உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  காசாவுக்கு குரல் தந்த நடிகர்கள் எங்கே?

 காசாவுக்கு குரல் தந்த நடிகர்கள் எங்கே?

டில்லி, செங்கோட்டை அருகில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில், 13 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்; 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காசாவிற்காக சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய நடிகர்கள் சத்யராஜ், பிரகாஷ் ராஜ் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர், கம்யூனிஸ்ட், வி.சி., உள்ளிட்ட கட்சியினர், இந்தியாவில் நடக்கும் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக ஏன் குரல் கொடுக்கவில்லை? எங்கே போனார்கள்? குறிப்பிட்ட சமுதாயத்தினரின் ஓட்டுக்காக, உலகின் மற்ற இடங்களில் நடக்கும் தாக்குதலை கண்டித்து, தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவோர், இந்தியாவில் நடக்கும் பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுப்பதில்லை. தேசப்பற்றும், தெய்வீக பற்றும் உள்ளவர்கள், கண்டிக்காமல் இருக்க மாட்டார்கள். பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும், எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் செய்தாலும் தவறுதான். பிரபு, தலைவர், பாரத் ஹிந்து முன்னணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை