உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாலியல் "சார்"களை எப்போது கன்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? இ.பி.எஸ்., கேள்வி

பாலியல் "சார்"களை எப்போது கன்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? இ.பி.எஸ்., கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பாலியல் 'சார்'களை எப்போது கன்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பி உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wa89u6ml&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவரது அறிக்கை: சென்னை தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் 8ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அரசு சேவை இல்லத்திலேயே ஒரு 8ம் வகுப்பு மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என்பது இந்த தி.மு.க., அரசு முற்றிலும் செயலிழந்து நிற்பதையே உணர்த்துகிறது. முதல்வர் ஸ்டாலின் இதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும்.அரசு சேவை இல்லத்தில் உள்ள சிறுமிகளைக் காக்க வேண்டிய காவலாளியே இப்படி ஒரு கொடூர செயலில் ஈடுபட்டிருப்பது, குற்றம் செய்பவர்களுக்கு இந்த ஆட்சி எடுக்கும் நடவடிக்கைகள் மீது துளி கூட பயம் இல்லை என்ற குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையிலேயே உள்ளது. இந்த காவலாளியால் மற்ற சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப் பட்டுள்ளனரா? என்பதை போலீசார் தீர விசாரிக்க வேண்டும்.தமிழகம், டில்லிக்கு Out Of Control-ஆக இருப்பதாக யாரோ எழுதிக் கொடுத்த டயலாக்கைப் பேசும் முதல்வரே, உங்கள் ஆட்சியில் Out Of Control ஆக இருக்கும் பாலியல் 'SIR'-களை எப்போது Control செய்யப் போகிறீர்கள்? காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள மாணவிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள காவலாளி மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ஜெய்ஹிந்த்புரம்
ஜூன் 09, 2025 21:40

பயனிச்சாமி சாரே, நீங்க பொள்ளாச்சி ஜெயராமன் சாரை தானே சொல்றீங்க?


Kasimani Baskaran
ஜூன் 09, 2025 15:37

பாலியல் என்பதை பாலிடால் என்று படித்து விட்டேன். தவறுக்கு வருந்துகிறேன்..


Padmasridharan
ஜூன் 09, 2025 13:55

காவலாளி மட்டுமல்ல, கரை படிந்த காக்கிச் சட்டை போட்ட காவலர்களும் பாலியல் சார்கள்தான் பலவும் வெளிவருவதில்லை ஒரு சிலரை informers ஆக மாற்றி இவர்களுக்கு ஆண் /பெண்களை supply செய்யச்சொல்கிறார்கள்.. தனி மனித உரிமைகளை காவலர்கள் அவமதிப்பதை ஒரு சிலரே தைரியமாக வெளியில் கொண்டுவருகின்றனர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை