உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிக மழைப்பொழிவு எங்கே? 13 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை

அதிக மழைப்பொழிவு எங்கே? 13 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழக வடமாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்துள்ளது. வங்கக்கடலில் உருவான 'பெஞ்சல்' புயல் நவ., 30 இரவு புதுச்சேரி அருகே கரையை கடந்தது. பின் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. கடந்த 24 மணி நேரத்தில், பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:சோளிங்கர்- 103ஏற்காடு- 103முசிறி- 82பொன்னணியாறு அணை- 72.2வத்தளை அணைக்கட்டு- 65.6துறையூர்- 63காவேரிப்பாக்கம்- 61.4சிறுகுடி- 60.2மணப்பாறை- 56.6உளுந்தூர்பேட்டை- 52மங்களபுரம்- 44.8கொப்பம்பட்டி- 40புதுச்சத்திரம்- 22எருமப்பட்டி- 15நாமக்கல்- 14திருச்செங்கோடு- 12.5சேந்தமங்கலம்- 11திருச்சி- 28.6கோவில்பட்டி- 27.2சமயபுரம்- 9நாமக்கல்- 14திருச்செங்கோடு- 12.5சேந்தமங்கலம்- 11சேலம்- 94.3ஏற்காடு- 98.2வாழப்பாடி- 27ஆத்தூர்- 59வீரகனூர்- 16எடப்பாடி- 21மேட்டூர்- 26.8ஓமலூர்- 47அவலாஞ்சி- 30கோத்தகிரி- 10கொடநாடு- 7கீழ்கோத்தகிரி- 22கூடலூர் - 54தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோவை ஆகிய 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் மேக மூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Parthasarathy Srinivasaraghavan
டிச 03, 2024 09:36

இந்த புகைப்படம் கொல்கட்டவிலெடுத்தது பொல் உள்ளது.


MARI KUMAR
டிச 03, 2024 08:41

அதிக மழைப்பொழிவு இருந்தது பிரச்சனை இல்லை. மக்கள் பாதிக்காமல் அரசு மீட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்


சமீபத்திய செய்தி