உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்டாலினின் கடைசி அஸ்திரம்: அண்ணாமலை காட்டம்

ஸ்டாலினின் கடைசி அஸ்திரம்: அண்ணாமலை காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: ''பொங்கல் தொகுப்புக்கு 3000 ரூபாய் கொடுப்பது, மகளிர் உரிமைச் சேவை கொடுத்தல், போன்றவை தான் ஸ்டாலினின் கடைசி அஸ்திரம். ஆனால் வரும் தேர்தலில் மக்கள் தெளிவான முடிவெடுப்பர்.,'' என பா.ஜ., தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.கோவையில் தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பேட்டி: உள்ளாட்சித் துறையில் ஊழல் நடந்திருப்பது சுட்டிக்காட்டி அமலாக்கத்துறை தமிழக டிஜிபிக்கு அக்டோபர் 2025 இல் ஒரு கடிதம் எழுதி இருந்தது. அதில் 150 பேரை குறிப்பிட்டு, வாட்ஸ் அப் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை கொடுத்திருந்தது. அது தொடர்பாக இதுவரை போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. அமலாக்க துறை மறுபடியும் டிசம்பர் 3ம் தேதி ஒரு கடிதத்தை எழுதி உள்ளது. 258 பக்கம் கொண்ட அந்த கடிதத்தில், அமைச்சர் நேரு தொடர்புடைய உள்ளாட்சி நிர்வாகம், குடிநீர் வளங்கள் துறையில் 1020 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதற்கான ஆதாரத்தை இணைத்துள்ளனர்.இன்ஜினியர்களை பணியமர்த்தியதில் ஒரு இன்ஜினியருக்கு 25 முதல் 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சமாக 882 கோடி ரூபாய் முதல் ஊழல் நடந்துள்ளது. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறையில், ஊராட்சி செயலாளர் எழுத்து தேர்வு நடந்துள்ளது. நேற்று முன்தினம் இதற்கான நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டது. இந்தத் துறையின் இணையதளத்தை நேற்று பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் உள்ள குளறுபடிகள் வெளியாகி உள்ளது. உதாரணத்துக்கு கோவையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த பெண் ஒருவர், ஐநுாறு மார்க்கிற்கு 494 மார்க் வாங்கி செலக்ட் ஆகியுள்ளார். 496 மதிப்பெண் வாங்கியவர் தோல்வி அடைந்துள்ளார். எந்த அடிப்படையில் தேர்வு செய்தனர் என்பது யாருக்கும் தெரியாது. கோவை, மதுரை, கரூர் மூன்று மாவட்ட பட்டியலை பகிர்ந்துள்ளோம். இதிலும் கூட லஞ்சம் கை மாறி இருப்பதாக தெரிகிறது. வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியில், இதுவரை 77 லட்சம் பேர் பல்வேறு காரணங்களால் நீக்கப்பட்டுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் 12.5 சதவீதம் நீக்கப்பட்டுள்ளது ஆச்சரியம் மட்டுமல்ல, அதிர்ச்சியும் கூட. கடந்த தேர்தல்களில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டும் கூட, வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்த பணியின் முதல் கட்ட வெற்றி இது. 5.6 கோடி வாக்காளர்கள் தான் இருப்பர்.பொங்கல் தொகுப்புக்கு 3000 ரூபாய் கொடுப்பது, மகளிர் உரிமைச் சேவை கொடுத்தல், போன்றவை தான் முதல்வரது கடைசி அஸ்திரம். ஆனால் வரும் தேர்தலில் மக்கள் தெளிவான முடிவெடுப்பர். அடுத்த தேர்தலை பொறுத்தவரை இப்போதைக்கு நான்கு முனை தேர்தல். தி.மு.க., தே.ஜ., கூட்டணி, விஜய், சீமன் உள்ளனர். கடைசி நேரத்தில் மாறும்.இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

NAGARAJAN
டிச 15, 2025 06:43

நீங்கள் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் பாஜகவில் இணைந்தால், அவர்கள் அனைவருமே உத்தமர்கள் ஆகி விடுவார்களே? அதையும் சொல்லி விடுங்களேன் திரு.அண்ணாமலை அவர்களே. . உங்களின் அதாவது பாஜகவின் அரசியல் அநாகரிகம் உலகறிந்த உண்மை


N.Arumugam
டிச 14, 2025 04:02

மஹாராஷ்ட்ரா, பீஹாரில் சட்டசபை தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் இதே கூத்து நடந்ததை ஏனோ மறந்துவிடுகிறோம். செயல் ஒன்றே ...ஒருவர் செய்தால் உதவி...மற்றவர் செய்தால் இழிசெயல்...


ராமகிருஷ்ணன்
டிச 13, 2025 21:10

பொதுமக்கள் வரிப்பணத்தை புடுங்கி திமுக தனது கட்சிக்கு ஓட்டுக்களாக மாற்றச் செய்யும் இந்த கேடுகெட்ட திட்டம் உடனடியாக நிறுத்த வழக்கு தொடுக்க வேண்டும் இவர்களின் கட்சி ஆட்சிக்கு வர மக்களை வரிகள் போட்டு கொடுமை படுத்தும் திமுக ஆட்சிக்கு வரவே கூடாது.


