உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது உங்கள் இடம்: பதில் எங்கே மிஸ்டர் ஸ்டாலின்?

இது உங்கள் இடம்: பதில் எங்கே மிஸ்டர் ஸ்டாலின்?

பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளா மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ -- மெயில்' கடிதம்: 'சொன்னதைச் செய்யும் நம் முதல்வர்' கீழே உள்ளவற்றைச் செய்தாரா?தமிழகத்தில் இளம் விதவைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு மது தான் காரணம். எனவே, தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று, 2016லேயே கூறினார். செய்தாரா?'நீட்' தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார். ஆச்சா?'சம வேலைக்கு சம ஊதியம்' என, இடைநிலை ஆசிரியர்களுக்கு வாக்கு கொடுத்தார். நடந்ததா?பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம் என்று கூறினார். அமல்படுத்தினாரா?அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம், 1000 ரூபாய் என்றார். எல்லாருக்குமா கொடுக்கின்றனர்?'விவசாயிகளுக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படும். ஒரு டன் கரும்புக்கு ஆதார விலையாக 4,000 ரூபாய் வழங்கப்படும்' என்றார். செய்தாரா?பதில் எங்கே, மிஸ்டர் ஸ்டாலின்?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