உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எப்போது மதுரை வேளாண் பல்கலைக்கழகம் அமைப்பீர்கள்? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

எப்போது மதுரை வேளாண் பல்கலைக்கழகம் அமைப்பீர்கள்? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

சென்னை: எப்போது மதுரை வேளாண் பல்கலைக்கழகம் அமைப்பீர்கள் என்று கூற முதல்வருக்கு திராணி இருக்கிறதா? என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை: முதல்வர் ஸ்டாலின் விளம்பர ஷூட்டிங் செய்யும் நேரத்தில், மதுரை எய்ம்ஸ் கட்டடப் பணிகளைச் சென்று பார்வையிட்டிருந்தால், பணிகள் எவ்வளவு நிறைவு பெற்றிருக்கிறது என்பது தெரிந்திருக்கும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=e6i5tupx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தனது மாநிலத்தில் நிறைவேற்றப்படும் ஒரு முக்கியமான திட்டத்தைச் சென்று பார்வையிடுவதை விட, முதல்வருக்கும், அவரது மகனுக்கும் அமைச்சர்கள் ஏற்பாடு செய்யும் நடனத்தை ரசிப்பதற்குத்தான் நேரமிருக்கிறது என்பதுதான் தமிழகத்தின் சாபக்கேடு.மதுரை எய்ம்ஸ், சொன்ன தேதியில் நிச்சயம் திறக்கப்படும் என்பதில் முதல்வருக்கு சந்தேகம் தேவையில்லை. ஏனென்றால், அது பிரதமர் மோடியின் வாக்குறுதி. https://x.com/annamalai_k/status/1934930088530989339?t=Ws9188cPy-0RGXLbZmDdiw&s=19 ஆனால், முதல்வருக்கு, தனது தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? இதே மதுரையில், வேளாண் பல்கலைக்கழகம் அமைப்பதாக சொல்லி, ஆண்டுகள் நான்கு ஆகின்றன. ஒரு செங்கலைக் கூட இன்னும் எடுத்து வைக்கவில்லை. முதல் செங்கலை நாங்கள் தருகிறோம். எப்போது மதுரை வேளாண் பல்கலைக்கழகம் அமைப்பீர்கள் என்று கூற முதல்வருக்கு திராணி இருக்கிறதா? இவ்வாறு அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

ems
ஜூன் 18, 2025 20:30

தமிழகத்தில் அரசின் கீழ் வரும் பல்கலை கழகங்களுக்கு முறையான நிதி மற்றும் பணியாட்கள், ஆசிரியர்களை நியமிக்க சொல்லுங்க அண்ணாமலை அவர்களே.... புதிய பல்கலை பிறகு தொடங்கலாம்...


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 18, 2025 10:41

ஜி 7 மாநாட்டில் உலகதலைவர் தமிழக முதல்வருக்கு அழைப்பு அனுப்பாததற்கு கனடாவை வன்மையாக கண்டிக்கிறோம் ஸ்டாலின் கலந்துகொள்ளாத மாநாட்டில் ..மோடி எப்படி கலந்து கொள்ளலாம்? ..தமிழன் என்று முறையில் ரத்தம் கொதிக்கவில்லையா அண்ணாமலை? மோடி போகும் நாட்டிலெல்லாம் அந்தத்த நாடுகளின் உயரிய விருதை பெறுகிறார் ..தமிழக முதல்வர் புகழ் தான்செனியாவரை பரவிக்கிடக்கிறது..ஆனால் இன்னும் தமிழக முதல்வருக்கு ஆங்கில இலக்கியத்திற்கான நோபல் பரிசுகூட கிடைக்கவில்லை ..


Barakat Ali
ஜூன் 18, 2025 08:49

துக்ளக்கார் மதுரைன்னா எய்ம்ஸ் தவிர வேற எதைப்பத்தியும் பேச மாட்டாரு ......


