உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜயகாந்துக்கு கூடிய கூட்டம் எங்கே போனது?

விஜயகாந்துக்கு கூடிய கூட்டம் எங்கே போனது?

பா.ஜ., ஆளும் கட்சியாக இல்லாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில், மத்திய அரசு தொடர்ந்து பாரபட்சம் காட்டி வருகிறது. இதனால், தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், வன்கொடுமை சட்டம் அமலாக்கம் தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் சிலர் சரியான புரிதல் இல்லாமல் உள்ளனர்; பல சந்தர்ப்பங்களில், சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகின்றனர். அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்க்கு வரும் கூட்டம், ஓட்டுகளாக மாறுமா என்பது மிகப்பெரிய கேள்வி. வெற்றிகரமான நடிகரை பார்க்க கூட்டம் கூடுவது இயல்பு. விஜயகாந்த், கமல் போன்றோர் கட்சி ஆரம்பித்தபோது கூடிய கூட்டம், காலப்போக்கில் எங்கே போனது என்பதே தெரியாமல் போய்விட்டது. வரும் 2026 தேர்தல் முடிவுக்கு பிறகுதான் விஜயின் பலம் தெரியும். சண்முகம், மாநில செயலர், மா.கம்யூ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !