வாசகர்கள் கருத்துகள் ( 46 )
தமிழகப்.பெண்கள் அதிருஷ்டசாலிகள். எவன் ஜெயிச்சாலும் பிச்சைத் தொகை கேரண்ட்டி. இன்னும் சீமானும், விஜயும் தான் பாக்கி.
அண்ணாமலை கூறும் கருத்துக்களை யோசிக்கலாம், வரவேற்கலாம். ஜனநாயகம் உள்ள கட்சியில் பல பல மேடை பேச்சாளர்களும் பல விஷயங்களை அளந்து விடுவது சகஜம். போட்டி போட்டுக் கொண்டு மாநிலங்களை முன்னேற்றுவது அரசியல் கட்சிகளின் எண்ணம் இல்லை. மக்கள் உணர்ச்சி பூர்வமாக என்ன நினைக்கிறார்களோ அதை தொடர்ந்து கொடுப்பதிலேயே போட்டி போடுகின்றன. அரசு கொடுக்கும் இந்த பணத்தால் பணவீக்கம் அதிகமாகி பொருட்களின் விலை உயரும், மக்களின் வாழ்க்கை தரம் முன்னேறாது, மாறாது.
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்துக்கு மத்திய பாஜக அரசின் பங்களிப்பு வெறும் ஆறாயிரம் கோடி ரூபாய் தான்,மற்றவை எல்லாம் கடன், மெட்ரோ நிறுவனம் தான் கட்ட வேண்டும். அவர்கள் கட்ட முடியாமல் போகும் பட்சத்தில் மாநில அரசு கட்ட வேண்டும் என்ற உண்மை அண்ணாமலைக்கு தெரியாதா அல்லது வழக்கம் போல் பொய் சொல்கிறாரா?
ஆக திரும்பக் கட்ட முடியாத அளவுக்கு நஷ்டத்தில்தான் இயங்கும் எனும் திட்டத்துக்கு ஏன் வரிப்பணத்தை கொட்ட வேண்டும்?. சென்னை மெட்ரோ 2 திட்டத்தில் 65 சதவீதம் மத்திய நிதி என்பதுதான் உண்மை.
நீங்கள் வாக்குறுதி கொடுக்கும் இலவசத்துக்கு மட்டும் நிதி எங்கிருந்து வரும்? அப்போது மட்டும் மத்திய அரசு கொடுக்குமா ?
அரசு பஸ்களில் பெண்கள் ஓசியில் பயணம் செய்கிறார்கள் ஆனால் இருக்கைகளை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டு டிக்கெட் வாங்கிக்கொண்டு பயணம் செய்யும் ஆண்களுக்கு இடம் கொடுப்பதில்லை. எனவே மகளிருக்கு ஓசி பயணத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது அனைவருக்கும் கட்டணம் இல்லா பயணம் என்று அறிவிக்க வேண்டும்.
2000 போதாது. ஐயாயிரம் வேண்டும் அதுவும் எல்லா கார்டுதாரர்களுக்கும் வேண்டும். தகுதி உள்ளவர்களுக்கு என்று வார்த்தையை பயன்படுத்தக்கூடாது. நீங்கள் ஆட்சிக்கு வந்தால் கரண்ட் யூனிட் பாதியாக குறைக்கப்படும் பால் விலை பாதியாக குறைக்கப்படும் மளிகை சாமான்கள் விலை பாதியாக குறைக்கப்படும். வீட்டு வரி முன்பு இருந்தது போல் குறைக்கப்படும் தண்ணீர் வரி கொள்ளை அடிக்கிறார்கள் தண்ணியே வருவதில்லை எனவே தண்ணீர் வரியை ரத்து செய்வோம். கேஸ் சிலிண்டர் விலை 400 ரூபாய்க்கு கொடுக்கப்படும். மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். நகை அடகு வைத்தவர்களக்கு அரசு செலவில் மீட்டு தரப்படும்..... பெட்ரோல் விலை லிட்டர் 60 ரூபாய் டீசல் லிட்டர் அம்பது ரூபாய்.... இப்படி எல்லாம் அள்ளி விட்டிங்கனா நீங்க ஆட்சிக்கு வரலாம். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக குடும்பம் மந்திரிகள் அடித்து வைத்துள்ள பல லட்சம் கோடிகளை மீட்டு அதை வைத்து உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றலாம். இதயம் உங்கள் அறிக்கையில் சொல்லுங்கள். செய்வீர்களா?
எதுக்கு ? நீங்க வந்து, இப்படி மேலும் வாரிக்கொடுத்து, இன்னும் கஜானா நிலைமையை மோசமாக்கவா ? அதுக்கு தி.மு.க. வே இருந்துவிட்டு போகட்டும் . நீங்கள் வந்தால், அரசுக்கு இரு மடங்கு கூடுதல் கடன் சுமை. ஆகமொத்தம், நீங்களும் ஒரேகுட்டையில் ஊறிய மட்டை. உங்ககிட்டயும் வெறும் காத்துதான் வரும் போல.
பெருகியுள்ள ஜாதிய வச்சு இருக்கும் இந்த மாதிரியானவங்களுக்கு இங்க என்னடா வேலை,
Great finally Dravida Janatha
மகளிருக்கு உரிமை தொகை, இலவச பஸ் பயணம், இலவச மின்சாரம் போன்றவைகள் தேவையற்றவை. திராவிட மாடல் ஆட்சி தவறு செய்கின்றனர் என்றால் பாஜகவுமா ? இது ஏற்புடையதல்ல