முந்திரிகொட்டை ,,வைகுண்டம்


jayvee
அக் 27, 2024 08:46

கேடிவாலுக்கு நிபந்தனை விதிக்க துணிந்த உச்ச நீதிமன்றம் இவருக்கு மட்டும் ஏன் சலுகை கொடுத்தது? குறைந்தபட்சம் அமைச்சர்பதவி கொடுக்கக்கூடாது என்று சொல்ல அதிகாரம் இல்லையா இல்லை ..இல்லையா


Pon Thiru
அக் 27, 2024 08:31

அப்பாடா ..ஆபத்பாந்தவன் வந்துவிட்டார் . நான் கூட கொஞ்சம் ஷாக்காயிட்டேன் .. எங்கடா போன மழைக்கு ஆனா மாதிரி இனி கோவையில் நடக்க கூடாதுன்னு பேச நம்ம அதிக அனுபவமுள்ள பொறுப்பு அமைச்சரே கோதாவுல இறக்கிட்ட்டாரேன்னு ... அதற்க்கு எல்லாம் வாய்ப்பே இல்லை என காட்டுகிறார்களா. ? பீதியும் ஒருத்தர் நம்பிட்டு இருக்கார் .. அவர்தான் நம்ம முதியவர் மற்றும் இளையவர் ..


Murugesan
அக் 27, 2024 08:11

இது தான் நாட்டுக்கு முக்கியமான செய்தியா அயோக்கியர்களின் போட்டா தயவு செய்து போட வேண்டாம், திருட்டு கூட்டம் தலைவனிடம் என்ன பேசும்


VENKATASUBRAMANIAN
அக் 27, 2024 08:08

உண்மையான தொண்டன் செந்தில் பாலாஜி.


Kasimani Baskaran
அக் 27, 2024 07:05

உள்ளடி வேலைகளால் வாக்கு குறைந்தது என்று சொல்வதைப்போல வேறு காமடி இருக்க முடியாது. சிறுபான்மையினர் கூட திமுகவுக்கு ஓட்டுப்போட தயாரில்லை.


Venkateswaran Rajaram
அக் 27, 2024 06:41

என்ன பாடம், நான் இல்லாத பொழுது வசூலான தொகை எவ்வளவு இன்னும் யார் யார் பாக்கி வைத்துள்ளார்கள் அடுத்து எப்படி எல்லாம் கொள்ளை அடிக்க வேண்டும் யார் யாரிடம் கொள்ளை அடிக்க வேண்டும் எவ்வாறு கொள்ளையடிக்க வேண்டும் இது தான் பாடம்


Venkateswaran Rajaram
அக் 27, 2024 06:39

தலைவருக்கு நெஞ்சு வலி எல்லாம் போய்விட்டது மக்கள் பணி செய்ய ஆரம்பித்து விட்டார்


சமீபத்திய செய்தி