புரொடஸ்டர்
ஜூன் 18, 2025 08:46

எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தை பாஜக நிறைவேற்றிய பிறகு வேளாண்மை பல்கலைக்கழகம் திட்டம் நிறைவேறும் டுபாக்கூர் அண்ணாமலை.


pmsamy
ஜூன் 18, 2025 07:35

ஒன்றிய அரச ஒரு கேள்வியும் கேட்க மாட்டிங்க எந்த நாட்டில் இருக்கீங்க


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 18, 2025 08:37

நீங்களாவது ஒரே ஒரு ஊழல் குற்றசாட்டை கண்டுபிடித்து பிரதமர் சொல்லுங்களேன் ..நிரூபியுங்களேன் .. அவர் முதல்வராக இருந்தபோதும் , பிரதமராக இருந்தபோதும் காய் சுத்தமானவர் .. அவரது அமைச்சரையும் அப்படியே ... பிஜேபி ஆளும் மாநில முதல்வர்கள் மீது ஒரே ஒரு ஊழல் குற்றசாட்டை சொல்லுங்களேன் ,,நிரூபியுங்களேன்


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 18, 2025 07:06

மதுரையில் மது ஆலைகள் திறப்பீர்களா என்று கேளுங்கள் அண்ணாமலை உடனே உங்கள் கோரிக்கை நிறைவேற்ற படும் ... விவசாயத்திற்கும் கழக ஆட்சிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா ? பூச்சிமருந்து தெளிப்பதில் கூட ஊழல் செய்தவர்கள் அல்லவா ... ரஞ்சித் சிங் சர்காரியாவின் அறிக்கையை கண்டுபிடிப்புகளை படியுங்கள் அண்ணாமலை... கழகத்திற்கு குடி ஆர்வலர்களும் அரசு ஊழியர்களும் போதும் ...


அப்பாவி
ஜூன் 17, 2025 21:59

எய்ம்ஸ் வாங்கலியோ எய்ம்ஸ்...


Priyan Vadanad
ஜூன் 18, 2025 06:01

இல்லாத பொருளை ஏனய்யா கூவி கூவி விற்க பார்க்கிறீர்? அப்பாவி என்று பெயர் வைத்துக்கொண்டு பண்ணுகிற சேட்டையை பாரு.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 18, 2025 08:32

மத்திய அரசு, ஜப்பானின் ஜெய்க்கா கூட்டுறவு முகமை நிதியின் கீழ் மதுரை தோப்பூரில் கட்டப்பட்டு வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்திற்கான வகுப்பறை கட்டடம், விடுதி கட்டட முதற்கட்ட பணிகள் திட்டமிட்டபடி, 2026 ஜனவரியில் முடிவடையும் என எய்ம்ஸ் நிர்வாகம், எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது..இதையும் படியுங்கள் உபி


Murugesan
ஜூன் 17, 2025 21:31

தமிழகத்தை சீரழித்த நயவஞ்சக கொள்ளைக்கார திராவிட சுயநலவாதி கட்டுமரம் குடும்ப தத்தி திருட்டு வாரிசுகளின் அரசியல் வாழ்கையை அழித்தால் தான் தமிழகம் சிறப்பாக இருக்கும்


Ramesh Sargam
ஜூன் 17, 2025 21:30

அப்படி அவர்கள் அமைத்தாலும் அதற்கும் கலைஞர் கருணாநிதி வேளாண் பல்கலைக்கழகம் என்று பெயர் வைப்பார்கள். உங்களுக்கு சம்மதமா? சம்மதம் என்றால் உடனே அமைக்க ஆவண செய்வோம்.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 18, 2025 07:07

அதில் இசை வேளாண்மை சேர்க்கப்படுமா ?


ஜெய்ஹிந்த்புரம்
ஜூன் 17, 2025 21:30

புது கட்சி வேலை எப்படி போகுது?


சமீபத்திய செய்தி