SUBRAMANIAN P
டிச 13, 2025 15:50

பொங்கலுக்கு 10000 கொடுத்தால்தான் நான் திமுகவுக்கு ஓட்டுபோடுவேன்.. இல்லாங்காட்டி சீமானுக்கு போடுவேன். அல்லாங்காட்டி எவனாவது ஒரு பரதேசிக்கு போடுவேன். அதேபோல எல்லாரும் 10000 கொடுத்தாமட்டும் திமுகவுக்கு போடுங்க..


kanoj ankre, mumbai
டிச 13, 2025 13:04

எதிர் (எதிரி) கட்சியாக இருந்த பொது சட்டை யை கிழித்து கொண்டு 5000 குடுக்க வேண்டும் என உதார் விட்டார். இப்போ 5 ஆண்டுகள் ஆகியும் பணவீக்கம் எங்கோ சென்றாலும் 3000 தானம்


Ramesh Sargam
டிச 13, 2025 12:40

தமிழக மக்கள் உண்மையாகவே புத்திசாலிகள் என்றால், முதல்வர் கொடுக்கும் பணத்தை பெற்றுக்கொண்டு, வரும் தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்து பாஜகவை ஆட்சியில் அமர்த்தவேண்டும். முதல்வர் கொடுப்பது அவர் சொந்தக்காசோ அல்லது கட்சியின் பணமோ இல்லை. அது மக்களின் வரிப்பணம்.


SULLAN
டிச 13, 2025 13:45

பாஜகவிற்கு வோட்டெல்லாம் போடா முடியாது?? வேணும்னா நல்ல வேட்டு வைப்போம் என்கிறார்கள் தமிழக சிங்க பெண்கள்.


vivek
டிச 13, 2025 15:31

சுள்ளான் சொம்பு...தமிழ்.நாடு பெண்கள் திமுக மந்திரிகளை விரட்டி அடிக்கும் வீடியோக்கள் அதிகம்


GoK
டிச 13, 2025 12:29

அண்ணாமலை அவர்களே, தமிழ் நாட்டின் வாக்காளர்கள் சோரம் போனவர்கள். கடந்த 62 ஆண்டுகளாக மாறி மாறி திமுகவுக்கும் அதிமுகவுக்கும் ஒரே குட்டையில் மன்னிக்க சாக்கடையில் ஊறிய மட்டைகள் வாக்களித்து தமிழ்நாட்டை நாசம் செய்ய துணிந்தவர்கள். தமிழ் மொழியை ஒருவழி செய்தவர்கள். ல, ள, ழ வழக்கொழிந்து போயின. தமிழை இன்பத்தேன் என்றவரை ஏசி, தமிழ் காட்டுமிராண்டிகள் மொழி என்றவனுக்கு சிலை செய்த கூட்டம் இங்கிருக்கிறது. என்ன நியாயத்தை நீங்கள் இந்த மாக்களிடமிருந்து பிழை இல்லை உண்மை எதிர் பார்க்கிறீர்கள்? சாராயம், பிரியாணி, சேலை, வேட்டி...இதுதான் இவர்களின் தன்மானத்தின் விலை வாக்கு இலவசம்...தன்மானமே விலைக்கு போனபின் வாக்கு என்ன? ராஜராஜன் கோவில் கட்டினான் கடல் கடந்து தமிழின பெருமையை நாட்டினான்...என்ன செய்தன இந்த ஈனப்பிறவிகள் தமிழினம் இவர்களை தலைமேல் வைத்து ஆடுகிறார்கள் இலவச பிரியாணி, சாராயம், வேட்டி, சேலை ...கொடுத்தால் தன்மானம் விலைக்கு வாக்கு இலவசம்...ச்சீ


Barakat Ali
டிச 13, 2025 12:12

அண்ணாமலை அவர்களே .... போருக்கு வர்றவங்கதான் அஸ்திரம், அம்பு யூஸ் பண்ணுவாங்க ..... நீங்க அட்டைக் கத்தி வீரரைச் சொல்றீங்களே .....


pkgk
டிச 13, 2025 11:58

அண்ணாமலை சார், கோவை மெட்ரோ பிரச்சினையைப் பற்றி நேரடியாக பேசுங்கள். என்ன பிரச்சினை இருக்கிறது என்று கேட்டுத் தெரிந்து, அதை உங்கள் அரசாங்கத்திடம் எடுத்துச் சொல்லி தீர்வு காணுங்கள். மக்களுக்கு இது மிகவும் முக்கியமானது. சிறிய நகரங்களுக்குக் கூட மெட்ரோ வசதி கொண்டு வந்து, அவை அனைத்தும் சர்வதேச தரத்திற்கு சென்றுவிட்டன. அரசியல் பேசுபவர்கள் எப்போதும் மற்றவர்களைப் பற்றி விமர்சிப்பதற்குப் பதிலாக, நீங்கள் நகர வளர்ச்சிக்காக என்ன செய்ய முடியும் என்பதைச் சொல்லுங்கள்.


ஆரூர் ரங்
டிச 13, 2025 12:35

சென்னை மெட்ரோவுக்குச் செல்லும் சாலைகளை குண்டும் குழியுமாக வைத்துக் கொண்டு கோவைக்கு சொகுசு கேட்குதா? ரோடு போடவே காசில்லையாம்.


Anantharaman Srinivasan
டிச 13, 2025 11:48

திராவிடம் என்பது மாயை. விழித்தெழும் வரை திமுக நம்மை ஏமாற்றும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை